Friday, July 28, 2006

மரணம் விகிதங்களில்

இன்று உள்ள வளர்ந்த மருத்துவ உலகத்தில் எது மனிதனின் இறப்பு, மனிதனின் முடிவு என்பது வருடாவருடம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கின்றன். மேலும் வளர்ச்சி மேலும் தகவல்கள் மேலும் தீர்வுகள் என தினமும் மனிதர்களின் நின்ற இதயம் மற்றும் மற்ற உடல் உறுப்பின் செயலிழக்கங்களில் இருந்து மீட்டு மீண்டும் உயிர்ப்பிக்கபடுகிறார்கள்.

இறப்பு என்பது உடலியல் செயலிழக்கம். ஒரு கோலின் இறப்பை போல ஒரு நட்சசத்திரத்தின்(star) இறப்பை போல இறப்பு என்பது பொருளியல் பிரச்சனை ( engineering problem ). இறப்பின் பிறகு ஆவியோ ஆன்மாவோ இறுபபதற்கான சாத்திய கூறுகள் இல்லை அதாவது ஆவியோ ஆன்மாவோ இயற்பியலின் விதிகளுக்கு உட்பட்டதில்லை ஆனால் மாலிக்கூல்ஸ்(Molecules) இயற்பியலின்
விதிகளுக்கு உட்பட்டது.

ஒரு சிஸ்டம் எப்போது இறப்பு நிலை அடைகிறது அதன் ஒவ்வொரு பாகமும் இறக்கும்போது பாகம் எப்போது இறப்பு நிலை அடைகிறது அதன் ஒவ்வொரு செல்(cell)லும் இறக்கும்போது. நமது உடலில் டிரில்லின் செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லும் பல ஆயிரம் மாலிக்கூல்களால் ஆனது. இந்த மாலிக்கூல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உருவகிக்கும் புரதங்கள். இந்த புரதங்கள் உருவகிக்கும் ரகசியம் டி.என்.ஏ நூல் ஏணியில் எழுதியுள்ளது.

மாலிக்கூலர் இன்ஜினியரிங் தரும் அறிவியலில் வரும் எதிர்காலத்தில் நம் உடல்கள் செயலிழக்கும் தங்கள் உறுப்புகளை தாங்களே சரி செய்து கொள்ளும் நுட்பத்தை தரலாம். இயற்பியலின் எந்த கோட்டுப்பாடுகளையும் உடைக்காமல் மாலிக்கூலர் இன்ஜினியரிங் நம் உடல்களுக்கு சாகா வரம் தரும்.18ம் நூற்றாண்டின் தத்துவ ஞானி ட்னிஸ் டிடெரொட் சிலைகளை
உயிர்பிக்கும் வழிக்கண்டார் ஆச்சரியமாக இருக்கிறதா ஆமாம் சிலைகளை இடித்து பொடிப்பொடி துகுள்களாக உரமாக மாற்றினார். அந்த உரத்தை கொண்டு தானியங்களையும் கீரைகளையும் விளைவித்து உணவாக்கி உயிர் வளர்த்தார். இதே எளிமையான வழியத்தான் மாலிக்கூலர் இன்ஜினியரிங் சொல்கிறது சிலையை மாலிக்கூல்களாக பிரித்தெடுத்து மனித மாலிக்கூல்களாக உருவகித்தால் உயிர் அற்றது உயிர் பெறுகிறது.

unstack the statue molecules and restack them as man molecules.along the way you brink the dead to life.

மாலிக்கூலர் இன்ஜினியரிங் தரும் இந்த அறிவியல் சாதாரண மக்களுக்கு கிடைக்கும் வகையில் மலிவாக ஆகுவதற்கு முன் நாம் இறந்து போகலாம். ஆனால் வரும் காலங்களில் மனிதன் நோயவாய்பட்டோ அழிகியோ இறக்க போவதில்லை. விபத்துகளாலோ அல்லது விரும்பியோ தான் இறந்து போகலாம். இந்த மாதிரி (தற்)கொலைகளை சட்டம் அனுமதிக்க புதிய சட்டம் இயற்றப்படும்.

Thursday, July 27, 2006

Saturday, July 22, 2006

உள்ளாட்சி தேர்தலும் ஒரு உள்குத்து(?) சட்டமும்.

தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்( அதுக்கு தானே அவரே :-)).

