Monday, May 29, 2006

குஷ்பு பார்க்க போன முருகன்

அதோ அந்த ஓரத்துல நிக்குறானே அவன்தான் முருகன்.நாங்க பிஸ்சி படிக்கும்போது எடுத்தது.பாண்டிசேரி தான் அவன் சொந்த ஊர். ஆரம்பத்தில படம் வரைவதில் எனக்கும் அவனுக்கு உரசலிருந்தாலும் அந்த திறை விலக்கி வெக்கப்படுற குஷ்பு படம் வரைஞ்சதலிருந்து அவன்தான்னு முடிவாகி திக் ஃப்ரண்ட்ஸாகிட்டோம்.

அவன் அறை முழுவதும் கட்டுடைத்தலைவின் படம்தான் எப்படியிம் அவஙகள நேர்ல பார்த்திடனும் சொல்லிகிட்டே இருப்பான் அதுவும் இந்த வேலு இருக்கானே அதுக்கு தூபம் போடறதே வேலை.இப்படித்தான் லீவுக்கு கோபிச்செட்டிப்பாளையம் போயிவந்த வேலு அங்கன எடுத்த ஃபோட்டோ காட்டி ரொம்ப அலும்பு பண்ணிட்டிருந்தான் தோ இந்த மரத்த பாரு இங்கன தான் சின்னதம்பி படத்தில குஷ்பு உக்காந்த ஆடுன மரம், இதோ
இந்த வாய்க்கால்லதான் பாவடை நனையாம் தூக்கிட்டு ஒடுவாங்களே, கடைசியா "குஷ்புபிரபு" ஆட்டொகிராப் வேற. நம்ம முருகனுக்கு ஜுரம் ஏறிக்கிட்டே இருந்தது.

ஏய் வாடா மெட்ராஸ் போய்பாக்கலாம்? வாரம் முழுக்க நச்சரிப்பு தாங்கமுடியல. ஏய் செமஸ்டர் வருது பிறகு போகலாம்ன்னு அவன சரிக்கட்ட உம்பாடு எம்பாடு ஆகிப்போச்சு. ஒருவழியா செமஸ்டர் முடிஞ்சு திரும்பவும் இவன் நச்சரிப்பு தாங்கமுடியல. சரி லீவுக்கு ஊருக்கு போக முன்ன மெட்ராஸ் போயிட்டு போகலாம்ன்னு ஆச்சி.பிரஸ் வள்ளியப்பன், நந்தா, வேலு, முருகன் எல்லாரும் வெள்ளி மெட்ராஸ் போறதா முடிவு. தங்கறது வள்ளியப்பன் ஃப்ரண்ட் துரையோட அஷோக் நகர் கெஸ்ட் ஹவுஸ். நாங்க யாரும் அதுவரைக்கும் மெட்ராஸ் போனதில்ல அதுதான் முதல்பயணம்.

11மணிக்கா பர்ரிஸ்ல இறங்கி முத்திரசந்துல, ஏங்க அஷோக் நகர் இங்கயிருந்த நடந்து போகலாம்ன்னு? கேட்க்க அவரு ஊருக்கு புதுசா? அதோ அந்தாண்ட நிக்கிற 70 சிரிஸ்ல ஏறிப்போ. அஷோக் பில்லர் போகுமாங்க? போகும் போகும்.

பில்லர் வந்து இறங்கினா நல்ல இருட்டு ஆள் நடமாட்டமே இல்ல. டேய் இங்கதாண்டா அவின்யு ரோடு சிக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் அதோ அந்த 64ஆம் நம்பர் வீடுதான்டா. ஏங்க தங்கராசு வீடுங்களா? டேய் துரை வீடுடா டேய் துரை அப்பாதான் தங்கராசு. அப்படி யாரும் இல்லங்க ராத்திரி தொந்தரவு பண்ணக்கடுப்பு தெரிஞ்சிது அவரு சொன்ன பதிலுல.அவின்யு அவின்யுவா சுத்தி சூரியன் தியேட்டர் எதிர் சிக்னல் ரோட்ல நின்னு சினிமாவுக்கு போலமான்னு பார்த்தா மணி 1ஆகி போச்சு. ஆள்அரவுமில்லாத ரோட்ல லைட்டு வெளிச்சம். சரி அட்ரஸ் கேக்கலாமுன்னு பார்த்தா போலிஸ் ஜீப்.

ஏய் இங்க என்னடா கூட்டம்? இல்ல சார் ஊர்லிருந்து வரோம் அட்ரஸ் தேடுறோம். சரி சரி இங்கல்லாம் நிக்க கூடாது போங்க போங்க. திரும்பவும் அங்கயே போய்பாக்கலாம்டா? நந்தா சொன்னா சரிதான்னுட்டு திரும்பவும் அந்த அவின்யு போன அந்த 64ஆம் நம்பர் வீடுகிட்ட ஒருத்தர் நின்னு நாங்க வர்ர வழிய பாத்தபடி இருந்தார்.

ஏன் தம்பிகளா லேட்டு? சமைச்சு வச்சிருக்கேன் வாங்க சாப்பிடலாம். யோவ் இரண்டு மணி நேரத்திக்கு முன்னால இந்த சீழ்வீட்ல கேட்டதுக்கு அப்படில்லாம் யாரும் இங்கல்ல தொரத்துனா ஒருத்தன் என்ன ஊருடா இது? மேல் வீட்ல யாரு இருக்கான்னு தெரியாம? கடுப்பானான் வள்ளியப்பன்.

மறுநாள் காலையில முருகனுக்கு கடும் ஜுரம் குஷ்பு ஜுரம் இல்லிங்க நிஜ ஜுரம். சரி விடுடா அப்புறம் பார்த்துக்கலாம் சொன்ன கேக்க மாட்டேன்கிறான். அடாது மழை பெய்தாலும் விடாது குஷ்பு படம் பார்க்கிறவனாச்சே ஆள் சொல் பேச்சு கேக்கறமாதிரில்ல.இரண்டு கொரோசின் மாத்திரைய முழிங்கிட்டு பில்லர் ஸ்டாப்ல பஸ்க்கு வெயிடிங்.

அடிச்சி புடிச்சி சைதாப்பேட்டை வந்த மந்தவெளி பஸ் ஏறுனா நம்ம முருகன் செம்ம டயடு நிக்க முடியா கம்பி புடிச்சி சாஞ்சி நிக்கிறான் அடுத்த ஸ்டாபுல ஏறுன அட்ட ஃபிகர் மேல் தெரியாம இடிக்க அது சுல்லுன்னு எரிச்சி விழ பையன் ரொம்ப நொந்துட்டான்.

ஒருவழியா மந்தவெளி வந்து சீப்ரொஸ் அப்பார்மென்ட் தேடியலஞ்சோம் ஏன்னா அங்கதானே கட்டுடைத்தலைவி இருக்காங்க. இங்க வந்து கேட்டா அவங்க மாத்திட்டு போயிட்டாங்க! ஸ்ஸப்பா.. அவங்க எப்பவும் ஆட்டோ வலதான் போவங்க அந்த ஆட்டோ ஸ்ட்ண்டல கேட்டுப்பாருக்ங்க. அண்ணே குஷ்பு இப்போ எங்க இருக்காங்க தெரியுமா? அவங்க போட் க்ளப் ஏரியாவுக்கு மாறிட்டாங்க 80பது கொடுங்க போகலாம் இல்லண்ணே வேணாம்.

டேய் உன்னால நடக்க முடியுமா? பார்த்தா ரொம்ப டயடாயிருக்க? வேணாம்டா அப்புறம் ஒரு நாள் பாத்துக்கலாம்.
இல்லடா இவ்வளவு தூரம் வந்துட்டோ ம். போய் பாத்துடலாம்டா?
டேய் நீ சொன்னா கேக்க மாட்ட ம்!

அப்பா ஒருவழியா போட் க்ளப் வந்துட்டோ ம் அங்கப்பாரு ஃபோட் இதுல அவங்க வீட எங்க கண்டுபிடிக்கிறது.
ஹாய பாப்பா குஷ்பு வீடு எங்க இருக்கு?
குஷ்பு ஆன்டி வீடா? அதோ அந்த ரைட்டு டேன் இரண்டாவது வீடு.
முருகனுக்கு செம்ம குஷி கிட்டதட்ட ஒடினான்.

யாரு?
குஷ்புவ பாக்கனும்.
அவங்க இல்ல வெளி ஊர் ஷுட்டிங் போயிருக்காங்க
இல்லங்க ரொம்ப தூரத்துலிருந்து வரோம்.
இல்லப்பா அவங்க ஜாதி மல்லி ஷுட்டிங் ஊட்டி போயிருக்காங்க
கார் நிக்குது?
ஊட்டிக்கு கார்லயா போவாங்க? இருங்க
உள்ள போயி ஃபோன்ல பேசினான் வாட்ச்மேன் பேசின கொஞ்ச நேரத்தல ஒரு அம்மா இரண்டு குஷ்பு ஃபோட்டோ கையெழுதோட
கொண்டுவந்து கொடுத்துட்டு போனாஙக.

வாட்ச்மேன் வந்து எங்ககிட்ட அந்த ஃபோட்டோ கொடுத்துட்டு அங்க வர ஒரு வாரம் ஆகும்.

சரி இங்க ஃபோட்டோ வது எடுத்துக்கிறோம்
இல்லங்க அதெல்லாம் முடியாது
நீஙகளும் நில்லுங்க பிளிஸ்..
சரி சரி சிக்கிரம்.
ஏய் அவங்க கார் நம்பர் ஃபெளேட் தெரியரமாதிரி எடு?
ஏய் நீ வரலயா? போடா இவனோட எல்லாம் ஃபோட்டோ எடுத்துக்க முடியாது
ரொம்ப தங்ஸ்ங்க உங்க பேரு
சுரேஷ்
எவ்வளவு நாளா வாட்ச்மேனா இருக்கிங்க?
இபபதான்
...
...
சரி அப்போ நாங்க வரோம்
இருங்க
இன்னும் இரண்டு ஃபோட்டோ கொடுத்தான்

சரி வரோம் சுரேஷ்
ம் மறக்காம் இப்ப எடுத்த ஃபோட்டோ எனக்கு அனுப்புங்க சரியா

ம் கண்டிப்பா.

No comments: