Saturday, July 22, 2006

உள்ளாட்சி தேர்தலும் ஒரு உள்குத்து(?) சட்டமும்.

தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்( அதுக்கு தானே அவரே :-)).

மேயர் மற்றும் துணை மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் விதத்தில் இச்சட்டம் வழிவகைச் செய்கிறது.இதுவரை மேயர் மற்றும் துணைமேயர்களை மக்களே தேர்ந்தெடுத்து வந்தனர். இந்த அவசர சட்டதின் முலம் அந்த முறை மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் கணிசமான அளவிற்கு இடங்களை கைப்பற்றியதும், நடைபெற்ற பாண்டிச்சேரி உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் காரைக்கால் நகராட்சியை கைப்பற்றியதுமா??

இந்த அவசர சட்டத்தை பாட்டாளிகட்சி தலைவர் ராமராஸ் வரவேற்று ஒரு யோசனையும் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின் சார்பில் தேந்தெடுக்கப்படும் மன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்து விடும் அபாயம் இருக்கிறது. அதைத் தடுக்க அப்படி வாக்களிக்கும் மன்ற உறுப்பினரின் பதவியைப் பறிக்க வகை செய்ய வேண்டும் என்று அரசுக்கு தெரிவித்துள்ளார். அவருக்கு அவர் பயம்.

எது எப்படியோ,கட்சி சார்பில்லாமல் அந்தந்த இடங்களில் இருக்கும் செல்வாக்கு மிக்கவர்கள் சேவை செய்ய நினைப்பவர்கள் நேரிடையாக தலைவராக இனி வருவது இயலாத காரியம். எங்கும் நீக்கமர கட்சிகளின் ஆதிக்கம் வளர்வதற்கு இச்சட்டம் ஏதுவாக இருக்கும்.

1 comment:

மணியன் said...

ஒருவிதத்தில் இதுவும் சரிதான். மேயர் ஸ்டாலின் அதிமுக- காங் கூட்டணி பெரும்பான்மை பெற்ற சென்னை மாநகராட்சியில் பட்ட அவதி பத்தாதா ?