Tuesday, June 13, 2006

இவர்களுக்கும் ஒரு ஜாதி Please..

தெருவோரம் கம்பி மேல நடந்து, ஆட்டம் ஆடி, பல்டி அடிச்சி வேடிக்கை காட்டி வாழ்கை நடத்துகின்ற அந்த மக்களை கவனிச்சிருக்கிங்களா? இல்லைன்னா உங்க வீட்டு வாண்டுகளை
கேட்டுப்பாறுங்க தெரியும். மக்கள் வேடிக்கை பார்த்து கைத்தட்டி கொடுக்கும் சன்மானம் தான் அவர்கள் வருமானம்.

எங்கிருந்து வந்தோம், எங்கு வாழ்வதுன்னு தெரியாத அவலநிலை இவர்களுடையது.நினைவு தெரிந்த காலம் முதல் இவர்கள் இப்படிதான், இவர்கள் முன்னோர்களும் தெரு கூத்தாடிகள்தான்.

கிட்டதட்ட இரண்டு நூற்றாண்டிடுகளா தமிழகத்தில ஊர் ஊராக சுற்றி கூத்தாடி வருகின்றனர். சென்ற ஊரே சொந்த ஊர் இன்பமோ துன்பமோ இறப்போ, பிறப்போ பயணங்கள் நிற்பதில்லை இறந்தால் அங்கேயே புதைத்து விட்டு அடுத்த வேலை உணவுக்காக
தொடரும் பயணம்.

சில வருடங்களுக்கு முன் தங்களுக்கும் ஒரு இடம் வேண்டி புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தனர். எம்.ஜி.ஆர் காலத்தில இவர்களுக்கு இந்த நிலங்களை பட்டாமனைகளா வழங்கப்பட்டன. அதிக குழந்தைகள் இருந்தால் அதிக வருமானம். குலத்தொழிலுக்காக
முளையிலேயே கிள்ளி எறியப்படுகிற கல்வி.

அப்படியே விதிவிலக்காக படிக்கிற பிள்ளைகள் கூட மேற்கல்வி தொடர முடிவிதில்லை காரணம் இவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட ஜாதி இல்லை.

ஜாதி ஒழிக்க விவாதிங்கள் போராடுங்கள், ஆனா அதுவரைக்கு இவர்களுக்கும் ஒரு ஜாதி Please.. ஏன்னா ஜாதி இல்லையேல் கல்வி இல்லை என்பது சமுதாயத்தின் நிலை.

1 comment:

Anonymous said...

Nice.. thanks for ur postings