மேயர் மற்றும் துணை மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் விதத்தில் இச்சட்டம் வழிவகைச் செய்கிறது.இதுவரை மேயர் மற்றும் துணைமேயர்களை மக்களே தேர்ந்தெடுத்து வந்தனர். இந்த அவசர சட்டதின் முலம் அந்த முறை மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் கணிசமான அளவிற்கு இடங்களை கைப்பற்றியதும், நடைபெற்ற பாண்டிச்சேரி உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் காரைக்கால் நகராட்சியை கைப்பற்றியதுமா??

இந்த அவசர சட்டத்தை பாட்டாளிகட்சி தலைவர் ராமராஸ் வரவேற்று ஒரு யோசனையும் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின் சார்பில் தேந்தெடுக்கப்படும் மன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்து விடும் அபாயம் இருக்கிறது. அதைத் தடுக்க அப்படி வாக்களிக்கும் மன்ற உறுப்பினரின் பதவியைப் பறிக்க வகை செய்ய வேண்டும் என்று அரசுக்கு தெரிவித்துள்ளார். அவருக்கு அவர் பயம்.

எது எப்படியோ,கட்சி சார்பில்லாமல் அந்தந்த இடங்களில் இருக்கும் செல்வாக்கு மிக்கவர்கள் சேவை செய்ய நினைப்பவர்கள் நேரிடையாக தலைவராக இனி வருவது இயலாத காரியம். எங்கும் நீக்கமர கட்சிகளின் ஆதிக்கம் வளர்வதற்கு இச்சட்டம் ஏதுவாக இருக்கும்.

Tuesday, July 18, 2006

மாறும் காட்சிகள்!

முந்தைய அ.தி.மு.க அரசு கொண்டு வந்த கேபிள் டி.வி., எம்.எஸ்.ஓ நிறுவனங்களைக் கையகப்படுத்தும் மசோதாவை, மாநில அரசின் அதிகார வரம்புக்குள்படாத சட்ட முன்வடிவு என்று காரணம் காட்டி தற்போதைய தி.மு.க அரசு விலக்கி கொண்டது. கேபிள் டிவி சட்டம் மட்டுமல்ல புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக முந்தைய அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தை அண்ணா பல்கலைக்கழகத்திடமே தற்போதைய அரசு ஒப்படைத்திலிருந்து, விவசாயிகளின் நலன் கருதி உருவாக்கப்பட்ட 'உழவர் பாதுகாப்பு திட்டம்' வரை பல்வேறு திட்டங்களை ரத்து செய்துள்ளது.

ஒரு அரசு கொண்டு வந்த சட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் அடுத்து வரும் அரசு அப்படியே தொடர்ந்து செயல்படுத்தாமல், ஒன்று அத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போடுவது அல்லது அத்திட்டத்தை முடக்குவது என்கிற வழக்கத்தை சமீப ஆண்டுகாலமாக ஆட்சியாளர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

கடந்த 2001ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய அ.தி.மு.க அரசு முந்தைய தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்ட சமத்துவபுரம், உழவர் சந்தை போன்ற திட்டங்களை அப்படியே கிடப்பில் போட்டது. அதுமட்டுமல்லாமல் தி.மு.க அரசால் நியமிக்கப்பட்ட சாலை பணியாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது.பின்பு அவர்கள் நீதிமன்றம் சென்று தங்களுக்கான நீதியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் தி.மு.கவின் தலைமைக்கு நெருக்கம் என்று கருதப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகிகளும் பந்தாடப்பட்டு, தங்களுக்கு ஆதரவானவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டது.

இப்போது பந்து தி.மு.கவின் கையில். மறுபடியும் சட்டங்கள், திட்டங்கள் மாற்றப்படுகின்றன அல்லது வாபஸ் பெறப்படுகின்றன. அதிகாரிகள் பந்தாடப்படுகின்றனர். இதுவரை கிடப்பில் முடங்கி கிடந்த சமத்துவபுரம், உழவர் சந்தை போன்றவைகளுக்கு மீண்டும் புத்துணர்ச்சி அளிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் கழகங்கள் இரண்டுமே ஒருவரை ஒருவர் குறைக்கூறுவதிலும், ஒருவர் மீது ஒருவர் பழிவாங்கும் போக்கை கடைப்பிடிப்பதிலுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது.

