Sunday, January 22, 2006

The Alchemist
Paulo Coelho

படித்தது

கனவுகள், பட்ச்சியின் குறியிடுகள், சகுனங்கள், சாகசங்கள் என ஒரு பரந்த அறிவும், ஆளுமையும் உள்ள முனியின் எதிரொலியாக வாசகனை புகைப்போல சுழ்ந்து கொள்கிறது, "The Alchemist" புதினம்.

கனவும், கனவுகளை விடாது துறத்தும் சந்த்யகோ ங்கற பையன் முலமா நம்மோட உண்மையான மகழ்ச்சியும், முழுமையும், படைப்பின் நோக்கமாக நமக்கு விதிக்கப்பட்டவைகளை கனவுகளின் ஊடாகவும், நிகழ்வுகளாகவும், சகுனங்களாகவும் இயற்கை அடையாளம் காட்டுங்கறத இந்த நாவல் நெடுக சம்பவங்களா அடிக்கி இருக்குறார் நாவலாசிரியர்.

சந்த்யகோவின் எகிப்து பிரமிட் புதையல் கனவும், அந்த தேடல் பயண நிகழ்வுகளின் முலம், நம் வாழ்வின் கனவுகளும், அதை அடைய படும் இடர்கள், பட்டறிதல், பயணம், உலகம் பற்றியான புரிதல்,சுயத்தேடல் என வாழ்வியல் தத்துவங்கள் எளிமையான நடையில் கதை நெடுக.

சான்டியகோ, அவனோட புதையல் தேடல்லில் உலகத்தின் சிறப்பையும், அற்புதமான மனிதர்களையும், *அல்கெமிஷ்ட்* 'யும் சந்திக்கிறான். முடிவில் புதையல அவனக்கு பிடித்த அந்த பழைய சர்ச் 'லே கண்டு எடுக்கிறான்(treasure lies where your heart belongs).

Thursday, January 19, 2006

புதிதாக பறவைக்கூடு

நேற்று, வெட்டுவதற்காக குறியிட்ட பழய மரத்தில்
இன்று, புதிதாக பறவைக்கூடு

Wednesday, January 11, 2006

சாலையோரத்தில் காலணிகளை விட்டுவந்தேன

பெயர்களை மறந்தேன்
காற்சட்டை பைகளை காலிசெய்தேன்
சாலையோரத்தில் காலணிகளை விட்டுவந்தேன்
பின்னிரவில் கடிகாரத்தின் முட்கள் எதிர் திசை சுழற்சியில்
குடும்ப புகைப்படத்தில்
மீண்டும்
என்னை சிறுவனாக கண்டேடுத்தேன்

(மொழிபெயர்பு மட்டுமே நான்.)

Tuesday, January 10, 2006

அவர்களின் பாடல்கள் மட்டுமே சேறுகளற்று இருக்கின்றன

கடும் குளிரில் ஒரு பின்னிரவில்
தூங்குகிறது நிலா, குளத்தில்.

எறும்புகளை நசுக்கினேன்
குழந்தைகள் பார்த்துக்கொண்டு இருந்தன.

என் ஜன்னலில் படிந்த கைரேகையின் ஊடாக
மேகங்களற்ற நீலவானம்.

முகமற்று, இலக்கமிட்டு
தனி புள்ளியாய், அனானிமெஸ்.

அவர்களின் பாடல்கள் மட்டுமே
சேறுகளற்று இருக்கின்றன - உழவர்

(மொழிபெயர்பு மட்டுமே நான்.)

Thursday, January 05, 2006

சுற்றும் பூமி சுற்றும்
வருடம் 2005

எல்லா வருடம்போல சாதாரண, சொல்லப்போனால் சற்றே மகிழ்ச்சியான வருடமாகிருக்ககூடும், அந்த கொலை அலைகள் வாராது போயிருந்தால். அதிலிருந்து மும்பையில் வெள்ளம், கஷ்மிரில் நிலநடுக்கம், டில்லியில் குண்டிவெடிப்பு,தமிழகத்தில் பேய் மழை அப்பப்பா மிக கொடுரமான வருடமாகிப்போனது.அமைதியான வருடம் திடிரன, நிறைய உயிர் சேதங்கள், நூற்றுக்கு மேலான கிராமங்களின் அழிவு, நகரங்கள் ஷம்பித்து போயின.

இந்த பேரழிவுகள் மனிதர்களின் வாழ்வை ஊனபடுத்தினாலும், சாமானயர்களின் நாயக செயல்களை இனங்கான முடிகிறது.

இவர்கள் திரையில் தோன்றும் சினிமா நாயகர்கள் அல்ல நம்மைபோல சாதாரணர்கள். நம்மிடையே பலரால் செய்துருக்ககூடிய ஆனால் சிலரே செய்த செயல்கள்.

அந்த சாமானயர்களின் நாயக செயல்களுக்கு நெகிழ்வான நன்றி, வணக்கம், வந்தனம்.

Monday, January 02, 2006

Magical Realism??
இருட்டின் மேல் கருப்பாய்

பயம் எறும்புகள் போல் என் படுக்கையில் மெல்ல ஊர்ந்து என் கால்கள் வழியே ஏறி என்னை முழுவதுமாய் பூசிக்கொள்கின்றன.

இறுக்க முடிய நடுங்கும் இமைகளை மீறி. . ஜன்னல் வழியே நழுவி என் அறைக்குள் விழுகிறது.

எந்த சலனமும் இல்லாமல் அது நீள்கிறது. சற்றே தையிரியமுற்று இமை விலக்குகிறேன், அது என் படுக்கையின் தொட்டுவிடும் துரத்தில்.

என் இருப்பை அலட்சியம் செய்து படுக்கையின் காலில் தேங்குகிறது..

சலனமுற்று அஞ்ச முயற்சிக்கிறேன், அது படுக்கையின் காலில் இருந்து மெல்ல நழுவி, பின் வேகமுற்று படுக்கையின் மீது ஏறி என்மீது இருட்டின் கருப்பாய் பூசிக்கொள்கிறது.

என் திறந்த வாயின் வழியே பய எறும்புகள் வெளியேறுகின்றன.