Thursday, March 23, 2006

மிண்டும் பசுமை புரட்சி

படிப்பினைகள்

கோடிக்கனக்கான மக்களின் பட்டினியை ஒழிக்க தலைவர்களின் சொற்தொடர் தான் இந்த "பசுமை புரட்சி - 2". ரசயானங்களின் மாயங்களாளும்,தாவிர-ஜீன்களின் ஜாதகங்களை மாற்றி அமைக்கும் புதிய இயலினாலும் உணவு உற்பத்தியை பெறிக்கி பட்டினிச் சாவுகளற்ற தேசம் செய்வோம்.

உலகை இந்த பட்டினிச் சாவில் இருந்து உய்விக்க இவர்கள் வகுக்கும் வழிகளில் ஒன்று, பூச்சிக் கொள்ளி ரசயானங்களை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவங்கள் இந்த புதிய தாவிர-ஜீன் இயல் நிபுனர்களாக உருமாரி உய்விக்கும் விவசாய பொருள்களுக்கு தாரளச் சந்தை ஏற்படித்தித் தருவதுதான்.

ஆனால்,முதல் பசுமை புரட்சியின் முழக்கமான, "பசுமை புரட்சியின் இந்த மநதிர விதைகள் தான் பட்டினிச் சாவுகளை பூட்டும்ச் சாவி" என்னவாயிற்று. இன்றும் பட்டினிச் சாவுகள் நிறைந்த உலகம்ந்தான் இது.

60வதுகளின் முடிவில், முன்றாம் நிலை உலக நாடுகள் பட்டினிச் சாவுக்கொடுமைகளை தடுக்க, பிரச்சனையின் வேர்களை அராய்ந்துக் களைய சாவுக்கொடுமைகளின் திவிரம் இடங்கொடுக்காமையால். அவசர அவசரமாய் அப்போதைக்கு செய்க்கூடிய உணவு உற்பத்திய மிகஅதிகப்படுத்த இந்த மந்திர விதைகளை விட்டால் வேறுவழில்லை. இந்த விதைகளும் அதற்கான விவசாய முறைகளும் மிகப்பெரிய மாற்றங்களை உணவு உற்பத்தியில் ஏற்படித்துயதான். ஆனா அதன் பின்விளைவாக நாம இழந்தது விவசாயத்தின் அதார வளமான நிலத்தையம் நிலத்தடி நீரும். கொஞசம் அதிகமான விலைதான்.

சரி இந்த பசுமை புரட்சி உலக பட்டினிச் சாவுகளை நிறுத்திச்சான்னுக் கேட்டா, இல்லை. வருத்தமான உண்மை. மிகப் பெரிய அளவில உணவு உற்பத்தி அதிகமாச்சித்தான். உணவுப் பொருட்கள் அதிகமான பட்டினி குறையனும்தானே ஆனா இல்லை. ஏன் மாற்றம் வரவில்லை, அடிப்படையான காரணம் தாங்க, வறுமைக் கோட்டுக்கு கிழ இருக்கிற மக்களிடம் வாங்கும் சக்தி சரிசமமா இல்லைங்க அதான். எவ்வளவதான உணவு உற்பத்திய பெருக்கினாலும். அதை வாங்க அந்த மக்களின் தரம் உயர்த்தபடாவிடில், இந்த பட்டினிச் சாவுகள் தொடரும் :(

2 comments:

மணியன் said...

உற்பத்திப் பெருகியும் பட்டினிச் சாவு நீங்காத அவலநிலையை அனைவரும் சிந்திக்க வேண்டும். 'தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றான் பாரதி. ஜகத்தினை அழித்திடல் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. :(

பட்டணத்து ராசா said...

மணியன், உஙக வருகைக்கு நன்றி.