Thursday, May 04, 2006

மார்க்சிய சித்தாந்தம்

முத்துவோட மார்க்சியம் பதிவு படிச்சதிலிருந்து என்னடா இதல்லாம் தெரியாமவே இருத்துட்டோ மேன்னு ஒரே வருத்தமா போச்சு சரி படிச்சுட்டா போச்சுன்னு கூகுள்'க்கினா வதவதன்னு வந்திவிழுந்த பக்கங்களில் தலை சுத்துனதுதான் மிச்சம். நன்பர் ஒருவர் கிட்ட கேட்டதுல நாலுஞ்சு பேப்பர
தந்து படின்னார் அங்க படிச்சத இங்க பதியுரேன். படிச்சுட்டு என் புரிதல் தவறா இருந்தா சொல்லிட்டு போங்க வலது, இடது நன்பர்களே மற்றும்
திராவிட ராஸ்கள்களே(செல்லமாதான்:-)). மார்க்சியம் பற்றி தெரிஞ்சிக்க கீரியா ஊக்கியாக இருந்த முத்துவுக்கு நன்றிகள் பல..
முத்துவோட பதிவும் அதன் பின்னூட்டங்களும் ரொம்ப டீப்பா(deep) இருக்குறதனால இங்க கொஞசம் அடிப்படையா சுலபமா முயற்சி
பண்ணுவோம் ஓகேவா.
இனி..(எவ்வளவு எழுத்துப்பிழை இருக்கோ அவ்வளவு "-" குத்துங்க தெரிஞ்சிக்கிறேன் :-))
தொழிலாளர்கள் தகுதி அடிப்படையிலான சித்தாந்தம்

மார்க்சிய பொருளியலின் முக்கிய கொள்கையே இந்த தொழிலாளர்கள் தகுதி அடிப்படையிலான சித்தாந்தம்தான் இதன் அடிப்படை மிகசுலுவானது
பொருள்களின் விலை மதிப்பீடு அந்த பொருளை உற்பத்தி செய்ய தொழிலாளர்களுக்கு பிடிக்கும் நேரத்தின் அடிப்படையில் அமையவேண்டும்
என்பதே.இரண்டு சட்டை தைக்கிற நேரத்தைவிட இரண்டு ஜோடி செருப்பு தைக்கிற நேரம் அதிகமுன்னா செருப்போட விலை அதிகம் இரண்டுக்கும்
தேவையான மூலப்பொருட்கள் வேறவேறவாக இருந்தாலும்.அதுக்கு அப்புறமா இதல பலமாற்றங்கள் வந்தா சொல்லுறாங்க.
இந்த சித்தாந்ததைதான் மார்க்ஸ் கேப்டலிசத்துக்கு எதிரா வச்சார்.கேப்டலிஸ்டகள் செய்ய விரும்பாத இந்த சித்தாந்ததை தூக்கி பிடிச்ச மார்கஸ் இது எல்லா வர்த்தக பொருளுக்கும்(commodities) பொருந்தும் வாதிட்டார்.கேப்டலிஸ்டகளிடம் கூலிக்கு போகும் தொழிலாளர்களையும் ஒரு (commodity)வர்த்தக பொருள்ன்னு குறிப்பிட்டு இதுவும் இந்த சித்தாந்ததுக்கு உட்பட்டதுதான் சொன்னாரு. அவரோட பானியில சொல்லனும்முன்னா "லேபர் பவர்".
தொழிலாளர்களுடைய உற்பத்தி திறனும் சேவைப்பயனுமே "லேபர் பவர்". மார்க்ஸ் இதை கேப்டலிஸ்ட் பானியிலே விவரிக்கிறார் இப்படி
சமுதாயத்துக்கு தொழிலாளிக்கு அவன் வேலை செய்ய உணவும் உடுக்க உடையும் கொடுக்க எவ்வளவு உற்பத்தி நேரம்(labour hours) தேவையோ அதைச்சார்ந்ததுதான் "லேபர் பவர்". எப்படின்னா ஒரு தொழிலாளிக்கு ஒரு நாள் உணவு உடை கொடுக்க ஐந்த லேபர் மணி நேரம் தேவை. ஒரு லேபர் மணி நேரம் ஒரு ருபாய் அப்படின்னா ஒரு நாளைக்கு கூலி ஐந்து ருபாய்.
தொடரும்..
அது சரி.
மார்க்ஸ் இறந்து நூற்றாண்டுகளுக்கு பிறகும் அவருடைய கேப்டலிசத்துக்கு எதிரான விமர்சனமும் அதற்கு மாற்றாக அவர் வைத்த சித்தாந்தமும்
விவாதத்துக்கு உள்ளாவது ஏன்?
அவசியமான, அனுகூலமான, அவருடைய சொசியலிச சித்தாந்தம் இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் உலகளாவிய புரட்சிக்கு வித்திட்டது
உண்மைதான். ஆனா Poland, Hungary, Czechoslovakia, East Germany, Romania, Yugoslavia, Bulgaria, Albania,USSR இப்படி அந்த சிததாந்ததின் தோல்விகள் ஏன்?