மோனோ ரயில் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், கேபிள் டிவி மசோதா என்று வரிசையாக தி.மு.க அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு அ.தி.மு.க பொதுசெயலர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல் ஒரு கோடியே 99 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள், சிறு மற்றும் குறுவிவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கைவிடும் தன் முடிவை தி.மு.க அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசுகள் மாறும் போது முந்தைய அரசின் திட்டங்களை கிடப்பில் போடுவதன் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை, நடுத்தர மக்கள்தான் என்றால் அது மிகையல்ல.

சட்டப்பேரவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் உருவாக்கப்பட்ட சட்டங்களை புதியதாக வரும் அரசு விலக்கி கொள்ளும்பட்சத்தில் அச்சட்டங்களை இயற்றுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது. அது எந்தவகையில் மக்களை சென்றைடயும். இப்படி மாறி மாறி வரும் அரசுகள் முந்தைய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களையும் முடக்கி வைத்தால் மக்கள் நல பணிகள் எந்தவகையில் ஏற்றம் பெறும்.

ஒரு அரசு கொண்டு வரும் நலத்திட்டங்களிலோ அல்லது சட்டங்களிலோ குறைகள் இருந்தால் அவற்றில் சில மாற்றங்களையோ அல்லது அந்த குறைகளை களைந்தோ அத்திட்டங்களை செயல்படுத்த முனைய வேண்டுமே தவிர, அத்திட்டம் கைவிடப்படுவது சரியான தீர்வு அல்ல.

தமிழகத்தில் தொடர்கதையாகி போன இத்தகைய வழக்கங்களினால் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மேல் ஒரு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடுவதற்கு ஏதுவாக இருக்கும். இது ஆரோக்கியமானதும் அல்ல.

ஆட்சி அதிகாரங்கள் மாறலாம். ஆனால் சட்டங்களும், நலதிட்டங்களும் தொடர்ந்து எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு.

Monday, July 17, 2006

#52. கேப்டனை மிஞ்சுவாரா சூப்பர் ஸ்டார்?

ரஜினிகாந்த தொண்டர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் என்ற பெயரில் ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகின்றனர் தென் மாவட்ட ரஜினி ரசிகர்கள், அதில் விரைவில் ரிலிஸாகும் சிவாஜி படத்தை வெற்றி பெறச்செயத கையோடு, நதிநீர் இணைப்புக்கு சூப்பர் ஸ்டார் முழு வீச்சுடன் பாடுபடவேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கின்றனர். அத்துடன் ரஜினியின் இயக்கத்தில் அரசியல், ஜாதி, மதம் போன்ற குறிக்கீடுகளும் என்றும்மே இருக்கக் கூடாது என்று விருப்பம் தெரிவித்திருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

நதிநீர் இணைப்பு என்ற விஷயத்திலாவது நம்ம சூப்பர் ஸ்டார் கேப்டனை மிஞ்ச வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பதுதான் இதற்குப் பின்னணியாம்.

பி.கு : இது தவறுதலாக ஒன்றும் நகைச்சுவை தொகுப்பில் தொகுக்கப்படவில்லை

Saturday, July 15, 2006

#51, சிலையும் சிந்தனையும்

மாவீரன் அலெக்சாந்தரைப் பார்க்க ஒரு விருந்தினர் வந்திருந்தார். அவரை அவன் நன்கு உபசரித்தான். தனது மாளிகையிலேயே தங்க வைத்தான். பிறகு அவரைத் தனது அரண்மனைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.

இருவரும் தோட்டத்தைச் சுற்றி வந்தார்கள். தோட்டத்தில் அநேக பெரிய வீரர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. விருந்தினர் ஒவ்வொரு சிலையிடமும் நிற்பார். அலெக்சாந்தர் அவருக்கு அந்த சிலையின் வரலாற்றைச் சொல்லுவான். இவ்வாறு ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக் கொண்டே தோட்டத்தின் கடைசிக்கு வந்து விட்டார்கள்.

வந்த விருந்தினர் அலெக்சாந்தரைப் பார்த்தார். ''இத்தனை வீரர்களின் சிலைகள் இந்தத் தோட்டத்தில் இருக்கும் போது உங்களுடைய சிலை மட்டும் இங்கு ஏன் இல்லை ?'' என்று கேட்டார்.

