Friday, March 31, 2006

பூசைக்கு வந்த பூ

பூசைக்கு வந்த பூ தான்
கொஞ்சம பிச்சிப் போடாமல்
அப்படியே போட்டுவிட்டுப் போங்கள்
உங்களுக்கு புண்ணியம கிட்டும்.

யானைமுகத்தினனை வேண்டிக்கொள்ளுங்கள்
உங்கள் வேண்டுதல் நிறைவேறட்டும்
ஆனால் அடுத்தமுறை தேங்காய சிதறடிப்பதாய்
வேண்டிக்கொள்ளாதிர்
உங்களுக்கு புண்ணியம கிட்டும்.

ஐய்யனாருக்கு படையல் போட்டு பிள்ளை வரம்
வேண்டிக்கொள்ளுங்கள்
முத்துக்களாய் பிறக்கட்டும் பிள்ளைகள் பண்ணிரண்டு
ஆனால் ஆட்டுக்கடவை விட்டுவிடுங்கள்
உங்களுக்கு புண்ணியம கிட்டும்.

6 comments:

Muthu said...

ராசா,

பொதுவாக கவிதைகளை புரிந்துகொள்வதில் எனக்கு பிரச்சினைகள் உண்டு.ஆனால் உங்கள கவிதைகள் எனக்கு சுலபமாய் உள்ளது.

இந்த கவிதையில் முதல் பத்தி எனக்கு பிடித்தமான ஒன்று.

பட்டணத்து ராசா said...

நன்றி முத்து,

ஒருவேலை நான் எழுதரது கவிதை மாதிரி இல்லையோ என்னவோ :-)))

Maraboor J Chandrasekaran said...

your poems are down to earth and simple. The comment you posted for my startweek poem'pambaram' has been received by the other poem vilakku. It seems that there is someproblem in blogger web site. Canb you pls repost it later? Sorry, for the inconvenience, but I am helpless. Pambaram kavidai, tamilmanathula theriyudhu, aanaal, en blogla poanaa, maayamaa marayudhu!!

பட்டணத்து ராசா said...

நன்றி ஜெய. சந்திரசேகரன்

சுற்றும் போது ஆட்டம் இல்லா சுழற்சி
நிற்கும் போது சுழலின் இர்ப்புக்கு மெல்ல ஆட பின்பு தடதடத்து விழும்.

சந்திப்பு said...

(ஆட்டுக்கடவை விட்டுவிடுங்கள்
உங்களுக்கு புண்ணியம கிட்டும்)

-----------------------------------
அகிம்சை கொள்கை! மிக அழகாக செதுக்கியுள்ளீர்.
-----------------------------------

(முத்துக்களாய் பிறக்கட்டும் பிள்ளைகள் பண்ணிரண்டு)

-----------------------------------
ஏன் பதினாறு வேண்டாமா?
-----------------------------------

பட்டணத்து ராசா said...

unga varugaikku nandri santhipu