13 comments:

சந்திப்பு said...

பட்டணத்து ராசா உங்கள் முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அதுவும், ஒரு பொருளாதாரம் குறித்த விவரங்களை படித்து - இவ்வளவு தெளிவாக பதிந்துள்ளீரே! வாழ்த்துக்கள்.

நானும் எழுதலாம் என்று உள்ளேன்... எப்போது என்று தெரியவில்லை!

மார்க்சிய ஞானம் என்பது பிரபஞ்சத்தை பற்றிய ஒரு விஞ்ஞானப் பார்வை. குறிப்பாக அதனை, பிரபஞ்ச அரசியல் - பொருளாதார கொள்கை என்று அழைப்பார்கள்.

இரத்தின சுருக்கமாக கூற வேண்டும் என்றால்,

உழைப்பை சுரண்டுபவன் (முதலாளி), சுரண்டப்படுபவன் (தொழிலாளி) இந்த வித்தியாசத்தை முற்றிலும் ஒழித்திட வேண்டும் என்பதே மார்க்சியத்தின் பிரதான உள்ளடக்கம்! இது நடக்குமா? என்று கேட்காதீர்கள். நடந்துள்ளது. நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் நடக்கும். விஞ்ஞான சோலிச சித்தாந்தம் தோன்றியது 1846இல்தான் அதாவது, 200 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குள் அது உலகில் 150 கோடி மக்களை சுரண்டலில் இருந்து விடுவித்துள்ளது.

மேலும், சோவியத் யூனியன், யூகோசுலோவியா, போலந்து, ஹங்கேரி ஏன் இங்கெல்லாம் சோசலிசம் வீழ்ந்தது என்ற கேள்வி மிகவும் அடிப்படையானது. முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு விரிவாக பதில் எழுதிட வேண்டும்.
இது சோசலிசத்தின் வீழ்ச்சியல்ல; அதன் பாதையில் சிறு சறுக்கல், அந்த அனுபவத்தை கைக்கொண்டு அது வலுவாக முன்னேறி வருகிறது. அந்த அடிப்படையில்தான் சீனாவிலும், கீயூபாவிலும் அது வெற்றி நடை போடுகிறது. இதற்கு எதிராகத்தான் அமெரிக்கா பூகோள ரீதியாக சீனாவிற்கு எதிரான பார்ட்னராக நம்மை பயன்படுத்துகிறது. செல்லமாக அணுவெல்லாம் கொடுக்கிறேன் என்கிறது. இது சோசலிசத்திற்கு எதிரான தாக்குதல் படிவத்தின் துவக்கம்.