''இங்கு என்னுடைய சிலையைப் பார்த்து, இது யாருடைய சிலை என்று வருபவர்கள் கேட்பதை விட, மாவீரன் அலெக்சாந்தருடைய சிலை ஏன் இங்கு வைக்கப் படவில்லை என்று கேட்பதையே நான் விரும்புகிறேன் '' என்று பதில் சொன்னான் கிரேக்க மன்னன்.

வினோபாவின் 'குட்டிக் கதைகள்'

Wednesday, July 12, 2006

தேன்கூடு கதை - ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் வேகமாய் போய்கொண்டிருந்தது, குற்ற உணர்வு மேலிட தலைக்குனித்திருந்தேன்.எனக்கே என் செயல் அருவெறுப்பாய் இருந்தது. நான் அழுவதாக நினைத்து டாக்டர் சொன்ன ஆறுதல் மேலும் அவமான உணர்ச்சியால் குத்தியது
எனக்கு வேறு வழி தெரியவில்லை அந்த இடத்தைவிட்டு அவசரமாய் வெளியே வருவதற்கு, குற்றுயிராக இவரை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது திடிர் சொந்தமாகி வண்டியில்
ஏறிக்கொண்டது அப்பொது சமயோசிதமாக தோன்றினாலும் இந்த அரைமணி நேர பயணத்தில் முற்றிலும் குற்ற உணர்ச்சியே மேலோங்கியிருந்தது.

ஆரம்பத்திலிருந்த அவரிடமிருந்த முனுகல் இப்பொது சுத்தமா இல்லை. முனுகும் போது எங்கே நினைவுவந்து என்னை காட்டிகொடுத்து விடுவாரோ என்று பயந்தது மேலும்
வெட்கமாயிருந்தது.இந்த மாதிரியான உளைச்சலுக்கு பேசாமல் அந்த இடத்திலே இருந்திருக்கலாம் போல மற்றும் ஒரு முறை இப்படி நேர்ந்தால் இப்படி செய்ய கூடாது. ச்சய் என்ன கேவலமாய் இப்படி ஒரு சிந்தனை, மற்றும் ஒரு முறையா? ஐய்யோ!.

திடிரன அவரிடமிருந்து அசைவுகள், காற்றை வேகமாக சுவாசிக்க முயற்சித்தார் வேக வேகமாக பேச முயற்சித்தார் எனக்கு திகிலாக இருந்தது அவரின் அசைவுகள் உதரல்களாக வேகமெடுத்தது டாக்டர் கண்களை சோதனை செயதபோது அவரின் கண்கள் வெளிரிருந்தது
தெளிவாக தெரிந்தது டாக்டர் அவருக்கு ஊசிப்போட்டு அமைதிபடுத்தினார் அருகில் வந்து அமர்ந்த டாக்டர் நம்பிகை இழந்திருந்தார் "ஹாஸ்பிடல் போகறவரைக்கும் தாங்கறது கஷ்டம்
தான்".

எனக்கு பெரும் திகிலாக இருந்தது, கடவுளிடம் அவரை உயிர் வாழவை என்ற வேண்டுவதற்கு கூட குழப்பமாயிருந்தது. அவர் இறந்துவிட்டால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது ச்ச ச்ச அவர் ஏன் சாகனும். கடவுளே!. சரி ஹாஸ்பிடல் போனபிறகு
அவருடைய உறவினர்களுக்கு தெரியபடத்தனுமே அவங்க யாருன்னு தெரியாதே நமக்கு அவருடைய கைப்பை பார்ததா எதாவது தெரியலாம் பைல டைரி மாதிரி ஒரு நோட் புக் மட்டும் இருந்தது அப்பா கண்டிப்பா எதாவது குறிப்பு இருக்கும். அவசர அவசரமா
புரட்டினா ம் எதுவும் தெரியல அவருடைய டைய்லி(daily) குறிப்புகளா தான் இருந்தது.

திரும்பவும் அவரிடமிருந்து சத்தம் டாக்டர் வேகமா எழுந்து அருகில் சென்றார் எனக்கு இதயம் நின்றுவிடும் போலிருந்தது. பெரும் முச்சிரைப்பு, டாகடர் வேகமாக நெஞ்சில் அறைந்தார். மீண்டும் ஒரு நீண்ட முச்சி இழுப்பு, பல அறைகள் எந்தவித பலனும்மில்லாமல்
அமைதியானார். என் மனது ஈரம் தோய்ந்த பஞ்சுப்போல கனத்துப்போனது.

