Thursday, May 18, 2006

கவிதைக் கலை

ஆர்க்கிபால்ட் மேக்லீஷ் (அமெரிக்கா)
தமிழில் - பிரம்மராஜன்

நவீன அமெரிக்கக் கவிஞர். கவிதைக்கான புலிட்ஸர் விருதினை 1932-ஆம் ஆண்டு பெற்ற ஆர்க்கிபால்ட் மேக்லீஷின் கவிதைகளை வகைமைப்படுத்துவது எளிதல்ல. உணர்ச்சி நிறைந்த கவிதைகளையும், பொது வாழ்வுக்கான அதிகமாய் எளிமைப்படுத்தப்பட்ட கவிதைகளையும், சிக்கலான கவிதைகளையும் எழுதியிருக்கிறார். கவிதைக் கலை என்கிற கவிதை அதிகம் பிரபலமானது மட்டுமின்றி அதிகம் மேற்கோள் காட்டப்படுவதும் கூட.

ஒரு கவிதையிருக்க வேண்டும்
உணர முடிவதாய்
உருண்டு திரண்ட பழம் போல மெளனமாய்

பேச்சற்று
புராதனப் பதக்கங்கள் கட்டை விரலுக்குத் தட்டுப்படுவது போல்

பாசி வளர்ந்து படிந்த
கைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்
போல மெளனமாய்

ஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்
பறவைகளின் பறத்தல் போல

நிலா உயர்வதைப் போல்
காலத்தினுள் கவிதை -யக்கமில்லாதிருக்க வேண்டும்

-ரவு பின்னலிட்ட மரங்களைக் குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக நிலா
விடுவிப்பது போல,

பனிக்காலத்து -லைகளின் பின்புறமிருந்து நிலா
ஞாபகம் ஞாபகமாக மனதை விடுவிப்பது போல

ஒரு கவிதை காலத்தினுள் சலனமில்லாதிருக்க வேண்டும்
நிலா உயர்வது போல்

ஒரு கவிதை சமானமாய் -ருக்க வேண்டும்
நிஜத்திற்கு -ணையாய் அல்ல

எல்லாத் துயரத்துக்கும்
ஒரு வெற்று வாசலைப் போல
மேப்பிள் மரயிலையைப் போல

காதலுக்கு
தலைசாயும் புற்கள் மற்றும்
கடலுக்கு மேலாக -ரண்டு வெளிச்சங்களைப் போல

ஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது
கவிதையாகயிருக்க வேண்டும்

No comments: