Wednesday, March 28, 2007

முதல் வெண்பா





சுவாசித்து கொண்டு ஆயுள் கடந்தாலும்
நேசிக்க ஓர்யுவதி வேண்டி - நான் சுநுக்க
கட்டுமரம் மீதமர்ந்து வந்த நீனக்கு
காண கிடைக்காத கணா.


பி.கு
ஆள பார்த்த ஜோர்ல எதோ எழுதிட்டேன், அங்க இங்க சீர் தட்டுனா பொருத்தருள வேண்டும் பெருந்தலைகளே :-)

7 comments:

Anonymous said...

சுவாசித்து கொண்டு ஆயுள் கடந்தாலும்
நேசிக்க ஓர்யுவதி வேண்டி - நான் சுநுக்க
கட்டுமரம் மீதமர்ந்து வந்த நீனக்கு
காண கிடைக்காத கணா.
///


எதுகையில தவறு

தளை தட்டல் ஒவ்வொரு வரியிலும்.

முயற்சி திருவினையாக்கும்

உங்கள் நண்பன்(சரா) said...

பட்டணத்து ராசா!
சூப்பரப்பூ.. அருமை!( ஹி ஹி நான் எதை சொன்னேன் என்று உங்களுக்குத் தெரியும்)
இது போன்ற வெண்பா எனக்குப் புரிவதிலை,இருந்தாலும் படித்தேன் புரிந்தது. ஆனால் தலைதட்டுது வால்தட்டுதுனு தவறுகளை கண்டுபுடிக்கும் அளவிற்கு நமக்கு ஞானம் இல்லை,


அன்புடன்...
சரவணன்.

இலவசக்கொத்தனார் said...

ராசா,

நல்ல முயற்சி. ஆனா அங்க இங்க தளை தட்டுது. சரி பண்ணிப் போடறேன். ப்ளீஸ் வெயிட்.

நம்ம கிளாஸாண்ட வந்தீங்கன்னா இந்த ரூல்ஸ் எல்லாம் பிரிச்சு மேய்ஞ்சுடலாம்.

பட்டணத்து ராசா said...

//
எதுகையில தவறு

தளை தட்டல் ஒவ்வொரு வரியிலும்.

முயற்சி திருவினையாக்கும்
//

எங்க எங்க தவறுன்னு சொன்னா நல்லா இருக்கும்.

பட்டணத்து ராசா said...

//சூப்பரப்பூ.. அருமை!( ஹி ஹி நான் எதை சொன்னேன் என்று உங்களுக்குத் தெரியும்) //

ஹி ஹி புரியுது :-)

பட்டணத்து ராசா said...

இலவசம் நன்றி,
//சரி பண்ணிப் போடறேன். ப்ளீஸ் வெயிட்.//
Please waiting

இலவசக்கொத்தனார் said...

அண்ணா, நீங்க என்ன செய்யுங்க, நம்ம விக்கி பசங்க பதிவுல வெண்பா வடிப்பது எப்படின்னு ஒரு ரெண்டு பதிவு இருக்கு. அதைப் படிச்சிட்டு எதனா டவுட் இருந்தாக் கேளுங்க.