Friday, June 02, 2006

ஜனநாயகம் ஏன்? எப்படி? என்ன?

நம்ம மன்னர் இருக்காரு இல்லிங்க மன்னர் அவரு மொத்த அதிகாரத்தையும் வச்சிகிட்டு கொஞ்சமா இந்த நிலக்கிழார், மந்திரி, மத குரு அப்படின்னு சில பேர்களிடம் மட்டுமிருந்தது அதிகாரம்.

சி(ப)ல காலக்கட்டத்துக்கு பிறகு அதாங்க இந்த இயந்திர உற்பத்தி அதிகரிச்ச காலல்கட்டத்தாங்க, அப்போ இந்த முதலாளிகள் ( முதலாளித்துவம்) தொழிலாளர்களின் துணையுடன் மன்னர் கிட்ட இருந்த அதிகாரத்தை புடிங்கி கிட்டாங்க.

அப்படியே தொழிலாளர்களுக்கும் ஆட்சியில பங்கு தருவதாக சொல்லி நாடாளுமன்றம், தேர்தல், இதன் அங்கத்தவரை தேர்தெடுக்கும் முறை அப்படின்னு சொல்லி அதாங்க இந்த
ஜனநாயக முறை அத கொண்டுவந்தாங்க.

இதல பாருங்க இந்த நாகரிகமான தேர்தல் முறையல வயதுவந்த ஆண்களூக்கு மட்டுமே முதல்ல வாக்குரிமை இருந்தது அப்புறம் இந்த நூற்றாண்டுல தான் பெண்களுக்கான வோட்டுரிமை.

இத்தகைய ஜனநாயகம் என்னன்னா முன்னேற்றமான நாகரிகமான அரிசியல் முறையாம். ஏன்னா இத்தகைய ஆட்சி பெரும்பான்மையினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாட்சே.
பெரும்பான்மையினர் சொன்னா அதுவே நீதி அதுவே மரபு.

அப்படியே இந்த மொழி,இனம்,நிறம்,மதம்,சாதி, தொழில்,பால்நிலை சார்ந்த சிறுபான்மையிரான மக்களை ஒடுக்குவது பெரும்பான்மையினர் நீதியாகிறது, அஃதே ஆட்சியின் நீதி.

2 comments:

பட்டணத்து ராசா said...

இது கணேசலிங்கன் என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்த எண்ணங்கள். ரோசாவின் "கள்ளன்-போலிஸ்" பதிவ படிக்கும்போது ஏனோ இது நினைவுக்கு வந்தது. என் நினைவில் இருப்பதை எழுதிருக்கேன்.

Anonymous said...

மறுபடியும் சோற்றால் அடித்த பிண்ட்டங்களை எமாற்றி மீண்டும் மீண்டும் இந்த ராஜாக்கள் (JJ, MK), மொத்த அதிகாரத்தையும் வச்சிகிட்டு கொஞ்சமா இந்த வட்டம், மாவட்டம், மந்திரி, மாமன், மச்சான், அக்கா, தங்கை ... அப்படின்னு சில பேர்களிடம் மட்டும் சில அதிகாரங்களை கொடுத்து, சாகும்வரை மன்னராக இருந்து செத்தால், அவர்கள் வாரிசுகள் சுகமாக (10 தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டு) வாழலாம்.

அந்த காலத்தில் முடிசூடிய மன்னராட்சி...இந்த காலத்தில் முடிசூடா மன்னராட்சி ... மாற்றம் பெரிதில்லை...

மறுபடியும் சோற்றால் அடித்த பிண்ட்டங்களுக்கு அன்றும் இன்றும் ஒன்றே....

அடுத்தவனை அசிங்கமாய் பேச தெரிந்தால் அவன் அடுத்த அரசியல்வாதி... அடுத்த மந்திரி/தலைவர்...

ஜனநாயகம் என்னன்னா முட்டாள் மக்களுக்கு கொடுக்கும் ஹல்வா...ஹல்வா...ஹல்வா...ஹல்வா...ஹல்வா...ஹல்வா...ஹல்வா...ஹல்வா...ஹல்வா...ஹல்வா...ஹல்வா...