Friday, May 19, 2006

வயசாளிகளும், சம்சாரிகளும்...

கடந்த சில வாரங்களா என் அறையில் வயசாளிகளும், சம்சாரிகளும் நாயக்கர்களும் நடமாடி கொண்டிருந்தார்கள். ஆமாங்க ஒவ்வொரு இரவும் கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்' நாவலை படிக்கும்போது இப்படிதாங்க உணர்ந்தேன்.

துனை இயக்குனர் நண்பரிடம் முதல் மரியாதை படம் பற்றி பேசி கொண்டிருக்கும்போது அந்த கட்டை விரல் சீன் இந்த 'கோபல்ல கிராமம்' த்திலிருந்துதான் சுட்டது (உணமையா?) அப்படின்னாரு நாவல் இருந்தா கொடுங்களேன் வாங்கி படிக்கி ஆரம்பித்ததுதான். கரிசல் நிலத்தின் ஆடு மாடு குருவி ஜனங்க இப்படி எலலாத்தையும் அறிமுகப்படுத்தற அருமையான folklore நாவல்.

மற்ற நாவல்கள் போல இல்லாம இஷ்டப்பட்டபோது சரித்திரம் பேசி ஒரு இடத்தில் விட்ட கதை வேறு எங்கையோ தொடர்கிறது.நெருக்கடியான அளவுக்கு கதை மாந்தர்களிருந்தாலும் இவர்தான் கதை நாயகன் என்று சொல்ல முடியவில்லை.

தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டு துலுக்கர்கள்( அப்படித்தான் ஆசிரியர் குறிப்பிடுகிறார்) தொந்தரவினால் தென்னிந்தியாவிற்கு வந்து இந்தக் கலாச்சாரத்தில் ஒன்றுபட்டு வாழும் ஒரு தனிப்பட்ட இனத்தினரின் வசீகரமான கதை. கிடைத்தால் படித்து பாருஙகள்.

7 comments:

வல்லிசிம்ஹன் said...

அவரிடம் நீங்கள் நேரில் பேசினாலும் அப்படியே தான் பேசுவார். ஒரே சிரிப்புதான். வாழத் தெரிந்த நல்ல மனிதர். அம்மாவும் அப்படியெ. பொன்னான குணம்.எளிமையின் உருவம்.யாரையும் நோகடிக்காத பேச்சு.

G.Ragavan said...

கி.ராவின் (இவருக்கு ஜிரா எந்த விதத்திலும் போட்டியில்லை...ஹா ஹா) கதைகளில் இருக்கும் இயல்புத்தன்மை மிக அற்புதமானது. நுண்ணியது. அவருடைய கோபல்ல கிராமத்தை இன்னமும் படிக்கவில்லை.

சமீபத்தில் அவரும் கழநியூரானும் சேர்ந்து வெளியிட்ட "மறைவாய்ச் சொன்ன கதைகள்" என்ற தொகுப்பை வாங்கினேன். பெயரில் இருந்தே கதைகளின் தன்மை தெரிந்திருக்கும். ஆனால் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறார். அவரைப் பார்த்தாலே ஒரு மகிழ்ச்சி பிறக்கும்.

பட்டணத்து ராசா said...

manu, ragavan வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

Vaa.Manikandan said...

நல்ல எலுதுரீங்க.

அன எணக்குதாண் ஸ்பெல்லிங் தாப்பு தாப்பா வறுது. ;)

பட்டணத்து ராசா said...

thanks manikandan, I'm trying to minimize it as much as possible.

Anonymous said...

சிறுவயதில் படித்த,மறக்க முடியாத நாவல். அந்த மனிதர்களையும்,
மாடுகளையும் மறுபடியும் நினைவூட்டியது தங்களது இந்த பதிவு.

அன்புடன்,
துபாய் ராஜா.

பட்டணத்து ராசா said...

thanks dubai raja