Tuesday, May 30, 2006

நானும் காற்றில் கத்தி வீசுகிறேன்

யாரின் முகமூடி கிழிக்கவோ
திறந்த முகத்தில்
குத்தி கூர்பார்கவோ அல்ல

எமக்கான விளையாட்டு
காற்றில் கத்தி வீசுவது

என் தூரம் அறிந்தே வீசுகிறேன்
எல்லைக்கு உட்பட்டு

மழுங்கிய கத்தி கொண்டே
வீசுகிறேன்
காற்றை கிழிக்கும்
ஓசை எனக்கானது

காற்றின் அறைகூவல் வீசட்டும்
மணலில் கத்தி சொருகி
நிலை கொண்டிருப்பேன்
அது ஓயும்வரை

ஒளி, ஒலி பிழை
இருக்கலாம்
காற்றை கிழிப்பதில்
இருக்கிறது விளையாட்டின்
வெற்றி எனக்கும்
பிரிகையில் காற்றுக்கும்

இதுவரை தோற்றாலும்
இது ஒரு விளையாட்டு
அவ்வளவே!

Monday, May 29, 2006

குஷ்பு பார்க்க போன முருகன்

அதோ அந்த ஓரத்துல நிக்குறானே அவன்தான் முருகன்.நாங்க பிஸ்சி படிக்கும்போது எடுத்தது.பாண்டிசேரி தான் அவன் சொந்த ஊர். ஆரம்பத்தில படம் வரைவதில் எனக்கும் அவனுக்கு உரசலிருந்தாலும் அந்த திறை விலக்கி வெக்கப்படுற குஷ்பு படம் வரைஞ்சதலிருந்து அவன்தான்னு முடிவாகி திக் ஃப்ரண்ட்ஸாகிட்டோம்.

அவன் அறை முழுவதும் கட்டுடைத்தலைவின் படம்தான் எப்படியிம் அவஙகள நேர்ல பார்த்திடனும் சொல்லிகிட்டே இருப்பான் அதுவும் இந்த வேலு இருக்கானே அதுக்கு தூபம் போடறதே வேலை.இப்படித்தான் லீவுக்கு கோபிச்செட்டிப்பாளையம் போயிவந்த வேலு அங்கன எடுத்த ஃபோட்டோ காட்டி ரொம்ப அலும்பு பண்ணிட்டிருந்தான் தோ இந்த மரத்த பாரு இங்கன தான் சின்னதம்பி படத்தில குஷ்பு உக்காந்த ஆடுன மரம், இதோ
இந்த வாய்க்கால்லதான் பாவடை நனையாம் தூக்கிட்டு ஒடுவாங்களே, கடைசியா "குஷ்புபிரபு" ஆட்டொகிராப் வேற. நம்ம முருகனுக்கு ஜுரம் ஏறிக்கிட்டே இருந்தது.

ஏய் வாடா மெட்ராஸ் போய்பாக்கலாம்? வாரம் முழுக்க நச்சரிப்பு தாங்கமுடியல. ஏய் செமஸ்டர் வருது பிறகு போகலாம்ன்னு அவன சரிக்கட்ட உம்பாடு எம்பாடு ஆகிப்போச்சு. ஒருவழியா செமஸ்டர் முடிஞ்சு திரும்பவும் இவன் நச்சரிப்பு தாங்கமுடியல. சரி லீவுக்கு ஊருக்கு போக முன்ன மெட்ராஸ் போயிட்டு போகலாம்ன்னு ஆச்சி.பிரஸ் வள்ளியப்பன், நந்தா, வேலு, முருகன் எல்லாரும் வெள்ளி மெட்ராஸ் போறதா முடிவு. தங்கறது வள்ளியப்பன் ஃப்ரண்ட் துரையோட அஷோக் நகர் கெஸ்ட் ஹவுஸ். நாங்க யாரும் அதுவரைக்கும் மெட்ராஸ் போனதில்ல அதுதான் முதல்பயணம்.

11மணிக்கா பர்ரிஸ்ல இறங்கி முத்திரசந்துல, ஏங்க அஷோக் நகர் இங்கயிருந்த நடந்து போகலாம்ன்னு? கேட்க்க அவரு ஊருக்கு புதுசா? அதோ அந்தாண்ட நிக்கிற 70 சிரிஸ்ல ஏறிப்போ. அஷோக் பில்லர் போகுமாங்க? போகும் போகும்.

பில்லர் வந்து இறங்கினா நல்ல இருட்டு ஆள் நடமாட்டமே இல்ல. டேய் இங்கதாண்டா அவின்யு ரோடு சிக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் அதோ அந்த 64ஆம் நம்பர் வீடுதான்டா. ஏங்க தங்கராசு வீடுங்களா? டேய் துரை வீடுடா டேய் துரை அப்பாதான் தங்கராசு. அப்படி யாரும் இல்லங்க ராத்திரி தொந்தரவு பண்ணக்கடுப்பு தெரிஞ்சிது அவரு சொன்ன பதிலுல.அவின்யு அவின்யுவா சுத்தி சூரியன் தியேட்டர் எதிர் சிக்னல் ரோட்ல நின்னு சினிமாவுக்கு போலமான்னு பார்த்தா மணி 1ஆகி போச்சு. ஆள்அரவுமில்லாத ரோட்ல லைட்டு வெளிச்சம். சரி அட்ரஸ் கேக்கலாமுன்னு பார்த்தா போலிஸ் ஜீப்.

ஏய் இங்க என்னடா கூட்டம்? இல்ல சார் ஊர்லிருந்து வரோம் அட்ரஸ் தேடுறோம். சரி சரி இங்கல்லாம் நிக்க கூடாது போங்க போங்க. திரும்பவும் அங்கயே போய்பாக்கலாம்டா? நந்தா சொன்னா சரிதான்னுட்டு திரும்பவும் அந்த அவின்யு போன அந்த 64ஆம் நம்பர் வீடுகிட்ட ஒருத்தர் நின்னு நாங்க வர்ர வழிய பாத்தபடி இருந்தார்.

ஏன் தம்பிகளா லேட்டு? சமைச்சு வச்சிருக்கேன் வாங்க சாப்பிடலாம். யோவ் இரண்டு மணி நேரத்திக்கு முன்னால இந்த சீழ்வீட்ல கேட்டதுக்கு அப்படில்லாம் யாரும் இங்கல்ல தொரத்துனா ஒருத்தன் என்ன ஊருடா இது? மேல் வீட்ல யாரு இருக்கான்னு தெரியாம? கடுப்பானான் வள்ளியப்பன்.

மறுநாள் காலையில முருகனுக்கு கடும் ஜுரம் குஷ்பு ஜுரம் இல்லிங்க நிஜ ஜுரம். சரி விடுடா அப்புறம் பார்த்துக்கலாம் சொன்ன கேக்க மாட்டேன்கிறான். அடாது மழை பெய்தாலும் விடாது குஷ்பு படம் பார்க்கிறவனாச்சே ஆள் சொல் பேச்சு கேக்கறமாதிரில்ல.இரண்டு கொரோசின் மாத்திரைய முழிங்கிட்டு பில்லர் ஸ்டாப்ல பஸ்க்கு வெயிடிங்.

அடிச்சி புடிச்சி சைதாப்பேட்டை வந்த மந்தவெளி பஸ் ஏறுனா நம்ம முருகன் செம்ம டயடு நிக்க முடியா கம்பி புடிச்சி சாஞ்சி நிக்கிறான் அடுத்த ஸ்டாபுல ஏறுன அட்ட ஃபிகர் மேல் தெரியாம இடிக்க அது சுல்லுன்னு எரிச்சி விழ பையன் ரொம்ப நொந்துட்டான்.

ஒருவழியா மந்தவெளி வந்து சீப்ரொஸ் அப்பார்மென்ட் தேடியலஞ்சோம் ஏன்னா அங்கதானே கட்டுடைத்தலைவி இருக்காங்க. இங்க வந்து கேட்டா அவங்க மாத்திட்டு போயிட்டாங்க! ஸ்ஸப்பா.. அவங்க எப்பவும் ஆட்டோ வலதான் போவங்க அந்த ஆட்டோ ஸ்ட்ண்டல கேட்டுப்பாருக்ங்க. அண்ணே குஷ்பு இப்போ எங்க இருக்காங்க தெரியுமா? அவங்க போட் க்ளப் ஏரியாவுக்கு மாறிட்டாங்க 80பது கொடுங்க போகலாம் இல்லண்ணே வேணாம்.

டேய் உன்னால நடக்க முடியுமா? பார்த்தா ரொம்ப டயடாயிருக்க? வேணாம்டா அப்புறம் ஒரு நாள் பாத்துக்கலாம்.
இல்லடா இவ்வளவு தூரம் வந்துட்டோ ம். போய் பாத்துடலாம்டா?
டேய் நீ சொன்னா கேக்க மாட்ட ம்!

அப்பா ஒருவழியா போட் க்ளப் வந்துட்டோ ம் அங்கப்பாரு ஃபோட் இதுல அவங்க வீட எங்க கண்டுபிடிக்கிறது.
ஹாய பாப்பா குஷ்பு வீடு எங்க இருக்கு?
குஷ்பு ஆன்டி வீடா? அதோ அந்த ரைட்டு டேன் இரண்டாவது வீடு.
முருகனுக்கு செம்ம குஷி கிட்டதட்ட ஒடினான்.

யாரு?
குஷ்புவ பாக்கனும்.
அவங்க இல்ல வெளி ஊர் ஷுட்டிங் போயிருக்காங்க
இல்லங்க ரொம்ப தூரத்துலிருந்து வரோம்.
இல்லப்பா அவங்க ஜாதி மல்லி ஷுட்டிங் ஊட்டி போயிருக்காங்க
கார் நிக்குது?
ஊட்டிக்கு கார்லயா போவாங்க? இருங்க
உள்ள போயி ஃபோன்ல பேசினான் வாட்ச்மேன் பேசின கொஞ்ச நேரத்தல ஒரு அம்மா இரண்டு குஷ்பு ஃபோட்டோ கையெழுதோட
கொண்டுவந்து கொடுத்துட்டு போனாஙக.

வாட்ச்மேன் வந்து எங்ககிட்ட அந்த ஃபோட்டோ கொடுத்துட்டு அங்க வர ஒரு வாரம் ஆகும்.

சரி இங்க ஃபோட்டோ வது எடுத்துக்கிறோம்
இல்லங்க அதெல்லாம் முடியாது
நீஙகளும் நில்லுங்க பிளிஸ்..
சரி சரி சிக்கிரம்.
ஏய் அவங்க கார் நம்பர் ஃபெளேட் தெரியரமாதிரி எடு?
ஏய் நீ வரலயா? போடா இவனோட எல்லாம் ஃபோட்டோ எடுத்துக்க முடியாது
ரொம்ப தங்ஸ்ங்க உங்க பேரு
சுரேஷ்
எவ்வளவு நாளா வாட்ச்மேனா இருக்கிங்க?
இபபதான்
...
...
சரி அப்போ நாங்க வரோம்
இருங்க
இன்னும் இரண்டு ஃபோட்டோ கொடுத்தான்

சரி வரோம் சுரேஷ்
ம் மறக்காம் இப்ப எடுத்த ஃபோட்டோ எனக்கு அனுப்புங்க சரியா

ம் கண்டிப்பா.

Friday, May 19, 2006

வயசாளிகளும், சம்சாரிகளும்...

கடந்த சில வாரங்களா என் அறையில் வயசாளிகளும், சம்சாரிகளும் நாயக்கர்களும் நடமாடி கொண்டிருந்தார்கள். ஆமாங்க ஒவ்வொரு இரவும் கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்' நாவலை படிக்கும்போது இப்படிதாங்க உணர்ந்தேன்.

துனை இயக்குனர் நண்பரிடம் முதல் மரியாதை படம் பற்றி பேசி கொண்டிருக்கும்போது அந்த கட்டை விரல் சீன் இந்த 'கோபல்ல கிராமம்' த்திலிருந்துதான் சுட்டது (உணமையா?) அப்படின்னாரு நாவல் இருந்தா கொடுங்களேன் வாங்கி படிக்கி ஆரம்பித்ததுதான். கரிசல் நிலத்தின் ஆடு மாடு குருவி ஜனங்க இப்படி எலலாத்தையும் அறிமுகப்படுத்தற அருமையான folklore நாவல்.

மற்ற நாவல்கள் போல இல்லாம இஷ்டப்பட்டபோது சரித்திரம் பேசி ஒரு இடத்தில் விட்ட கதை வேறு எங்கையோ தொடர்கிறது.நெருக்கடியான அளவுக்கு கதை மாந்தர்களிருந்தாலும் இவர்தான் கதை நாயகன் என்று சொல்ல முடியவில்லை.

தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டு துலுக்கர்கள்( அப்படித்தான் ஆசிரியர் குறிப்பிடுகிறார்) தொந்தரவினால் தென்னிந்தியாவிற்கு வந்து இந்தக் கலாச்சாரத்தில் ஒன்றுபட்டு வாழும் ஒரு தனிப்பட்ட இனத்தினரின் வசீகரமான கதை. கிடைத்தால் படித்து பாருஙகள்.

Thursday, May 18, 2006

கவிதைக் கலை

ஆர்க்கிபால்ட் மேக்லீஷ் (அமெரிக்கா)
தமிழில் - பிரம்மராஜன்

நவீன அமெரிக்கக் கவிஞர். கவிதைக்கான புலிட்ஸர் விருதினை 1932-ஆம் ஆண்டு பெற்ற ஆர்க்கிபால்ட் மேக்லீஷின் கவிதைகளை வகைமைப்படுத்துவது எளிதல்ல. உணர்ச்சி நிறைந்த கவிதைகளையும், பொது வாழ்வுக்கான அதிகமாய் எளிமைப்படுத்தப்பட்ட கவிதைகளையும், சிக்கலான கவிதைகளையும் எழுதியிருக்கிறார். கவிதைக் கலை என்கிற கவிதை அதிகம் பிரபலமானது மட்டுமின்றி அதிகம் மேற்கோள் காட்டப்படுவதும் கூட.

ஒரு கவிதையிருக்க வேண்டும்
உணர முடிவதாய்
உருண்டு திரண்ட பழம் போல மெளனமாய்

பேச்சற்று
புராதனப் பதக்கங்கள் கட்டை விரலுக்குத் தட்டுப்படுவது போல்

பாசி வளர்ந்து படிந்த
கைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்
போல மெளனமாய்

ஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்
பறவைகளின் பறத்தல் போல

நிலா உயர்வதைப் போல்
காலத்தினுள் கவிதை -யக்கமில்லாதிருக்க வேண்டும்

-ரவு பின்னலிட்ட மரங்களைக் குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக நிலா
விடுவிப்பது போல,

பனிக்காலத்து -லைகளின் பின்புறமிருந்து நிலா
ஞாபகம் ஞாபகமாக மனதை விடுவிப்பது போல

ஒரு கவிதை காலத்தினுள் சலனமில்லாதிருக்க வேண்டும்
நிலா உயர்வது போல்

ஒரு கவிதை சமானமாய் -ருக்க வேண்டும்
நிஜத்திற்கு -ணையாய் அல்ல

எல்லாத் துயரத்துக்கும்
ஒரு வெற்று வாசலைப் போல
மேப்பிள் மரயிலையைப் போல

காதலுக்கு
தலைசாயும் புற்கள் மற்றும்
கடலுக்கு மேலாக -ரண்டு வெளிச்சங்களைப் போல

ஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது
கவிதையாகயிருக்க வேண்டும்

Wednesday, May 17, 2006

once i saw a rainbow




don't ask me when
don't remind me of then

i don't know
but,
once i saw a rainbow

Monday, May 15, 2006

சைபர் உறவுகள், கான மழையடி நீயனக்கு


மீயான்மர், யங்கூன் வீதியில் ஒரு விடுதியில், நான், அவன், எங்களோடு வந்திருந்த ஹொலண்ட்'காரன் கைகளில் பியர் பாட்டலோடு உணவுக்காக காத்திருந்த போதுதான் அந்த மூனு பெண்களும் வந்தார்கள்.

வந்தவர்கள் நேராக அறையின் நடு மேடையில் ஏறி ஒரு பெண் மைக் பிடிக்க மற்ற இருவரும் டரம்ஸ், கீபோர்ட்க்கு பின்னே இருந்த நாற்காலியில் அமர்த்தார்கள்.மைக் பிடித்து பாட ஆரம்பித்த அந்த பெண்னிடம் நிறையவே சீனப்பெண் சாயல். பாடிக்கொண்டிருந்த ஆங்கில பாடலுக்கு அப்புறம் அவள் கவனம் எல்லாம் எங்களோடு வந்த ஹொலண்ட்'காரன் மேல்தான் இந்த ஐரோப்பிய மோகம் கிழக்கு ஆசிய நாடுகளுக்கே வியாதி போல
இனி இவன் கிளம்புவது கடினம்தான்.

சரி இவன் தான் அப்படின்னு அவன பார்த்தால், அவன் நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்னை வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டிருந்தான்.டேய் என்னடா இது. ஆமாம்டா சொல்லிருக்கிறேன்ல்ல ச்ட்ல(chat) பர்மா பாடகின்னு அவதான்டா இவ. நிஜமா? அப்பதான் அவளை உற்று கவனித்தேன் கறுப்பு நிற நீளமான பாவடை சிவப்பு நிற மேற்சட்டை நீளமான கருமையான கூந்தல் தல குளிச்சி இருப்பா போல அப்படியே விட்டிருந்தா காதோரமா இருந்த செம்பருத்தி பூ, பெரிய கண்கள், கூர்மையான நாசி குவிந்த சிறிய உதடுகள், ஏய்!! ரொம்ப அழகா இருக்காடா.அதுசரி ஏன்? உன்னை கண்டுக்கிட்ட மாதிரி தெரியல? ஏன் ஃபோட்டோ எதுவும் தரவில்லையா? ம் தந்தேன் உன்னோடத, பார் அப்ப அப்ப உன்ன திரும்பி பாக்குறா பாரு. எனக்கு எப்பவும் எல்லோரும் என்னையே கவனிக்கிறதா ஒரு இது இருக்குறதா சொல்லி குரங்கக்கூட எல்லாரும் இப்ப்டித்தான்.. ன்னு உதாரணம் சொல்லற இவனா இப்ப்டின்னு குறுகுறுன்னு அவளை பார்த்தால் ஆமாம் பார்க்கிறாள் \o/ மெலிதாக
ஆ(க)ர்வம் கூட அவனை திரும்பிபார்த்து என்னது என்னோட ஃபோடோ தந்தியா? ஆமா, ஃபோட்டோ கொடுத்த மறுநாளிலிருந்து அவள் பேசுவதே இல்லை /o\ டேய் இதல்லாம் அதிகம்டா. இல்லடா நிஜமா அவளை கட் பண்ணதாண்டா.. சொல்லிட்டு நக்கலா சிரிச்ச பிறகுதான் அவன் அளக்குறான் தெரிஞ்சது. டேய் டேய் ரொம்ப அளக்காத மூடு சரியா.

இதற்கு இடையில் அவள் பாட வந்தாள் பர்மீஸ் பாடல் புரியவில்லையே தவிர குரல் இனிமையாகவே இருந்தது அதைவிட இடது ஆள்காட்டி விரலாலும் நடு விரலாலும் கண்ணுக்கு அருகே முடி விழவிழ தள்ளிவிட்டுக்கிட்டே பாடுறது ரொம்ப அழகு. நல்ல உயரம், மெதுவான அசைவுகளுடன் கண்கள் மூடி இதமான இசை

புல்வெளியில் எப்போதும் இருக்கும் அமைதி
மழைக்குமுன் எப்போதும் இருக்கும் வாசனை
...
என் புன்னகையில் எப்போதும் இருக்கும் நீ

அவங்க கடைய கட்டுறவரைக்கும் ரசிச்சுகிட்டிருந்தோம் கடைசியா பில்லுக்கு மிச்ச சில்லரை எடுத்துட்டு வந்த சிப்பந்தி சினனதா ஒரு கடுதாசி கொடுத்துட்டு போனான் அதுல "வருத்தம் தெரிவிப்பிர்கள் என்று எதிர்பார்தேன்" எழுதியிருந்தது. என்னடா இது? அதற்கு அவன் அதான்
சொன்னேல்ல அவதான் கொடுத்துட்டுப் போறா. என்னடா என்ன விசயம் சொல்லு? அந்த பொண்ணுதான இவ? ச்ட்ல என்ன பேசித்தொலச்ச சொல்லுடா? ஏய் ரொம்ப அலட்டிக்காத வா நாளைக்கு சிக்கிரம் ஃகளையன்ட் பார்க்க போகனும். அவசரமா அவன் பேச்ச மாத்தறத பார்த்தா பையன் ஏதோ விளையாடியிருக்கான் தெரியுது.மறுநாள் காலை வண்டில ஏறுகிறவரைக்கும் உம்ம்ம் தான். தெரியம் அவன் இதபத்தி சொல்லப்போறதுல்லன்னு.

திடிரன மெதுவாக பயணிக்க தொடங்கியது வாகனம் முன்சீட்டிலிருந்து பின்புறமாக திரும்பி எங்களிடம் சொன்னார் இதுதான் ஆங் ஸன் சூகி (Aung San Suu Kyi) யை வீட்டுக்காவலில் வைத்திருக்கும் இடம். யாரு அவங்க? ஏன் வீட்டுக்காவல்? இது அவன்.பின்புறமாக திரும்பி பேசுவது அவருக்கு ஒருவித இடைஞ்சலை தந்திருக்க வேண்டும் திரும்பி சாலையை பார்த்தவாரு சாய்ந்து அமர்ந்து மெதுவாக சொன்னார் அவங்க அரசியல் கைதி இந்நாட்டின் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவி ஆன இங்க நட்ப்பது ராணுவ ஆட்சி. மிண்டும் சனநாயகத்துக்கு போராடுகிற இவங்களை வீட்டுக்காவல் வைத்திருக்கு ரானுவம். இவங்கதானே அமைதிக்கான நோபல் பரிசு வாங்கினவங்க? ஆமா. ஏன் சர்வதேச நாடுகள்
கண்டனம் செய்வதில்லையா? இதுவரை சாலை ஒரமாக வளந்திருந்த செடிகள் ஊடே சலனமாக தெரிந்த அந்த வீடு வாகனம் அந்த சாலை திருப்பதில் திருப்பியதும் தெளிவாக தெரிந்ததில் உரையாடல் அறுந்தது. வீட்டை சுற்றி குளம், தெளிவான நீர் பெரும்பாலும் மரத்திலே ஆன நல்ல விசாலமான வீடு. மரச்சன்னலின் திரைச்சீலைகளின் ஊடே அமைதியாக வீசி கொண்டுயிருந்த காற்றில் ஏனோ பயம் கலந்திருந்தது.

ஒரு மழைக்காட்டில்...


வார விடுமுறையோடு பொது விடுமுறையும் சேர்ந்து வந்தபோது நானும் நண்பர்களும்,எங்காவது வெளியே சுற்றிவர முடிவுசெய்தோம். எறக்குறைய எல்லா தீவுகளுக்கும் முன்னமே சென்றுவிட்டதால், இந்தமுறை கொஞ்சம் வீரதிரமாக காடுமலை ஏறலாம் என்று யோசித்து "தாமன் நெகரா"(Taman Negara) என்று முடிவுசெய்தோம்.

"தாமன் நெகரா". உலகில் உள்ள மிகப்பழமையான மழைகாடுகளில் ஒன்று(சுமார் 130 மீல்லியன் ஆண்டுகள் பழமையானதாம், அமேசான், காங்கோ இவைகளைவிட பழமையானது என்று சொல்கிறார்கள்). மலேசியாவில் பாஹாங் மாநிலத்தில் பெரும்பகுதியும்,அருகிலுள்ள இருமாநிலங்களில் சில பகுதிகளும் சேர்த்து ஏறக்குரைய 4343 சதுர கிலொமீட்டர் உள்ளடங்கிய காட்டுப்பகுதி.

"புறப்பாடு".பத்து நண்பர்கள் கொண்ட எங்கள் குழு, இந்தியத்துனைக்கன்டத்தின் பல்வேறு மாநிலத்திலிருந்து வந்து மலேசியாவில் கணினித்துறையில் வேலைச்செய்பவர்கள். தேசிகன் -தொப்பிகளின்மேல் திராக்காதல் கொண்ட எங்களின் எல்லா மொழிகளிலும் பேசக்கூடிய குழுத்தலைவன். பிரஜேஷ் - ஆரம்பத்திலிருந்தே மிகுந்தார்வத்துடன் எல்லா முன்னேற்பாடுகளும் செய்தவன்,மிகப்பெரிய விடயங்களையும் மிகச்சாதாரணமாக சொல்லுபவன். கௌரி - எளிதில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவன், ஆண்டு அனுபிவத்த அனுபவஸ்த்தனைப்போல பேசுபவன். சுஷில்,பிந்தியா - புதிதாய் திருமணமான இளம் ஜோடி, எந்தவிதமான வித்தியாசம் பாராட்டாமல் எங்களோடு கலகலப்பாக பயணித்தார்கள் (மற்றும் அவர்களுக்கே உரிய ..விஷயங்களோடும்). ரஞ்சித் - திருமணமான கலகலப்பான பேர்விழி, நிறைய நகைச்சுவை துணுக்கூகளோடு கூட்டதையே கலகலப்பாக்கிகொண்டு வந்தார். சிவா - பார்பதற்கு முரடாக பழகுவதற்கு இனிமையானவன். வினாயக் - சிங்கபூரிலிருந்து வந்து எங்களோடு கலந்துகொண்ட சிவாவின் நண்பன் மற்றும் நான்."முதல் பகல்". காலை அனைவரும் கோலாலம்பூர் "ஹோடெல் மலயா" முன் கூடினோம். இங்கிருந்துதான் எங்கள் பேருந்து புறப்படுவதாக ஏற்ப்பாடு. இந்தியர்களுக்கே உரித்தான் வழக்கதில், பேருந்து புறப்படும்போது நிறுத்த சொல்லிவிட்டு காலைவுணவுக்காக அலைந்தோம் அன்று விடுமுறைதினம் ஆதலால் கடைகள் எல்லாம் முடியிருந்தது.பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு ஒருக்கடை கண்டுப்பிடுத்து, தமாதமானதால் கிடைத்த ரொட்டியை "பொங்கூஷ்" (பார்சல்) செய்துக்கொண்டு புறப்பட்டோம்.எங்களோடு இந்தியாவிலிருந்து வந்து இங்கு வேலைச்செய்யும் மற்றோருக்குழு, சில சினர்கள், மற்றும் பிறத்தேசத்தினரும் பேருந்தில் இருந்தனர். பயனநேரத்தை கழிப்பதற்காக "தம்ஷ்ரத்ஸ்" விளையாட அரம்பித்தோம்(என்னைத்தவிர அனைவருக்கும் இந்தி தெரியும் ஆதலால் பொதுவாக இந்தியிலே இருந்தது எங்கள் உரையாடல்). என்முறை வந்தது, காதில் ஒரு இந்திப்படத்தின் பெயர் சொல்லப்பட்டது, என்க்குத்தெரிந்த அரைக்குறை இந்தியைவைத்துக்கொண்டு அபினயம்பிடிக்கத்தெரியாமல் முழித்தேன், என்முழிப்பைபார்த்து எதோ புரிந்து கொண்டு பிரஜேஷ் வரிசையாக படங்களின் பெயர் சொல்ல நல்லவேளையாக அதில் ஒன்று என் காதில் சொன்னப்பெயர்.நிம்மதியாக வந்து இருக்கையில் அமர்தேன். இப்படியாக சிரிப்பூம், சத்தமாயிருந்த எங்கள் விளையாட்டு ஓட்டுனருக்கு எரிச்சல் மூட்டியதால் அனைவரும் தூங்குவதற்கு நிற்பந்திக்கப்பட்டோம். சுமார் 4மணிநேர பயணத்துக்குப்பிறகு "கோலா டெம்லீங்" படகுத்துறைக்கு வந்துசேர்ந்தோம். இங்கிருந்துதான் படகு எடுத்துகொண்டு தாமன் நெகரா செல்லவேண்டும். நாங்கள் ஒருமரப்படகை வாடகைக்கு அமர்த்திகொண்டோ ம், தகரவொடுகள் வேயப்பட்டு சற்று நிளமாக இருபதுபேர்களுக்குமேல் அமரக்கூடியதால் எங்களோடுப்பேருந்தில் பயணம்ச்செய்த மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டோ ம். அப்படகின் பின்புறமிருந்த சிலாயிரம் குதிரைச்சக்திக்கொண்ட யமாகா மோட்டார் இயக்கம் பெற்றதும் அந்தக்காட்டாறின் நீரோட்டத்தை எதிர்த்து பயணப்பட்டோம். சில சிறுக்கட்டடங்களை கடந்தப்பிறகு நீரோட்டத்தின் இருபுறமும் பச்சைப்பசேலென்று அடர்த்தியான மரங்கள், பறந்தப்படியே இரைத்தேடும் சிறியப்பறவைகள், ஆற்றைக்கடக்கும் மாடுகள்,கரையோரத்தில் இடுக்கியக்கண்களோடு கிராமத்து மனிதர்கள்.இந்த அழகியக்காட்சியை உள்வாங்கியப்படியேருந்த எங்கள் கனத்தமௌனத்தை திடிரண்டு
ஷமிகின் குரல்............

Sunday, May 07, 2006

ஸ்ரீலஸ்ரீ வலபதிவுவாசி சைபரானந்தா பேட்டி

கல்கொத்தாவில் இருந்து சென்னை வந்து புதிதாக வலைப்பதிவு ஆசிரமம் அமைக்கவிருக்கும் ஸ்ரீலஸ்ரீ வலபதிவுவாசி சைபரானந்தாவை தீடிர் ரிப்போட்டர் பட்டணத்து ராசா கண்ட கேட்ட பேட்டி( செவ்வின்னு சொல்ராங்கலே இதைத்தானோ?).

வலைபதிவு, அரசியல், பெண்ணீயம் ஆசிரம செயல்ப்பாடுகள் இப்படி பலதரபட்ட கேள்விகளுக்கு கொஞ்சம் கூட முகம் கோனாமல் ( இப்பவே பார்கக சகிக்கீல) பதிலளித்த சைபரானந்தாவின் பேட்டி.

ப.ரா : நீங்க சென்னை தேர்வு செய்த நோக்கம் ?

ஸ்ரீலஸ்ரீ : கல்கொத்தாவில் முதல் அமைச்சர் 80 ஆயரம், சோனியா 7 கோடின்னு சொத்து கனக்கு காட்ட, தமிழகத்தில மட்டும் ஆளுங்கட்சி, எதிரணி இரண்டுமே 20 கோடிக்கு மேல. இங்க ரீஸோஸ் ( resource pool) அதிகம் சாமி அதான்.

ப.ரா : அது அரசியல் அதுக்கும் ஆசிரமத்துக்கும் என் சம்பந்தம்?

ஸ்ரீலஸ்ரீ : ம்.. எல்லா இடத்திலும் நீக்கமற நிறைஞ்சு இருக்கிறது அரசியல் தாம்.

ப.ரா : அது என்ன வலைபதிவு ஆசிரமம் ? (மாட்டிக்கிட்டா ஈசியா எஸ்கேப்)

ஸ்ரீலஸ்ரீ : ம் எங்கள் செயல்பாடுகளை பாருங்கள் அதன் அவசியம் புரியும்.

ப.ரா : கடவுள் மறுப்பு ஆட்களிடம் திருவிளையாடல் தருமி மாதிரி நிறைய கேள்வி வருமே?

ஸ்ரீலஸ்ரீ : நாங்க கேட்ட்பதைதான் நீங்கள் கேட்கிறீர்கள், ஆனால நாங்கள் சொல்லுவதை சொல்ல மறுக்கிறீர்கள் அப்படின்னு அதாவது குன்சாவா சொல்ல வேண்டியதுதான்.

ப.ரா : திரவிட ராஸ்கள் நிறைய இருகாங்களே?

ஸ்ரீலஸ்ரீ : டிவி பார்க்கும் பெரும்பான்மை மக்களுக்கு கலர் டிவி, இன்டர்நெட் பார்க்கும் சிறுபான்மை மக்களுக்கு எதுவும் செய்யவில்லையே அப்படி எதையாவது சொல்லி கூட்டம் சேக்க வேண்டியது தான்.

ப.ரா : ம் தெளிவாத்தாம் இருக்கிங்க சாமி. அது சரி பெண்ணீயம்?

ஸ்ரீலஸ்ரீ : மற்ற துறைகளை விட ஆன்மிகம் பெண்களுக்கு அதிக இடம் கொடுத்துள்ளது அதிக எண்ணிக்கை உள்ள பெண் சாமியார்களே அதற்கு சாட்சி. இங்கே கூட ஒரு அம்மா ஒரு மடம் ( மாடமா) வச்சு இருக்காங்களே ( அவங்க வைர கீரிடம் பார்த்து தான் நானே வலைபதிவு ஆசிரமம் தொடங்குறேன்.)

ப.ரா : சரி இப்போ ஆசிரம பணிகள் என்ன நடக்கின்றன?

ஸ்ரீலஸ்ரீ : பாசீச, மார்கிசிய, முன் பின் நவினத்துவ அப்படிங்கற வார்ததைகளுக்கு ஒரு டீம்மும், குன்சா, கவிஜ, அறிக்கை ங்கற வார்ததைகளுக்கு ஒரு டீம்மும் அமைச்சு ரிகர்சல் பார்த்துகிட்டு இருக்கோம். அப்புறம் இந்த "முன்முடிவு" வார்ததை மட்டும் நான் நான் மட்டுமே.