அடுத்து, சோசலிசம் என்பது சோவியத்திற்கு முன் இருந்ததில்லை. சோவியத்தான் முதல் சோதனைக்களம், அந்த சோதனைக் களத்தில் பல அதி அபூர்வ சாதனைகள் நிகழ்ந்துள்ளது. நிகழ்த்தப்பட்டுள்ளது. சோசலிசம் சோவியத்தில் சாதித்ததை எந்த முதலாளித்துவ நாடுகளும் இன்னும் சாதிக்கவில்லை. இது குறித்து நிச்சயம் ஒரு பதிவினை போடுவேன்... தேர்தல் குறுக்கிடுகிறது.

இந்த விவாதத்தை துவக்கி வைத்த முத்துவுக்கு வாழ்த்துக்கள்! உங்களுக்கும்தான்...

இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராக பி.பி.சி. நடத்திய கருத்து கணிப்பில் காரல் மார்க்சு தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே அவரது கருத்துக்கள் இன்றைக்கும் உலகில் - ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருவதை அறியலாம்.

பட்டணத்து ராசா said...

நீண்ட பின்னுட்டதுக்கு நன்றி சந்திப்பு, உங்க இதுபற்றியான பதிவ ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

Anonymous said...

ராசா,
எனக்கெல்லாம் ரொம்ப நாளா தெரியாத, புரியாத விசயம் மார்க்சியம்... உங்க பதிவ படிச்சதும் எதோ ஒரளவு புரிய ஆரம்பிச்சுருக்கு... நன்றிகள் பல....

Anonymous said...

ராசா,
எனக்கெல்லாம் ரொம்ப நாளா தெரியாத, புரியாத விசயம் மார்க்சியம்... உங்க பதிவ படிச்சதும் எதோ ஒரளவு புரிய ஆரம்பிச்சுருக்கு... நன்றிகள் பல....

பட்டணத்து ராசா said...

உங்க வருகைகு நன்றி சித்தி.

Muthu said...

நாரதன் கலகம் நன்மையில் முடியுமா?

பட்டணத்து ராசா said...

//நாரதன் கலகம் நன்மையில் முடியுமா? //

புரியல :(

மு. மயூரன் said...

மார்க்சின் "உபரி மதிப்பு" தொடர்பான கருத்துக்களே நீங்கள் இங்கே தந்தது. மிக எளிமையாக விளங்கி, விளக்கியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால் மார்க்சியம் என்பது, கம்யூனிசம் என்பது வெறுமனே இந்த உபரி மதிப்பு .தொடர்பான கருத்துக்கள் அல்ல.

இத்தத்த்துவத்தின் அடிப்படை" இயங்கியல் பொருள்முதல்வாதம்" என்கிற தத்துவத்திலிருந்து தொடங்குகிறது.

எளிமையாக சொன்னால், இந்த உலகில் எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. எதுவும் நிலையக நிற்பதில்லை. மற்றது, எல்லாவற்றிலும் முதன்மையானது, பொருளே, பௌதீக சூழலே, மனம், ஆன்மா, கடவுள் போன்றவை அல்ல. அவை எல்லாம் பொருள் வடிவான மூளையிலிருந்து உதித்தவை. புறக்காரணிகளே சிந்தனையை தீர்மானிக்கின்றன. புறக்காரணிகளை மாற்றுவதன்மூலம் சிந்திக்கும் போக்கை மாற்றலாம்.

இது மாறாநிலைக் கொள்கைகளையும், ஆன்மா, கடவுள் போன்ற கருத்துக்களை கொண்ட கருத்து முதல்வாதிகள், மதவாதிகள், கடவுள் நம்பிக்கையாளர்கள் போன்றவர்களுக்கு எதிரான கருத்து.

மார்க்சியத்தின் அடுத்த முக்கிய கோட்பாடு "வரலாற்று பொருள்முதல்வாதம்".

