Friday, October 26, 2007

அம்மு நீ

உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

Wednesday, July 25, 2007

கிணற்று தவளையும் , கடவுளும்




ஒவ்வொரு நாளும் அதிகமாகிறது
மேலிருந்து விழும் காசுகள்

வழவழப்பான குழாங்கற்களை விட
கூரான காசுகள் நிறம்பி தலும்புகிறது கிணறு

மேலிருந்து விழும் சல்லி காசுகளுக்கு பயந்து
சுவற்றோரம் தேம்பியே நிற்க வேண்டியிருக்கிறது

கடவுளுடனான எந்த பரிவர்த்தனை இங்கு
நடைபெற வாய்பேயிலலை. இங்கு கடவுளே
இல்லை. நிற்க

நான் கிணற்று தவளைத்தான் அதனால் தான்
சொல்லிகிறேன் இந்த கிணற்றில் கடவுள்
இல்லை.

Monday, May 07, 2007

எல்லாம் தானாய் மாறும் என்பது பழைய பொய்யடா.


எல்லாம் தானாய் மாறும் என்பது பழைய பொய்யடா.

Thursday, April 19, 2007

என் தனிமை.

வலைபதிவு கூட்டியில்
படித்து எழுதியும்
எழுதி படித்தும்
தலைபிராண்டி வலை மேய்ந்து கொண்டிருக்கும்
ஒற்றை வாசகனின்
துக்கங்களோடும்
புரிதல் இல்லா பின்நவீனத்துக்கப்பால்
அடர்ந்த கருத்தியலில்
தள்ளி நின்று
அதன் வேடிக்கை கொண்டுவரும்
சந்தோசங்களோடும்
நட்சத்திரங்களுக்கூடாய்
எதிலும் ஒட்டாது
(வலை)மேகம் பிடித்து தொங்கி கொண்டிருக்கிறது
என் தனிமை.

Wednesday, March 28, 2007

முதல் வெண்பா





சுவாசித்து கொண்டு ஆயுள் கடந்தாலும்
நேசிக்க ஓர்யுவதி வேண்டி - நான் சுநுக்க
கட்டுமரம் மீதமர்ந்து வந்த நீனக்கு
காண கிடைக்காத கணா.


பி.கு
ஆள பார்த்த ஜோர்ல எதோ எழுதிட்டேன், அங்க இங்க சீர் தட்டுனா பொருத்தருள வேண்டும் பெருந்தலைகளே :-)

Tuesday, February 27, 2007

நெடுங்குருதி


கொஞ்சம் பிரபலமான தொலைகாட்சி இயங்குனர் இயக்கிய கேப்டன் படத்தில் வரும் சில காட்சிகள் நெடுங்குருதியின் சில நிகழ்வுகளின் தழுவல் என்று நண்பனின் வியாக்கியானமே நெடுங்குருதி நாவல் பற்றியான அறிமுகம் எனக்கு.

எஸ். ராமகிருஷ்ணன் எழுதி உயிர்மை வெளியிடான நெடுங்குருதி நாவலை வாங்கும் போது அதன் தடிமன் சொல்லியது பெயரை போலவே மிக நீண்ட நாவல் என்று.

வெயிலும் வெயில் சார்ந்த வேம்பலையின் நிலவெளியை சுற்றி வருகிறது கதை, என் குளிருட்டபட்ட அறையையும் மீறி வெயிலின் வெக்கையை உண்ர்த்துகிறது ஆசிரியரின் எழுத்து. ஊரின் சுபாவம் மக்களின் மீது படிந்து விடுகிறதா? அல்லது மக்களின் சுபாவம் ஊரின் மீது படிகிறதா? வெயில், வசந்தம், மழை என முறையே காலங்களில் பயணிக்கும் கதையில் கதை மாந்தர்களின் சுபாவங்களில் முறையே அந்த அந்த காலங்கள் வெளிப்படுவது யதார்தம்.

வேம்பலையின் மக்கள் கதைகளில் சொல்ல மறந்து போனவர்கள், அவர்களது நம்பிகைகளும் வாழ்வியலும் பதிவு செய்யாமல் விடுபட்டு போனவைகள்.

இந்த நாவல் ஒரு மேஜிக்கல் ரியலிச முயற்சி என்று நண்பர் சொல்ல கேள்விப்பட்டேன் அப்படியெல்லாம் இல்லை என்றார் மற்றொரு நண்பர்.மேஜிக்கல் ரியலிச என்றால் என்ன என்றே தெரியாத நான் விவாதத்துக்குள் இறங்குவது சரியல்ல ஆனால் ரொமான்டிசிசஙகளுக்கான மிகை உணர்ச்சி இருப்பதாக படுக்கிறது இதுபோல.

"விட்டின் மீது பூனை போல ஏறி வரும் வெயிலை நோக்கி
என்னடா பெரிய மசுருன்னு நெனப்பா? வந்தேன் வக்காளி வகுந்துடுவேன்."

Monday, February 26, 2007

வந்தியதேவனும் பந்திய குதிரையும் (சோதனை பதிவு)

வந்தியதேவனுக்கு அவன் பெயர் பிடிக்காது, சின்ன வயதிலிருந்தே ஏம்மா இப்படி பெயர் வச்சேன்னு கேட்டு கேட்டு அலுத்துக்குவான். கல்கி, ராஜா, குதிரை இப்படி அம்மா சொன்ன எதுவும் அவனுக்கு ஒப்புதல் இல்ல.