ப.ரா : உங்கள மாதிரி அறிவில் சிறந்த ஞானிகள் இப்படி பண்ணலாமா?

ஸ்ரீலஸ்ரீ : தம்பி இப்ப கேட்டிங்ளே ஒரு கேள்வி அத எங்க ஊர்ல தலையுல செருப்பு தூக்கி வக்கிறதுன்னு சொல்லுவாங்க. சரி நான் வரேன் ஆசிரம பணிகள் நிறைய கிடக்குது.

ப.ரா : வாங்க உங்க பணி சிரக்கட்டும், நன்றிகள்.

Saturday, May 06, 2006

மீண்டும் கவிஜ

பார்ரா என்னத்தான் சகவலபதிவாளர்கள் விமர்சனம் செய்தாலும் சிலருக்கு அடங்காம கவிஜ பொங்கி பொங்கி வருது அடங்க கொஞ்ச நாள் ஆகும் பொருத்துக்குங்க மக்களே.

சுவற்றின் நெற்றியில்
ஆணி அடிக்கப்பட்டது
இயேசுவின் படத்தை
மாட்டுவதற்காக.

(ராசா எங்கயோ கேட்ட மாதிரி இருக்கேடா..)
அப்புறம் இந்த கவிஜ க்கும் நட்சத்திர பதிவாளர் சரி சரி சூப்பர் ஸ்டார் பதிவாளர் (கழக தளபதி, கொ.ப.செ எல்லாம் வந்து அடிய போட்டுடப் போறாங்க) முத்திவின் "அந்த" பதிவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்ல இல்ல ஏன்னா இது சுட்டது :)

Friday, May 05, 2006

மற்றுமொரு தமிழ்மீடிய பையனும் இங்கலிஷ் சாங்ஸ்சும்.

நம்ம இளவஞ்சி (நம்ம அப்படின்னு சொல்லலாம் இல்ல) தாதாவோட பீட்டர் சாங்ஸ்சும்.. பதிவ படிச்சதலிருந்து ஒரே music thirsty தான் போங்க அதாங்க இசை தாகம் இங்கலிஷ் சாங்ஸ்ல்ல அதான்.வலைபதிவுகள படிக்க ஆரம்பச்தலிருந்த நம்ம அறிவு இந்த ஏரியான்னு இல்லாம் எல்லா ஏரியாவிலும் எக்கசக்கமா :-)

என்னடா இப்படி ஆகிபோச்சே அப்படின்னு உக்காந்து யோசிச்ட்டுயிருந்தப்போ வந்தார் நம்ம நண்பர் கில்பர்ட் சர்ச்லலாம் பாடுவார் அவருக்கிட்ட என் இங்கலிஷ் சாங்ஸ் ஆர்வத்தை பற்றி சொன்னப்ப என்கிட்ட சாங்ஸ் எதுவும் இல்ல என்னோட நண்பர் கிட்ட அழைச்சிட்டு போறேன் சொன்னார்.

போனவாரம் பெஸன்ட் நகர் பீச்சு நகர்வலம் போனா அங்க நமம கில்பர்டும் (கொஞ்சம் பெருசு போல இருந்த) அவர் நண்பரும். அப்படியே பேசிகிட்டே நம்மளபற்றியும் நம்ம இங்கலிஷ் சாங்ஸ் ஆர்வத்தை பற்றியும் எடுத்தவைக்க நம்மள ஒரு பார்வ பார்துட்டு கில்பர்ட் கிட்ட வீக்கெண்ட் வாங்களேன் அப்படின்னாரு. தொடர்ந்து பேசனதுல ஸபார்க்ஸ், பைக் & பெரல் (இது எல்லாம் என்னன்னு அப்புறமா கில்பர்ட் கிட்ட தெரிச்சுகிட்டேன்) இப்பயெல்லாம் முன்னமாதிரி இல்ல அப்ப்டின்னு பொலம்பிட்டு இருந்தார் கெடுபிடி அதிகமாம்.

சனிக்கிழமை அள்ளிகிட்டு வந்துடலாமுன்னு நண்பர் விட்டுக்கு போனோம். இதுதான் புதுசா வாங்கன sony hi-fi system (மலேசியாவுல இருந்து வாங்கனதாம்) அப்படின்னு காட்டினாரு எதோ watts,power logic, surround-sound ( இங்கலிஷ் படம் முடிஞ்சி எழுத்து ஓடி முடியும்போது கடைசியா வருமே ) அப்படின்னு சொல்லிகிட்டே இருந்தாரு உட்டா மேனுவல முழுசா சொல்லுவார் போல ஸ்ப்பா..

பேசிகிட்டே பக்கதுல இருந்த self தொரந்தாரு வாவ் self fulla சீடி தான். நம்ம தாகம் தனிஞ்சுதுடா மகனே நினைச்சுகிட்டேன். ஹெய் மேன் வாட சாங் யு வாண்ட்? டக்குனு கேட்டபதான் தோனிச்சு ஐய்யோட இளவஞ்சி பதிவ பிரிண்டு போடமா வந்துடோ மேன்னு. ஆ ஆ எனி ஃபாஸ்ட் சாங் ( குத்து பாட்டு கேட்டே வளதோம்ல்ல). யு வாண்ட் ராக்?.. ம்ம் ( அப்படின்னா) ஹெவி மெட்டல்?.. ம்ம் (இதுவேறயா) சீடிய சிஸ்டத்துல போட்டதும் சவுண்டு டாப் கீயரல எகுற, கரகரன்னு குரல் டரம்ஸ், கீட்டார் ( கேட்டு தெரிஞ்சுகிட்டோ மில்ல ) ஆத்தி!! காது அந்து உருண்டு ஓடும்போல..

இருந்தாலும் சமாளிச்சிகிட்டு ( மேன்மக்கள் இசைய தெரிஞ்சிக்க வேணாம??) நாங்க எல்லாம் யாருன்னு நண்பர பார்த்தா தலைய ஆட்டி பயங்கரமா ரசிச்சிகிட்டு இருந்தாரு ( ச்ச என்னடா நம்ம ரசன ஒன்னியிம் விளங்கள) சரிப்போன்னு சோனியா அகர்வால் தனுசுக்கு சொல்லி கொடுத்த மாதிரி தலைய ஆட்டிகிட்டே நண்பர பார்த்தா ஸ்மைல் வேற :( யு லைக் இட்?? ம்ம் யா யா உடனே வால்யும் அதிகம் வேற ஆத்தா.