அதாவது, வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் உலகில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. அந்த முரண்பாடுகள் தம்மிடையே அடித்துக்கொள்கின்றன. முரண்பாடுகள் உச்ச நிலையை அடையும் போது, மூன்றாவது சக்தியாக, புதிய உலக அமைப்பு தோற்றம் பெறுகிறது.

உதாரணமாக, முன்னர் ஆண்டான் - அடிமை சமுதாயம் இருந்தது. ஆண்டானும் அடிமையும் அடித்துக்கொண்டார்கள். தொடர்ந்து அடிமையாகவே இருக்க முடியாமல் அடிமைகள் எல்லாம் கிளர்ச்சி செய்தபோது இந்த சமுதாய அமைப்பு உடைந்துபோய் இதன் விளைவாக புதிய சமுதாய அமைப்பான "நிலப்பிரபுத்துவ" சமுதாய அமைப்பு தோன்றியது.

பின்னர் பண்ணை அடிமைகளும், நிலப்பிரபுக்களும் அடித்துக்கொண்டு, மேலும் முற்போக்கான புதிய சமுதாய அமைப்பான முதலாளித்துவம் கைத்தொழில் வளர்ச்சியை கைகோர்த்துக்கொண்டு உருவானது. அந்த அமைப்பு இன்றும் இருக்கிறது.

ஆனால் இன்று இந்த முதலாளிய அமைப்பினுள்ளும் தெளிவான முரண்பாடு ஏற்படுகிறது. அதுதான் முதலாளி- தொழிலாளி.

இன்னும் தெளிவாக சொன்னால், மூலதனம் தேங்கிக்கிடக்கும் ஒரு வர்க்கம், இந்த மூலதன வர்க்கத்தால் சுரண்டப்படும் இன்னொரு வர்க்கம்.

மூலதனம் தேங்கிக்கிடக்கும் வர்க்கம் எண்ணிக்கையில் மிகவும் குறைவு.
ஆனால் அவர்கள் அதிகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு மற்ற வர்க்கத்தை தொடர்ந்தும் சுரண்டி சுகபோகம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மூலதனம் எப்படி எல்லாம் இந்த சுரண்டலில் பங்கெடுக்கிறது, மூலதனம் என்றால் என்ன என்பது போன்ற விடயங்கள் பற்றிய மார்க்சின் ஆய்வு நூலே "மூலதனம்" (இதனை கவிஞர் தாமரையின் துணைவர் தியாகு தமிழில் மொழி பெயர்த்தார்). அந்த நூலில் குறிப்பிடப்பட்ட பொருளியல் ஆய்வு முடிவுகளில் ஒன்றே இந்த "உபரி மதிப்பு" சமாச்சாரம்.

இந்த சுரண்டுவோர்- சுரண்டப்படுவோர் முரண்பாடு தற்போது கொதித்துக்கொண்டுவருகிறது.

மூலதனம் மேற்கை நோக்கி குவிகிறது. மூன்றாம் உலகம் மேலும் மேலும் வறுமைக்குள்ளாகி, அடிமட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. மேற்குலகம் புதிய சுரண்டல் வடிவமான ஏகாதிபத்தியத்தை கொண்டுவந்து அதனை தக்கவைப்பதற்காக "உலகமயமாக்கல்" என்ற கருத்தியலை முன்வைக்கிறது. இதன்மூலம் சுரண்டுவதற்கு தடையாக இருக்கும் "நாடுகளின் இறையாண்மை" "அரசியல் யாப்பு" போன்றவற்றை எல்லாம் உடைத்து திறந்த நிலையில் சுரண்டல் செய்ய வசதியாக நாட்டு வேலிகளை உடைத்து "உலக மயமாக்கல்" இற்காக பாடுபடுகிறது. இதற்காக மேற்குலகம், முதாலாம் உலக நாடுகள் எமது அரசியல் வாதிகளை பயமுறுத்தி, காசுக்கு வாங்கி பயன்படுத்துகிறது. இந்தியாவில் என்ன தொழில் செய்யவேண்டும், என்ன படிப்பிக்க வேண்டும் என்பதை எல்லாம் அமெரிக்கா தான் திர்மானிக்கிறது, நமது மன்மோகன் சிங்கும், மகிந்த ராஜபக்சவும் வாயையும் அதையும் பொத்திக்கொண்டும் கையெழுத்து போட்டுவிட்டு வருவர்கள்.


