Tuesday, January 09, 2007

"The Zahir".


Alchemist அடுத்து Paolo Coelho எழுதி சமிபமா நான் படிச்சி முடிச்ச புதினம் "The Zahir". Zahir ன்னா அரபியில் மோகம்(Obsession). எண்ணங்கள் முழுவதும் ஆட்கொள்கிற மோகம். அதுவன்றி வேறு எதுவும் எண்ணாது ஒரு வகையான மோக நிலை அல்லது பிதற்ற நிலை.

ஒரு நாள் திடிரன எதுவும் சொல்லாம காணாம போகற தன்னுடைய மனைவி எஸ்தரை தேடி பயணம் செய்யும் புகழ்பெற்ற எழுத்தாளர் எப்படி அந்த தேடுதல் வழியா உண்மை அன்பை தெரிஞ்சிக்கிறார் என்பது தான் கதை.

Alchemist போல் இல்லாம் என் அளவில் சற்று ஏமாற்றம் அளிக்ககூடியதாகவே இருக்கிறது இந்த நீளமான புதினம்
எழுத்தாளர் அடிப்பட்டு தான் பிழைப்போமான்னு கேள்வி எழுப்பும் போது டாக்டர் சொல்கிற ஆப்பிள் கதை. ஏன் ரயில் தண்டவாளம் அந்த இடைவெளியில் இருக்கு? அப்படி அங்க அங்க சுவாரசியம் இருந்தாலும். ஏன் எது எதுக்கு "ஸாகிர்" அப்படிங்கறது குழப்பமாகவே இருக்கு.

3 comments:

பட்டணத்து ராசா said...

test

பொன்ஸ்~~Poorna said...

என்னங்க ராசா இப்படிச் சொல்லிட்டீங்க.. சஹீர் நான் ரொம்ப விரும்பிப் படித்த புத்தகம் விரைவில் நானும் ஒரு விமர்சனத்தோடு வரேன் :)

பட்டணத்து ராசா said...

வாங்க பொன்ஸ், விரும்பி தான் படிச்சேன் ஆனா ரொம்ப குழப்பமா இருக்குது, என்னோட புரிதல் அப்படி இருக்கலாம். உங்க விமர்சனம் எதாவது தெளிவு கிடைச்சா நல்லாருக்கும். சிக்கரம் பதிவு போடுங்க :-)