மத்த நாள் எப்படியோ சனி ஞாயிறு வந்துட்டா பள்ளிகூடம் போகறது பிடிக்கும் காலையில வந்து மைதானத்துல விளையாட ஆரம்பிச்சா மதியம் அப்படியே மரத்தடியில தூக்கம். தூக்கமுன்னா தூக்கம் வந்தியதேவா வந்தியதேவான்னு அம்மா கூப்பிட்டு மதிய சோறு ஞாபக படுத்துற வரைக்கும் அப்படி ஒரு தூக்கம்.

இதோ ஞாயிறு, பள்ளிகூடத்துக்கு கிளம்பியாச்சு. சிறிது நேரத்துக்கு மேல வெயில் அதிகமாக, மரத்தடியில் வந்து அமர்ந்து அந்த பறந்த மைதானத்தை வேடிக்கை பார்க்கும் போது தான் அந்த அந்த குதிரை மைதானத்தில் நுழைந்தது.

முன்பே அவனுக்கு தெரிஞ்ச குதிரைதான் ஒரு முறை சுந்தரோட மைதானத்தில் விளையாடியபோது சுந்தர் பந்தயம் கட்டி சவாரி செய்த குதிரை தான். தானும் வீராப்பா சவாரி செய்ரேன்னு அது மேல ஏறி பிடிக்க ஏதும் இல்லாம அதோட பிடரிய பிடிக்க குதிரை தறிக்கெட்டு ஓடி தள்ளி விட்டது ஞாபகம் வந்து போனது.

Friday, February 23, 2007

b12,


b12,
12b படத்தின் விமர்சனத்தை தான் b12 ன்னு மாற்றி எழுதிட்டதா நினைத்துவிடாதிர்கள், இது வேறு. இதோ இந்த படம் valentine's day தினத்தில் ஊடகங்களில் வெளியானது. இது sci-fi படத்துல வருகிற பூங்கொத்தோ அல்லது ஏதோ ஒரு galaxy படம் போல ஆச்சர்ரியமானதல்ல, இருந்தும் AIDS எதிரான மனிதனின் முயற்சியில் வெல்வதற்கான சத்தியமான நம்பிக்கை தருகின்ற படம்.
இது பற்றியான தொடுப்பு.

Friday, January 12, 2007

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Wednesday, January 10, 2007

சாம்பார் ஷாஜி மற்றும் ஜெமினி கணேசன்

ஒரு முன்னிரவில் டிவீயில் மிஸ்ஸியம்மா படம் பார்த்துக்கொண்டிருந்த போது ஏன் ஜெமினிக்கு சாம்பார் ன்னு செல்ல பெயர்? தெரியுமா? கேட்டேன் எப்பவும் எதுக்கும் பதில் சொல்கிற மணி. டேய் நமக்கு மெய்ன் சாப்பாடு சோறுதான். அதோட சேர்த்து அடிக்கிறதுதான் சாம்பார் அதுபோல சாவத்திரி மெய்னா நடிக்கிற படத்தில் எல்லாம் சைடுல சேர்ந்த்து நடிக்கிறது சாம்பார் தான் சொன்னான். அப்படியா?

சரி சாப்பாட்டு விஷயத்துக்கு வருவோம். தமிழர்களின் தினசரி உணவாகி போன சாம்பாருக்கு எப்படி அப்படியொரு பேரு?

தஞ்சாவூரை ஆட்சி செயத மராத்திய மன்னர் ஷாஜி என்பவர்தான் சாம்பாரை கண்டுபிடித்தார். பருப்புடன் புளி கரைசலை சேர்த்து அவர் குரங்குபிடிக்க(மன்னருக்கு இதுக்கு எல்லாம் நேரம் இருக்குமா?) அதுக்கு அவர் உறவினர் பெயர் சாம்பாஜி 'யை வைக்க சாம்பார் ஆனது.

அதுக்கு அப்புறம் நம்ம அளுங்க பலபல டைப் சாம்பாரை வச்சு அசத்திகிட்டு இருக்காஙக. தமிழனக்கு சாம்பார் வைத்து கொடுத்த மராத்திய மன்னரே ஷாஜி. நீன் புகழ் வளர்க.

Tuesday, January 09, 2007

"The Zahir".


Alchemist அடுத்து Paolo Coelho எழுதி சமிபமா நான் படிச்சி முடிச்ச புதினம் "The Zahir". Zahir ன்னா அரபியில் மோகம்(Obsession). எண்ணங்கள் முழுவதும் ஆட்கொள்கிற மோகம். அதுவன்றி வேறு எதுவும் எண்ணாது ஒரு வகையான மோக நிலை அல்லது பிதற்ற நிலை.

ஒரு நாள் திடிரன எதுவும் சொல்லாம காணாம போகற தன்னுடைய மனைவி எஸ்தரை தேடி பயணம் செய்யும் புகழ்பெற்ற எழுத்தாளர் எப்படி அந்த தேடுதல் வழியா உண்மை அன்பை தெரிஞ்சிக்கிறார் என்பது தான் கதை.

Alchemist போல் இல்லாம் என் அளவில் சற்று ஏமாற்றம் அளிக்ககூடியதாகவே இருக்கிறது இந்த நீளமான புதினம்
எழுத்தாளர் அடிப்பட்டு தான் பிழைப்போமான்னு கேள்வி எழுப்பும் போது டாக்டர் சொல்கிற ஆப்பிள் கதை. ஏன் ரயில் தண்டவாளம் அந்த இடைவெளியில் இருக்கு? அப்படி அங்க அங்க சுவாரசியம் இருந்தாலும். ஏன் எது எதுக்கு "ஸாகிர்" அப்படிங்கறது குழப்பமாகவே இருக்கு.

Wednesday, January 03, 2007

கழிப்பறையின் நடுவே

ஆண் பெண் கழிப்பறையின் நடுவே
தயக்கமாக
முகச்சவரம் செய்த பெண்.