இபபடி ஒரு பத்து சீடி ஒன்னு ஒன்னா முழுசா ப்ளே பண்ணி முன்னுரை முடிவுரை எல்லாம் கேட்டு விட்டுக்கு வர அது ஆச்சி மணி பதிணொன்னு.
அம்மா என்னடா சாப்பாடு வேணுமா. என்னது? அம்மா நீ எதோ பேசர மாதிரி தெரியுதா ஆனா ஒரே கொய்ய்ய்ன்னு தான் கேக்குது. நாட்டமையில சரகுமார்கிட்ட கவுண்டமணி அடி வாங்கனப்ப சொல்லுவாரே அதே மாதிரிதான் மறுநாள் வரை கொய்ய்ய்ய் தான். வாங்கிட்டு வந்த சீடி அப்படியே இருக்கு, சூரியன் fmக்கூட இரண்டு நாளா கேக்கல.ஏனுங்க இளவஞ்சி தாதா இதபற்றி ஒரு வார்தை கோடிட்டுடாவது காட்டியிருக்கலாம் இல்ல என்னமோ போங்க.

Thursday, May 04, 2006

மார்க்சிய சித்தாந்தம்

முத்துவோட மார்க்சியம் பதிவு படிச்சதிலிருந்து என்னடா இதல்லாம் தெரியாமவே இருத்துட்டோ மேன்னு ஒரே வருத்தமா போச்சு சரி படிச்சுட்டா போச்சுன்னு கூகுள்'க்கினா வதவதன்னு வந்திவிழுந்த பக்கங்களில் தலை சுத்துனதுதான் மிச்சம். நன்பர் ஒருவர் கிட்ட கேட்டதுல நாலுஞ்சு பேப்பர
தந்து படின்னார் அங்க படிச்சத இங்க பதியுரேன். படிச்சுட்டு என் புரிதல் தவறா இருந்தா சொல்லிட்டு போங்க வலது, இடது நன்பர்களே மற்றும்
திராவிட ராஸ்கள்களே(செல்லமாதான்:-)). மார்க்சியம் பற்றி தெரிஞ்சிக்க கீரியா ஊக்கியாக இருந்த முத்துவுக்கு நன்றிகள் பல..
முத்துவோட பதிவும் அதன் பின்னூட்டங்களும் ரொம்ப டீப்பா(deep) இருக்குறதனால இங்க கொஞசம் அடிப்படையா சுலபமா முயற்சி
பண்ணுவோம் ஓகேவா.
இனி..(எவ்வளவு எழுத்துப்பிழை இருக்கோ அவ்வளவு "-" குத்துங்க தெரிஞ்சிக்கிறேன் :-))
தொழிலாளர்கள் தகுதி அடிப்படையிலான சித்தாந்தம்

மார்க்சிய பொருளியலின் முக்கிய கொள்கையே இந்த தொழிலாளர்கள் தகுதி அடிப்படையிலான சித்தாந்தம்தான் இதன் அடிப்படை மிகசுலுவானது
பொருள்களின் விலை மதிப்பீடு அந்த பொருளை உற்பத்தி செய்ய தொழிலாளர்களுக்கு பிடிக்கும் நேரத்தின் அடிப்படையில் அமையவேண்டும்
என்பதே.இரண்டு சட்டை தைக்கிற நேரத்தைவிட இரண்டு ஜோடி செருப்பு தைக்கிற நேரம் அதிகமுன்னா செருப்போட விலை அதிகம் இரண்டுக்கும்
தேவையான மூலப்பொருட்கள் வேறவேறவாக இருந்தாலும்.அதுக்கு அப்புறமா இதல பலமாற்றங்கள் வந்தா சொல்லுறாங்க.
இந்த சித்தாந்ததைதான் மார்க்ஸ் கேப்டலிசத்துக்கு எதிரா வச்சார்.கேப்டலிஸ்டகள் செய்ய விரும்பாத இந்த சித்தாந்ததை தூக்கி பிடிச்ச மார்கஸ் இது எல்லா வர்த்தக பொருளுக்கும்(commodities) பொருந்தும் வாதிட்டார்.கேப்டலிஸ்டகளிடம் கூலிக்கு போகும் தொழிலாளர்களையும் ஒரு (commodity)வர்த்தக பொருள்ன்னு குறிப்பிட்டு இதுவும் இந்த சித்தாந்ததுக்கு உட்பட்டதுதான் சொன்னாரு. அவரோட பானியில சொல்லனும்முன்னா "லேபர் பவர்".
தொழிலாளர்களுடைய உற்பத்தி திறனும் சேவைப்பயனுமே "லேபர் பவர்". மார்க்ஸ் இதை கேப்டலிஸ்ட் பானியிலே விவரிக்கிறார் இப்படி
சமுதாயத்துக்கு தொழிலாளிக்கு அவன் வேலை செய்ய உணவும் உடுக்க உடையும் கொடுக்க எவ்வளவு உற்பத்தி நேரம்(labour hours) தேவையோ அதைச்சார்ந்ததுதான் "லேபர் பவர்". எப்படின்னா ஒரு தொழிலாளிக்கு ஒரு நாள் உணவு உடை கொடுக்க ஐந்த லேபர் மணி நேரம் தேவை. ஒரு லேபர் மணி நேரம் ஒரு ருபாய் அப்படின்னா ஒரு நாளைக்கு கூலி ஐந்து ருபாய்.
தொடரும்..
அது சரி.
மார்க்ஸ் இறந்து நூற்றாண்டுகளுக்கு பிறகும் அவருடைய கேப்டலிசத்துக்கு எதிரான விமர்சனமும் அதற்கு மாற்றாக அவர் வைத்த சித்தாந்தமும்
விவாதத்துக்கு உள்ளாவது ஏன்?
அவசியமான, அனுகூலமான, அவருடைய சொசியலிச சித்தாந்தம் இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் உலகளாவிய புரட்சிக்கு வித்திட்டது
உண்மைதான். ஆனா Poland, Hungary, Czechoslovakia, East Germany, Romania, Yugoslavia, Bulgaria, Albania,USSR இப்படி அந்த சிததாந்ததின் தோல்விகள் ஏன்?

வாழ்க ஜனநாயகம்


ஏழுபத்து ஆறு முறை தோல்விகள் சந்தித்து தற்போது செபாக்கத்தில கருணாநீதி எதிர்த்து போட்டியிடும் பத்மராஜன் இதுவரை முன்சிபல் தேர்தலிருந்து ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் போட்டியிட்டு இருக்கார். இவர் எதிர்த்து போட்டியிட்ட விஐபிகள் ஏ.பி.அப்துல் கலாம், கே.ஆர்.நாரயணன், பி.வி. நரசிம்ம ராவ், ஏ.பி. வாஜ்பேய்.ஜெ. ஜெயலலிதா. அதிக தோல்விகள் கண்ட வேட்பளரா limca book of records ல இடம்பிடத்துள்ள இவரோட இலக்கு கின்னஸ்தானாம். வாழ்க ஜனநாயகம்.

