எனக்கு விதிக்கபட்டது
ஒரே ஒரு வாழ்கைதான் - இருந்தும்
உன்னோடு பகிர்ந்து கொள்ளவே
ஆசைப்படுகிறேன்.
எனக்கு விதிக்கபட்டது
ஒரே ஒரு வாழ்கைதான் - இருந்தும்
உன்னோடு பகிர்ந்து கொள்ளவே
ஆசைப்படுகிறேன்.


புல்வெளியில் எப்போதும் இருக்கும் அமைதி
மழைக்குமுன் எப்போதும் இருக்கும் வாசனை
...
என் புன்னகையில் எப்போதும் இருக்கும் நீ

தேசிகன் -தொப்பிகளின்மேல் திராக்காதல் கொண்ட எங்களின் எல்லா மொழிகளிலும் பேசக்கூடிய குழுத்தலைவன். பிரஜேஷ் - ஆரம்பத்திலிருந்தே மிகுந்தார்வத்துடன் எல்லா முன்னேற்பாடுகளும் செய்தவன்,மிகப்பெரிய விடயங்களையும் மிகச்சாதாரணமாக சொல்லுபவன். கௌரி - எளிதில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவன், ஆண்டு அனுபிவத்த அனுபவஸ்த்தனைப்போல பேசுபவன். சுஷில்,பிந்தியா - புதிதாய் திருமணமான இளம் ஜோடி, எந்தவிதமான வித்தியாசம் பாராட்டாமல் எங்களோடு கலகலப்பாக பயணித்தார்கள் (மற்றும் அவர்களுக்கே உரிய ..விஷயங்களோடும்). ரஞ்சித் - திருமணமான கலகலப்பான பேர்விழி, நிறைய நகைச்சுவை துணுக்கூகளோடு கூட்டதையே கலகலப்பாக்கிகொண்டு வந்தார். சிவா - பார்பதற்கு முரடாக பழகுவதற்கு இனிமையானவன். வினாயக் - சிங்கபூரிலிருந்து வந்து எங்களோடு கலந்துகொண்ட சிவாவின் நண்பன் மற்றும் நான்.
"முதல் பகல்". காலை அனைவரும் கோலாலம்பூர் "ஹோடெல் மலயா" முன் கூடினோம். இங்கிருந்துதான் எங்கள் பேருந்து புறப்படுவதாக ஏற்ப்பாடு. இந்தியர்களுக்கே உரித்தான் வழக்கதில், பேருந்து புறப்படும்போது நிறுத்த சொல்லிவிட்டு காலைவுணவுக்காக அலைந்தோம் அன்று விடுமுறைதினம் ஆதலால் கடைகள் எல்லாம் முடியிருந்தது.பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு ஒருக்கடை கண்டுப்பிடுத்து, தமாதமானதால் கிடைத்த ரொட்டியை "பொங்கூஷ்" (பார்சல்) செய்துக்கொண்டு புறப்பட்டோம்.
எங்களோடு இந்தியாவிலிருந்து வந்து இங்கு வேலைச்செய்யும் மற்றோருக்குழு, சில சினர்கள், மற்றும் பிறத்தேசத்தினரும் பேருந்தில் இருந்தனர். பயனநேரத்தை கழிப்பதற்காக "தம்ஷ்ரத்ஸ்" விளையாட அரம்பித்தோம்(என்னைத்தவிர அனைவருக்கும் இந்தி தெரியும் ஆதலால் பொதுவாக இந்தியிலே இருந்தது எங்கள் உரையாடல்). என்முறை வந்தது, காதில் ஒரு இந்திப்படத்தின் பெயர் சொல்லப்பட்டது, என்க்குத்தெரிந்த அரைக்குறை இந்தியைவைத்துக்கொண்டு அபினயம்பிடிக்கத்தெரியாமல் முழித்தேன், என்முழிப்பைபார்த்து எதோ புரிந்து கொண்டு பிரஜேஷ் வரிசையாக படங்களின் பெயர் சொல்ல நல்லவேளையாக அதில் ஒன்று என் காதில் சொன்னப்பெயர்.நிம்மதியாக வந்து இருக்கையில் அமர்தேன்.
இப்படியாக சிரிப்பூம், சத்தமாயிருந்த எங்கள் விளையாட்டு ஓட்டுனருக்கு எரிச்சல் மூட்டியதால் அனைவரும் தூங்குவதற்கு நிற்பந்திக்கப்பட்டோம். சுமார் 4மணிநேர பயணத்துக்குப்பிறகு "கோலா டெம்லீங்" படகுத்துறைக்கு வந்துசேர்ந்தோம். இங்கிருந்துதான் படகு எடுத்துகொண்டு தாமன் நெகரா செல்லவேண்டும். நாங்கள் ஒருமரப்படகை வாடகைக்கு அமர்த்திகொண்டோ ம், தகரவொடுகள் வேயப்பட்டு சற்று நிளமாக இருபதுபேர்களுக்குமேல் அமரக்கூடியதால் எங்களோடுப்பேருந்தில் பயணம்ச்செய்த மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டோ ம். அப்படகின் பின்புறமிருந்த சிலாயிரம் குதிரைச்சக்திக்கொண்ட யமாகா மோட்டார் இயக்கம் பெற்றதும் அந்தக்காட்டாறின்
நீரோட்டத்தை எதிர்த்து பயணப்பட்டோம். சில சிறுக்கட்டடங்களை கடந்தப்பிறகு நீரோட்டத்தின் இருபுறமும் பச்சைப்பசேலென்று அடர்த்தியான மரங்கள், பறந்தப்படியே இரைத்தேடும் சிறியப்பறவைகள், ஆற்றைக்கடக்கும் மாடுகள்,கரையோரத்தில் இடுக்கியக்கண்களோடு கிராமத்து மனிதர்கள்.இந்த அழகியக்காட்சியை உள்வாங்கியப்படியேருந்த எங்கள் கனத்தமௌனத்தை திடிரண்டு
சுவற்றின் நெற்றியில்
ஆணி அடிக்கப்பட்டது
இயேசுவின் படத்தை
மாட்டுவதற்காக.

