Tuesday, February 27, 2007

நெடுங்குருதி


கொஞ்சம் பிரபலமான தொலைகாட்சி இயங்குனர் இயக்கிய கேப்டன் படத்தில் வரும் சில காட்சிகள் நெடுங்குருதியின் சில நிகழ்வுகளின் தழுவல் என்று நண்பனின் வியாக்கியானமே நெடுங்குருதி நாவல் பற்றியான அறிமுகம் எனக்கு.

எஸ். ராமகிருஷ்ணன் எழுதி உயிர்மை வெளியிடான நெடுங்குருதி நாவலை வாங்கும் போது அதன் தடிமன் சொல்லியது பெயரை போலவே மிக நீண்ட நாவல் என்று.

வெயிலும் வெயில் சார்ந்த வேம்பலையின் நிலவெளியை சுற்றி வருகிறது கதை, என் குளிருட்டபட்ட அறையையும் மீறி வெயிலின் வெக்கையை உண்ர்த்துகிறது ஆசிரியரின் எழுத்து. ஊரின் சுபாவம் மக்களின் மீது படிந்து விடுகிறதா? அல்லது மக்களின் சுபாவம் ஊரின் மீது படிகிறதா? வெயில், வசந்தம், மழை என முறையே காலங்களில் பயணிக்கும் கதையில் கதை மாந்தர்களின் சுபாவங்களில் முறையே அந்த அந்த காலங்கள் வெளிப்படுவது யதார்தம்.

வேம்பலையின் மக்கள் கதைகளில் சொல்ல மறந்து போனவர்கள், அவர்களது நம்பிகைகளும் வாழ்வியலும் பதிவு செய்யாமல் விடுபட்டு போனவைகள்.

இந்த நாவல் ஒரு மேஜிக்கல் ரியலிச முயற்சி என்று நண்பர் சொல்ல கேள்விப்பட்டேன் அப்படியெல்லாம் இல்லை என்றார் மற்றொரு நண்பர்.மேஜிக்கல் ரியலிச என்றால் என்ன என்றே தெரியாத நான் விவாதத்துக்குள் இறங்குவது சரியல்ல ஆனால் ரொமான்டிசிசஙகளுக்கான மிகை உணர்ச்சி இருப்பதாக படுக்கிறது இதுபோல.

"விட்டின் மீது பூனை போல ஏறி வரும் வெயிலை நோக்கி
என்னடா பெரிய மசுருன்னு நெனப்பா? வந்தேன் வக்காளி வகுந்துடுவேன்."

3 comments:

பட்டணத்து ராசா said...

test

மிதக்கும்வெளி said...

நெடுங்குருதி குறித்த பொ.வேல்சாமியின் விமர்சனம் படித்திருக்கிறீர்களா? இல்லையென்றால் அவரது கட்டுரைத்தொகுப்பான 'பொற்காலங்களும் இருண்டகாலங்களும்' நூலிலும் கூட இடம்பெற்றிருக்கிறது.

பட்டணத்து ராசா said...

//பொ.வேல்சாமியின் விமர்சனம் படித்திருக்கிறீர்களா?//

அவருடைய விமர்சனம் வலையில் கிடைக்குமா?, இருந்தால் அதன் தொடுப்பு தாருங்களேன். நன்றி