இப்படியாக முரண்பாடு உச்சத்தை அடையும்போது இதற்கெதிராக சுரண்டப்படுவோர் வேறு வழியில்லாமல், தமது வாழ்வையும் இருப்பையும் காப்பாற்றிக்கொள்ள போராடுவது ஒன்றே வழி என்ற நிலையில், போராடாவிட்டால் செத்துப்போய்விடுவோம் என்ற நிலையில் ஆயுதம் தூக்கி போராட ஆரம்பிக்கிறார்கள்.

சட்டத்தை தூக்கி எறிந்து கிளர்ச்சிகளை நடத்துகிறர்கள்.

இன்று உலகில் நடக்கும் மக்கள் போராட்டங்களை எல்லாம் பார்த்தீர்களானால், அவை எல்லாம் ஏதோ ஒரு கட்டத்தில் சுரண்டலுக்கெதிரானதாக, ஏகாதிபத்தியத்தின், அதன் கைக்கூலிகளின் அதிகாரத்துக்கு எதிரானதாகவே இருக்கும்.

இவ்வாறான போராட்டங்கள் ஒட்டுமொத்தமாக புரட்சியாக மாறி இந்த முதலாளிய சமுதாய அமைப்பை உடைத்து புதிய, இப்போதிருப்பதைவிட மேலான சமுதாய அமைப்பான சோசலிசத்துக்கு கொண்டுசெல்லும் என்று மார்க்ஸ் எதிர்வு கூறுகிறார்.

பின்னர் மார்க்சியம் , சோசலிச சமுதாயம் என்றால் என்ன, அது ஏன் மேம்பாடானது, அதிலிருக்கும் முரண்பாடுகள் என்ன, அதை எப்படி சமாளிப்பது என்பது பற்றி எல்லாம் பேசுகிறது. கடைசியாக சோசலிச சமுதாய அமைப்பு கம்யூனிச சமுதய அமைப்பாக எப்படி மாற்றம் பெறும் என்றெல்லாம் பேசுகிறது.

மார்க்சின் கருத்துப்படி இன்றைய சுரண்டலுக்கும், முரண்பாடுகளுக்கும் தனி ஒருவர் சொத்து சேர்க்கக்கூடியதாக இருத்தல், அல்லது தனிச்சொத்துடைமை தான் காரணம்.

எனவே இதனை ஒழித்து "பொது உடைமை நிலை" தோற்றுவிக்கப்பட வேண்டும்.

இதனை சும்மா உருவாக்கலாமா?

நாம் தனிச்சொத்தை அழித்துக்கொண்டிருக்கும் காட்சியை அந்த அமைப்பின் மூலம் சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருக்கும் முதலாளிகள் தொலைக்காட்சியில் பார்த்த்து உருளைக்கிழங்குப்பொரியலை கொறித்து மகிழ்ந்துகொண்டிருப்பார்களா/

இல்லை.

அதிகாரம் அவர்களது கையில் தான் இருக்கிறது. ராணுவம், பொலிஸ் அதிகாரத்தின் கையில் தான் இருக்கிறது. எனவே அவற்றை எல்லாம் எமக்கெதிராக ஏவி விடுவார்கள்.

சோசலிசத்தை உருவாக்குதல் என்பது பெரும் இராணுவ போராட்டமாகத்தான் இருக்கும்.

