Tuesday, May 30, 2006

நானும் காற்றில் கத்தி வீசுகிறேன்

யாரின் முகமூடி கிழிக்கவோ
திறந்த முகத்தில்
குத்தி கூர்பார்கவோ அல்ல

எமக்கான விளையாட்டு
காற்றில் கத்தி வீசுவது

என் தூரம் அறிந்தே வீசுகிறேன்
எல்லைக்கு உட்பட்டு

மழுங்கிய கத்தி கொண்டே
வீசுகிறேன்
காற்றை கிழிக்கும்
ஓசை எனக்கானது

காற்றின் அறைகூவல் வீசட்டும்
மணலில் கத்தி சொருகி
நிலை கொண்டிருப்பேன்
அது ஓயும்வரை

ஒளி, ஒலி பிழை
இருக்கலாம்
காற்றை கிழிப்பதில்
இருக்கிறது விளையாட்டின்
வெற்றி எனக்கும்
பிரிகையில் காற்றுக்கும்

இதுவரை தோற்றாலும்
இது ஒரு விளையாட்டு
அவ்வளவே!

8 comments:

கார்திக்வேலு said...

ராசா,
கவலைப்படாமல் சும்மா "கத்தி வீசுங்க" , நாங்க எல்லாம் இருக்கோம்
வேடிக்கை பார்க்க.:-)

பட்டணத்து ராசா said...

நன்றி கார்திக்வேலு

Vaa.Manikandan said...

என்னய்யா முதல் வரியிலேயே 'உள்குத்தா'?

அப்பாடி...ஏதோ நம்மால முடிஞ்ச நாரதர் வேலை. ;)

பட்டணத்து ராசா said...

உள்குத்து இல்ல மணி, நான் ஃபளாக் எழுதறதே காத்துல கத்தி வீசுறதுதான் :-)

Chandravathanaa said...

nantru

பட்டணத்து ராசா said...

சந்தரவதனா -- நம்ம பக்கத்தை எட்டி பார்த்தற்கு நன்றி.

முல்லை அமுதன் said...

nalla kavithai.
paaraadukal.
mullaiamuthan
mullaiamuthan@gmail.com

முல்லை அமுதன் said...

nantru.
vaazhthukal.