Tuesday, February 27, 2007

நெடுங்குருதி


கொஞ்சம் பிரபலமான தொலைகாட்சி இயங்குனர் இயக்கிய கேப்டன் படத்தில் வரும் சில காட்சிகள் நெடுங்குருதியின் சில நிகழ்வுகளின் தழுவல் என்று நண்பனின் வியாக்கியானமே நெடுங்குருதி நாவல் பற்றியான அறிமுகம் எனக்கு.

எஸ். ராமகிருஷ்ணன் எழுதி உயிர்மை வெளியிடான நெடுங்குருதி நாவலை வாங்கும் போது அதன் தடிமன் சொல்லியது பெயரை போலவே மிக நீண்ட நாவல் என்று.

வெயிலும் வெயில் சார்ந்த வேம்பலையின் நிலவெளியை சுற்றி வருகிறது கதை, என் குளிருட்டபட்ட அறையையும் மீறி வெயிலின் வெக்கையை உண்ர்த்துகிறது ஆசிரியரின் எழுத்து. ஊரின் சுபாவம் மக்களின் மீது படிந்து விடுகிறதா? அல்லது மக்களின் சுபாவம் ஊரின் மீது படிகிறதா? வெயில், வசந்தம், மழை என முறையே காலங்களில் பயணிக்கும் கதையில் கதை மாந்தர்களின் சுபாவங்களில் முறையே அந்த அந்த காலங்கள் வெளிப்படுவது யதார்தம்.

வேம்பலையின் மக்கள் கதைகளில் சொல்ல மறந்து போனவர்கள், அவர்களது நம்பிகைகளும் வாழ்வியலும் பதிவு செய்யாமல் விடுபட்டு போனவைகள்.

இந்த நாவல் ஒரு மேஜிக்கல் ரியலிச முயற்சி என்று நண்பர் சொல்ல கேள்விப்பட்டேன் அப்படியெல்லாம் இல்லை என்றார் மற்றொரு நண்பர்.மேஜிக்கல் ரியலிச என்றால் என்ன என்றே தெரியாத நான் விவாதத்துக்குள் இறங்குவது சரியல்ல ஆனால் ரொமான்டிசிசஙகளுக்கான மிகை உணர்ச்சி இருப்பதாக படுக்கிறது இதுபோல.

"விட்டின் மீது பூனை போல ஏறி வரும் வெயிலை நோக்கி
என்னடா பெரிய மசுருன்னு நெனப்பா? வந்தேன் வக்காளி வகுந்துடுவேன்."

Monday, February 26, 2007

வந்தியதேவனும் பந்திய குதிரையும் (சோதனை பதிவு)

வந்தியதேவனுக்கு அவன் பெயர் பிடிக்காது, சின்ன வயதிலிருந்தே ஏம்மா இப்படி பெயர் வச்சேன்னு கேட்டு கேட்டு அலுத்துக்குவான். கல்கி, ராஜா, குதிரை இப்படி அம்மா சொன்ன எதுவும் அவனுக்கு ஒப்புதல் இல்ல.

மத்த நாள் எப்படியோ சனி ஞாயிறு வந்துட்டா பள்ளிகூடம் போகறது பிடிக்கும் காலையில வந்து மைதானத்துல விளையாட ஆரம்பிச்சா மதியம் அப்படியே மரத்தடியில தூக்கம். தூக்கமுன்னா தூக்கம் வந்தியதேவா வந்தியதேவான்னு அம்மா கூப்பிட்டு மதிய சோறு ஞாபக படுத்துற வரைக்கும் அப்படி ஒரு தூக்கம்.

இதோ ஞாயிறு, பள்ளிகூடத்துக்கு கிளம்பியாச்சு. சிறிது நேரத்துக்கு மேல வெயில் அதிகமாக, மரத்தடியில் வந்து அமர்ந்து அந்த பறந்த மைதானத்தை வேடிக்கை பார்க்கும் போது தான் அந்த அந்த குதிரை மைதானத்தில் நுழைந்தது.

முன்பே அவனுக்கு தெரிஞ்ச குதிரைதான் ஒரு முறை சுந்தரோட மைதானத்தில் விளையாடியபோது சுந்தர் பந்தயம் கட்டி சவாரி செய்த குதிரை தான். தானும் வீராப்பா சவாரி செய்ரேன்னு அது மேல ஏறி பிடிக்க ஏதும் இல்லாம அதோட பிடரிய பிடிக்க குதிரை தறிக்கெட்டு ஓடி தள்ளி விட்டது ஞாபகம் வந்து போனது.

Friday, February 23, 2007

b12,


b12,
12b படத்தின் விமர்சனத்தை தான் b12 ன்னு மாற்றி எழுதிட்டதா நினைத்துவிடாதிர்கள், இது வேறு. இதோ இந்த படம் valentine's day தினத்தில் ஊடகங்களில் வெளியானது. இது sci-fi படத்துல வருகிற பூங்கொத்தோ அல்லது ஏதோ ஒரு galaxy படம் போல ஆச்சர்ரியமானதல்ல, இருந்தும் AIDS எதிரான மனிதனின் முயற்சியில் வெல்வதற்கான சத்தியமான நம்பிக்கை தருகின்ற படம்.
இது பற்றியான தொடுப்பு.