Monday, March 27, 2006

கிராமங்கள் மாறிவிட்டதாம், யார் சொன்னது

இன்றும் காது நீண்ட கிழவிகள்
பாக்கு இடித்துக்கொண்டு திண்ணையில் தானே குந்தியிருக்கிறார்கள்.

ஒண்ணுக்கு அங்கேயிம்,
ரெண்டுக்கு கொல்லைக்கும் தானே.

எட்டரை மணி வண்டி எனப் பெயர்கொண்ட பேருந்து
சரியாய் ஒன்பதரைக்குத்தானே வருகிறது.

பெரியவர் மகன் சின்னவர் தானே
பஞ்சாயத்துத் தலைவர்.

மாறிவிட்டதாம், யார் சொன்னது
கிழவீதியில் பூக்கும் நந்தியாவட்டை
இன்னும் சிவன் கோவில் வருவதில்லை.

மேலவீதியில் மட்டுமே மாடி வீடுகள்
அங்கு அப்பன், பூட்டன் காலத்திலிருந்து
'அவர்கள்'த்தான் மாட்டுக்காரன்.

எல்லாம் அப்படியேத்தான்.
மாறிவிட்டதாம்யார் சொன்னது.

போன வருசம் பக்கத்து டவுனுக்கு சித்தாள்
வேலைக்குப் போன சவந்தியக்கா

அப்புறம்,ரண்டு வருசம் முன்னாடி வந்த
லிட்டில் பிளவர் பள்ளிக்கூடமும் அந்த
சாமியாரையிம் தவிர

எல்லாம் அப்படியேத்தான்.
மாறிவிட்டதாம் யார் சொன்னது.

6 comments:

பொன்ஸ்~~Poorna said...

ரொம்ப மாறிடுச்சு ராசா.. கிராமத்தில் இப்போவெல்லாம், நீங்க சொன்ன பாக்கு இடிக்கும் கிழவியையும் பஞ்சாயத்து பண்ற தாத்தாக்களையும் தவிர இளைஞர்கள் எங்கே இருக்கிறார்கள்?? அந்த விதத்தில் மாறித் தான் விட்டது.

பட்டணத்து ராசா said...

அப்படிங்களா poons !!
உங்க வருகைக்கு நன்றி

Muthu said...

raasa,

super raasa...

பட்டணத்து ராசா said...

நன்றி முத்து. என்ன உங்க பதிவுல புதுசா எதுவும் இல்லை, வேலை பளுவா?.

Muthu said...

raasa,

i had been to madurai last week..i returned this monday...that's why

now started...

பட்டணத்து ராசா said...

yes muthu, read ur latest updates, you are back with bang :-)