டாக்டர் டரைவரிடம் எதாவது std பார்த்து நிறுத்த சொல்லிவிட்டு அருகில் வந்து வீட்டுக்கு சொல்லிட்ங்கன்னார். எனக்கு என்ன சொல்லுவதுன்னு தெரியல ஆனா அப்பவும் உண்மை சொல்ல தைரியம் வரல அதுவும் இல்லாம யாரு அவருடைய சொந்தம் எங்க
இருக்காங்க தெரியாது. நான் அமைதியா இருக்கறதை பார்த்திட்டு டாக்டர்,

கஷ்டம்தான் ஆகவேண்டியத பாருங்க.

இல்ல டாகடர் சொந்தம் இல்ல

ஒ சொந்தம் இல்லையா நீங்க மட்டும்தானா?

ம்.

சரி அப்போ cemetery போகலாமா?
இல்ல எலக்டிரிக் ஃப்ர்னஸ்.

அப்படியே விட்டுவிட்டு ஓடிடலாமான்னு தோணுது யாரோட அப்பாவோ? யாரோட கணவரோ? அப்படி ஓடிப்போனா இவங்க ஆனாத பிணமா எரிக்க போராங்க. மனசு அடிச்சிகுது எப்படி பட்டவரோ இபபடியா ஆகணும். கூடாது. என்ன ஆனாலும் சரி
யாரவது வந்து கேட்டா சொல்லிக்கலாம். இப்போ நாமலே கூட இருந்து செய்துடலாம்.

எரிச்சிடலாம் டாக்டர்.

முழுசா உள்ள போனவர் வரும்போது ஒரு சின்ன பொட்டலமா என் கையில் எனக்கு நிஜமாகவே அழுகை வந்தது. எதற்காக அவசர அவசரமா அந்த பாம் வெடிச்ச் இடத்திலிருந்து வந்தேனோ அது எல்லாம் மறந்து கனத்து நெஞ்சோடு என் இடம் வந்து
சேர்ந்தேன்.

வாட்ச்மெனிடம் ரும் சாவி வாங்கி போகும் அவன் "சார் நாளைக்கு நம்ம ஆனாத ஆசிரமத்துக்கு வருவதாயிருந்த மந்திரி வரலையாம் சார்".

என்னிடம் பெரிதாய் அதிர்ச்சியை எதிர்ப்பார்த்தவனிடம் எதுவும் சொல்லாமல் என் அறைக்கு வந்தேன். கனத்த நெஞ்சு உடைந்து வெகு நேரம் அழுதபடிய இருந்தேன். ஏதோ நினைத்து
கொண்டவனாக அந்த நோட் புக்கை மறுபடியும் புரட்டினேன். கடைசிக்கும் முதல் பக்கதில் எழுதுயிருந்தது.

My father and mother are dead,
Nor friend, nor relation I know;
And now the cold earth is their bed,
And daisies will over them grow.

an orphan

Thursday, July 06, 2006

நாய் குரைப்பின் காலங்கள்

நாய்க் குரைப்பின் பொருள் என்க்குத் தெரியும்போது
என் பொருள் சிக்கலும் விடுபட்டுப்போகும்.
என்னைச் சுற்றிச் சதா இந்த நாய்க் குரைப்பு
என் குடியிருப்பு அப்படி.

நாய்க் குரைப்பின் பொருள்பற்றி நான்
யோசிப்பது ஏனெனில்
வேறெங்கும் பொருளற்ற திவிரம் இப்படிப்
பீறிடுவதை நான் கண்டதில்லை என்பதாலேயே.

தன் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவையும் குவித்து
அடி வயிற்றை எக்கி,
சூன்யத்தில் தலை தூக்கி,
நாய்க் குரைப்பதை நீங்களும் கவனித்திருப்பீர்கள்.

நாய்களுக்கு அவற்றின் குரைப்பின் பொருளோ
பொருளின்மையோ தெரியும்போது
அவை எப்படிக் குரைக்கும்?

குரைக்குமா?

ஒருசமயம் அவை குரைப்பதை விட்டு
வாலை மட்டும் ஆட்டிக்கொண்டிருக்கலாம்.
அந்தக் காலம் இப்போதைவிடவும் நன்றாக இருக்கும்.

...பசுவய்யா