இது ஏன்னா நாம எப்பவும் உலகத்தை ஒரு ஒழுங்குக்கு உட்பட்டவையாக பார்க்க விரும்புறோம், அது ஒழுங்கற்றதாக கூட இருக்கலாம்.ஆனா அதற்கு முறனா இயற்கை நம்மை இப்படி பரிணாமபடுத்தியிருக்கலாம், எதிலும் ஒரு ஒழுங்கை பாரு அதை இல்க்கமிட்டு அடையாளப்படுத்து, சேமி. இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடையாளப்படுத்தபட்ட அடையாளங்களாக இந்த கடவுளர்களும் இருக்கலாம்.
Bart Kosko அவருடைய Fuzzy Thinking புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கனிஷ்சா சதுரதுல( Kanizsa ) தெரியுர மாயச் சதுரம் போல கடவுளும் இருக்கலாம். அவரின் கூற்றுப்படி, கடவுள் , ஒரு பொய்யான அண்டத்தில் உள்ள புழுதி மண்டலத்தின் பொய்யான கோளில் ஜிவிக்கும் ஒரு உயிரின் மூளையின் நரம்புகளால் பின்னப்பட்ட ஒரு புல்லறிவு (false knowledge).
நம்முடைய மூளையின் இந்த மாதுரிகை ஏற்படுத்தும் புல்லறிவுக்கு உதாரணம் கனிஷ்சா சதுரம். நேர்கோணங்களில் வெட்டபட்ட நான்கு வட்டங்கள் ஏற்படுத்தும் பொய்யான எல்லைக்கோடுகளும் அதன் நேர்மறையான் உட்புற வண்ணமும் அங்கு இல்லாத சதுரத்தை நம்மூளை மட்டும் அடையாளம் காண்கிறது.
நம் அடிப்படை கட்டமைப்பின்படி அங்கு இல்லாத சதுரத்தை இல்லை அப்படின்னு சொல்றது கடினம்.கடவுள் விடயத்தில் கூட இந்த புல்லறிவு உண்மையாக இருக்கலாம்.இந்த அண்டம் எற்படுத்தும் பொய்யான எல்லைகளும், அதன் பிரகாசமான உள்வெளியும் உருவகிக்கும் கடவுளரின் பிம்பத்தை நம்மில் பலரால் பார்க்காமல் இருக்கமுடியாது.
Reference :
Why People Believe in God An Empirical Study on a Deep Question
by Michael Shermer
Nov, 1999
அவர்களின் பாடல்கள் மட்டுமே சேறுகளற்று இருக்கின்றன