உப்பு சத்தியாக்கிரகம் பண்ணி எல்லாம் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள முடியாது. . (நினைவு படுத்திப்பார்க்க வேண்டிய பாட்டு, "தனியுடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா. தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா தம்பி பழைய பொய்யடா)

எனவே சுரண்டப்படும் வர்க்கம், போர்க்குணமுள்ள வர்க்கம், இழப்பதற்கு எதுவுமில்லாத வர்க்கம் அதுதான் பாட்டாளி வர்க்கம். (தொழிலாளிகளும் அடிமஅட்ட விவசாயிகளும்) ஆயுதத்தை கையிலெடுத்து முதலாளித்துவ அரசுகளுக்கெதிராக, சொந்த நாட்டின் இராணுவத்திற்கெதிராக போரிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி, பொதுவுடைமை ஆட்சியை கொண்டுவரும். இதுதான் சோசலிச புரட்சி.

ஆக மார்க்சியத்தின் அடிப்படை இதுதான்.

இந்த சித்தந்தம் பல்வேறு வழிகளில் பயன்பட்டுவருகிறது. அதை எல்லாம் விளக்க எனக்கு அறிவும் போதாது இங்கே இடமும் போதாது.

சின்ன உதாரணம் சொல்கிறேன்.

தேவர் சாதிக்கெதிராக பறையர்கள் அரிவாளைத்தூக்கிக்கொண்டு போராடி, தமக்கு சாணிப்பால் கொடுத்தவனின், வாயில் மூத்திரம் பெய்தவனின் தலையை சீவி விடுகிறார்கள். பொலிஸ் வந்து பறையனைத்தான் பிடித்து உதைக்கும். தேவரை கேள்விகள் கேட்காது. ஏனென்றால் அவர்கள் அதிகார வர்க்கம். அவர்கள் முதலாளிகளாக இருக்கலாம் இல்லாமல் போகலாம் ஆனால் அதிகாரம் அவர்கள் கையில் இந்த அதிகாரம் எப்படி வந்தது? இது நான் ஏற்கனவே சொன்ன "நிலப்பிரபுத்துவ " காலத்து செட்டப் ஆல் வந்தது. இந்தியாவில் நிலப்பிரபுத்துவம் இன்னும் உடைந்துபோகமல் எஞ்சிக்கிடக்கிறது. இது முதலாளித்துவத்தை விடவும் ஆபத்தானது.


இப்போது காந்தீயவாதிகளும் பறையருக்கெதிராகவே நிற்பர். ஏனெனில் அவர்கள் கருத்து முதல் வாதிகள் . ஆயுதம் தாங்கிய புரட்சியை, வன்முறையை ஏற்க மறுப்பவர்கள். பறையர் பாவம், தேவர்கள் இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று அறிவுரை சொல்லி கடவுள் மீது பழியை போட்டுவிட்டு சும்மா இருப்பர். அல்லது நீதி மறத்துக்கு போகச்சொல்லுவர். நீதி மன்றம் யார் கையில்?

கம்யூனிஸ்ட் கட்சி, நக்சலைட்டுகள் இங்கே பறையருக்கு சார்பாக நிற்பர். ஏனெனில் அவர்களுக்கு பின்னால் இருப்பது மார்க்சிய சித்தாந்தம். அவர்கள் தமது சித்தாந்தத்தில் தெளிவுடையவராயிருப்பதால் நடந்த போராட்டத்தை சரியான வரலாற்று கண்ணோட்டத்துடன் புரிந்துகொள்வர். நிலவுடைமை வாதத்தொடு, முதலாளியம் கைகோர்த்துக்கொண்டு, அதிகாரமிழந்த, சுரண்டப்படக்கூடிய வர்க்கமான தாழ்த்தப்பட்ட சாதியினரை தொடர்ச்சியாக சுரண்டிக்கொண்டிருப்பதையும், அவர்களுக்கு போராடுவதைத்தவிர தம்மை காப்பாற்றிக்கொள்ள வேறு வழியில்லாமற்போவதையும் புரிந்துகொள்வர். இங்கே சாதிப்போராட்டத்திற்கு மார்க்சியம் ஆதரவளிக்கிறது.

அரிவாள் தூக்கி கழுத்துகளை அறுக்கக்கூடாது என்று போதிக்கும் இந்து சமயத்தை தூக்கி எறிந்து செருப்பால் மிதிக்கச்சொல்லி அறிவுரை வழங்குவர். இங்கே மார்க்சியம் நாத்திகம் பேசுகிறது.

யாருமே துணைக்குவராத நிலையில் கம்யூனிஸ்டுக்கள், மார்க்சிஸ்டுக்கள் பறையோரோடு சேர்ந்து நீதிக்கு போராடுகின்றனர்.

மொத்தத்தில் முதலாளிகளுகளுக்கெதிஆன சித்தாந்தமாக அல்லாமல், இப்போதிருக்கும் கேவலமான உலக மைப்பை மாற்றி, போர்செய்து புதிய உலக அமைப்பை உருவாக்கும் சித்தாந்தமே மர்க்சியம்.

பட்டணத்து ராசா said...

மயூரன் உங்கள் நீண்ட பின்னுட்டதுக்கும் விளக்கத்துக்கும் நன்றி, பொருளியலை தொடர்ந்த எழுதலாம் என்று இருந்தேன். நிஙகள் அதை இங்கு விளக்கமாக இட்டதற்கு மீண்டும் நன்றி, அப்படியே நம்ம பக்கத்துக்கு எட்டிபார்ததற்கும்.

சந்திப்பு said...

மயூரன் மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். மார்க்சியத்தை அனைவருக்கும் புரியக் கூடிய முறையில், அதன் உண்மை முகத்தை மிக எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். இன்றைக்கு மார்க்சியம் என்ற பெயரால் பலர் எழுதினாலும் அது மார்க்சியத்திற்கு எதிரானதாகத்தான் உள்ளது. அப்படியில்லை என்றால் அது காந்திய மார்க்சியமாக இருக்கிறது. அல்லது திருத்தல்வாத மார்க்சீயமாக அமைகிறது. இருப்பினும் இங்கு நடக்கும் விவாதங்கள் நல்லமுறையில் அமைந்திடுவதோடு, மார்க்சியத்தின் உண்மை வடிவத்தையும் நம் தமிழ் வாசகர்களுக்க கொடுத்திட வேண்டியுள்ளது. உங்களது பதிவு நல்லமுறையில் அமைந்துள்ளது. இந்த பின்னூட்டத்தை நீங்களே தனிப்பதிவாக வெளியிடலாம் என்பது என் கருத்து. அப்படியில்லை என்றால் பட்டினத்து ராசா நீங்களே இதனை இரண்டாவது பகுதியாக வெளியிடுங்கள். தொடருவோம் ஆரோக்கிய சமூகத்தை அமைத்திட. வாழ்த்துக்கள் மயூரன் எழுதுங்கள் .....

doondu said...

பட்டிணத்து ராசா,

நீங்கள் எந்த வகையிலும் எம் இயக்கத்துக்கு எதிராக நடந்தது இல்லை. அதனால் நாங்கள் தாக்கவில்லை.

எல்லோரையும் தாக்க நாங்கள் என்ன பைத்தியமா?

இதுபற்றியான பதிவுகளின் எண்ணிக்கைகளை பார்த்து அவர் போதைக் கொள்ளாமல் பிரச்சனையின் திவிரத்தை உணர்ந்த்து அந்த ஜாதி வெறியன் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இரா.சுகுமாரன் said...

பட்டணத்து ராசா அவர்களே!

என்பதிவுக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!
//அப்படியே இதையும் படிச்சு கருத்து சொல்லுங்க.//

பின்னர் வருகிறேன். பேசுவோம். எழுதுவோம்.

நன்றி

பட்டணத்து ராசா said...

உங்க வருகைகு நன்றி சுகுமாரன்