Wednesday, May 03, 2006

விருத்தாசலத்தில் விஜயகாந்த் தேறுவார்

தற்சமய நிலவரப்படி விருத்தாசலத்தில் விஜயகாந்த் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேறுவார் என்றேப்படுகிறது.பாமக வேட்பாளரின் மிதான அதிருப்தி ஒரு காரணியாக இருந்தாலும் சினிமா கவர்ச்சி மககளிடம் இன்னும் செல்லும் என்பதே கூற்று.எனினும் கலர்டிவி திட்டம் பெண்களின் வாக்கு விஜயகாந்த் எதிராகதான் உள்ளன. ஆண்களுக்கு அத்திட்டம் அமலாக்கபடும்போது நிகழும் சார்ப்பு பற்றிய கேள்வி எழுவதால் கனிசமான வாக்குகள் விஜயகாந்துக்கு விழும்.பொதுவாக அதிமுக திமுக பாமக ஆட்சி காலங்களில் பெரிதாக குறிப்பிடும்படியாக எந்த ஒரு திட்டமும் நிகழ்த்தபடவில்லை ஆகவே செயல்பாடுகள் முலம் வாக்குகளை கூட்ட இக்கட்சிகள் தவிறிவிட்டன என்றுதோனுகிறது.சமிபமாக பெய்த பெரும்மழையில் விழுந்த பாலம் அது சீர் அமைக்க, மாற்றுபாலத்துக்கான தாமதங்கள் இப்படி அதிருப்திகள் இருக்கும்பொது திடிரன தொகுதி நட்சத்திர அந்தஸ்து தந்த விஜயகாந்தின் மிதான கவர்ச்சி செல்லும்.அவர் ஜெயித்த பிறகு பெருசா அவரு செய்லலனாலும் அவரு அடிக்கப்போற சில ஸ்டண்டுகளும் அதன் ஊடக கவரப்பும் சில நல்லதுகள விருதாசலத்தில் நடக்கலாம்.. நடக்கட்டும்.

கவிதை எதிர்ப்பு.

சமிபகாலமாக நட்சித்திர பதிவாளர்கள் பதிவுகளில் ஆரம்ப பதிவாளர்களின் கவிஜ புனையும் பதிவுகள் குறித்த பாசிச தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இவர்களுடன் முன்னாள நட்சித்திரங்களும், சிலகாலமாகவே பதிவுகளின் முலம் இலக்கிய பணியாற்றிவரும் (அவ்வாறு நினைத்துகொள்ளும்) அறிவுஜிவி பதிவாளர்களும் அடக்கம். இவர்களின் இந்த தலைகேரிய வெறி அப்ப பதிவுகளின் பின்னுட்டங்களில் விரவிக்கிடக்கின்றன.அவர்களுக்கு பலவினமான எதிர்பையாவது பதிவு செய்யவே இந்த பதிவு.

இந்த முலையிலே கிள்ளி எறியும் முயற்சியை பொருட்படுத்தாமல் கவிஜ புனைபவர்கள அயராது வார்தைகளை மடக்கி மடக்கி முடிந்தால் எழுத்துகளையும் பிரித்து பிரித்து போட்டு புனைவதை நிறுத்தாமல் தொடருமாறு கேட்டுகொள்கிறேன்(அப்படி எழுதுனத நூறு தடவை படிக்கிபோறது நாம மட்டும் தானே).

Monday, May 01, 2006

No Man's Land

பொதுவா போர் படங்களை இருவகைப்படுத்துலாம், முதலாவது சரித்திர நாயகர்களின் நாயகச்செயல்களை பறைச்சாற்றும் படங்கள். இரண்டாவது
பயங்கரமான, விகாரமான , மனிதாபிமானமற்ற போரின் மறுமக்கத்தை காட்டுற படங்கள்.

உலகதின் வேறு மூலையில் நமக்கு பலருக்கு அறிமுகம் இல்லாத "போஸ்னியா"தான் no mans land. மிக மோசமான உள்நாட்டுப் போர்
இருக்கும் போஸ்னியாதான் கதைக்களம்.போஸ்னியன் இயக்குனர் டனிஸ் டனொவிக்( Danis Tanovic) நேர்மையாக மறக்கமுடியாத படமா இயக்கியிருக்கிறார்.

மிக அடர்தியான பனிமூட்டத்துக்கிடையே தொடங்கும் படம் போஸ்னியாக்கும் யுக்கஸ்லொவியாக்கும் இடையே இருக்கும் குழப்ப நிலையின் சரியான அவதானிப்பு.போஸ்னியனின் ரானுவத்தின் ஒரு சிறுப் பிரிவு முன்னேறிச் செல்லும் போது பனிமூட்டத்தின்யிடையே வழிமாறி செர்ப்ஸ் விரர்களால் சுழ்ந்துகொள்ளபடுகிறார்கள். ஒரே ஒரு போஸ்னிய விரன் மட்டும் உயிர்தப்பித்து பதுங்கு குழியில் (trench) தஞ்சம் அடைகிறான். தறகாலிகமா பாதுக்காப்பானதா இருந்தாலும் திரும்பவும் தன் படைப்பிரிவு இருக்கும் இடத்த அடைய முடியாம தவிக்கிறான். சிறுது நேரத்திலே இரண்டு செர்ப்ஸ் விரர்கள் அந்த பதுங்கு குழிக்கு வந்து சேருகிறார்கள் அதில ஒரு விரனை கொன்றுவிடுகிற போஸ்னிய விரன் மிச்சம் இருக்கிற செர்ப்ஸ் விரனோடு முனாவதா ஒரு விரனையும் அந்த பதுங்கு குழில இருக்கான். அவனோட அபாயகரமான நிலையும் அதனாலும் முவருமே அழியப்போறத அறிந்து உறைந்துப் போகிறார்கள். அப்பொது அங்க வருகிற UNம் ஊடகங்களும் அந்த சுழ்நிலையின் திவிரத்த குறைக்காம அதிகப்படுத்துவது.

படத்தின் முக்கிய கூறுகளா நான் நினைக்கிறது படத்தின் பெருப்பகுதி திரைகதை அந்த பதுங்கு குழில அந்த மூனு விரர்களுக்கிடையே தான்
நடக்கிறது. அந்த பதுங்கு குழியில பிடிபட்டு இருக்கிற தனிமனிதர்கள் முலமா அந்த மக்களிடையே ஆன கண்முடித்தனமான வெறுப்புகள காட்டி
இருக்கிறது. UNனை கிண்டல் அடிச்சியிருகிறது எப்படி அரசியலும் ஈகோவும நல்ல நோக்கத்துக்கான அந்த அமைப்பை பாழ்பண்ணுகிறதுன்னு
சொல்லியிருக்கிறது.

இந்த படத்தில ஹிரொ கிடையாது மாறாக விக்டிம்ஸ் தான். இந்த படம்தான லகானோட(lagaan) போட்டிபோட்டு அந்த வருடத்திற்கான பிறநாடுகளுக்கான சிறந்த படத்திற்கான விருது பெற்றது.