Monday, October 02, 2006

கரி பூசிக்கொள்

கருமையை முகம் முழுக்க பூசிக்கொள்
வெண்மையாய் ஒரு புன்னகையும் யிட்டு
முகம் முழுக்க கரி பூசிக்கொள்
யாருக்கும் அது தெரிந்துவிடாமல் இருக்கட்டும்

யாரும் இருந்திருக்கவில்லை
உன் முகத்தோல் அழுகியபோது
பாம்பு போல் நெலிந்து ஓடும்
விகாரம் மறைய பூசிக்கொள் அவை இப்பொது
அங்கு இல்லாமல் போகட்டும்

முக கண்ணாடியில் ஒருமுறை பார்த்துகொள்
அழகு பார்த்துகொள்ள அல்ல
பூசிக்கொண்டதை சரி பார்த்துகொள்ள

உனக்கு தெரிந்த அறிந்த முகத்தை
மற்றவருக்கு காட்டிவிடாமலிருக்க நீ பூசிக்கொண்டது
அழகு படுத்த அல்ல மாற்றாக
உன்னை மறைத்துக்கொள்ள.

1 comment:

நன்மனம் said...

புதிய கோணத்தில் நடப்பை எடுத்துரைத்த நல்ல படைப்பு.