Wednesday, July 12, 2006

தேன்கூடு கதை - ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் வேகமாய் போய்கொண்டிருந்தது, குற்ற உணர்வு மேலிட தலைக்குனித்திருந்தேன்.எனக்கே என் செயல் அருவெறுப்பாய் இருந்தது. நான் அழுவதாக நினைத்து டாக்டர் சொன்ன ஆறுதல் மேலும் அவமான உணர்ச்சியால் குத்தியது
எனக்கு வேறு வழி தெரியவில்லை அந்த இடத்தைவிட்டு அவசரமாய் வெளியே வருவதற்கு, குற்றுயிராக இவரை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது திடிர் சொந்தமாகி வண்டியில்
ஏறிக்கொண்டது அப்பொது சமயோசிதமாக தோன்றினாலும் இந்த அரைமணி நேர பயணத்தில் முற்றிலும் குற்ற உணர்ச்சியே மேலோங்கியிருந்தது.

ஆரம்பத்திலிருந்த அவரிடமிருந்த முனுகல் இப்பொது சுத்தமா இல்லை. முனுகும் போது எங்கே நினைவுவந்து என்னை காட்டிகொடுத்து விடுவாரோ என்று பயந்தது மேலும்
வெட்கமாயிருந்தது.இந்த மாதிரியான உளைச்சலுக்கு பேசாமல் அந்த இடத்திலே இருந்திருக்கலாம் போல மற்றும் ஒரு முறை இப்படி நேர்ந்தால் இப்படி செய்ய கூடாது. ச்சய் என்ன கேவலமாய் இப்படி ஒரு சிந்தனை, மற்றும் ஒரு முறையா? ஐய்யோ!.

திடிரன அவரிடமிருந்து அசைவுகள், காற்றை வேகமாக சுவாசிக்க முயற்சித்தார் வேக வேகமாக பேச முயற்சித்தார் எனக்கு திகிலாக இருந்தது அவரின் அசைவுகள் உதரல்களாக வேகமெடுத்தது டாக்டர் கண்களை சோதனை செயதபோது அவரின் கண்கள் வெளிரிருந்தது
தெளிவாக தெரிந்தது டாக்டர் அவருக்கு ஊசிப்போட்டு அமைதிபடுத்தினார் அருகில் வந்து அமர்ந்த டாக்டர் நம்பிகை இழந்திருந்தார் "ஹாஸ்பிடல் போகறவரைக்கும் தாங்கறது கஷ்டம்
தான்".

எனக்கு பெரும் திகிலாக இருந்தது, கடவுளிடம் அவரை உயிர் வாழவை என்ற வேண்டுவதற்கு கூட குழப்பமாயிருந்தது. அவர் இறந்துவிட்டால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது ச்ச ச்ச அவர் ஏன் சாகனும். கடவுளே!. சரி ஹாஸ்பிடல் போனபிறகு
அவருடைய உறவினர்களுக்கு தெரியபடத்தனுமே அவங்க யாருன்னு தெரியாதே நமக்கு அவருடைய கைப்பை பார்ததா எதாவது தெரியலாம் பைல டைரி மாதிரி ஒரு நோட் புக் மட்டும் இருந்தது அப்பா கண்டிப்பா எதாவது குறிப்பு இருக்கும். அவசர அவசரமா
புரட்டினா ம் எதுவும் தெரியல அவருடைய டைய்லி(daily) குறிப்புகளா தான் இருந்தது.

திரும்பவும் அவரிடமிருந்து சத்தம் டாக்டர் வேகமா எழுந்து அருகில் சென்றார் எனக்கு இதயம் நின்றுவிடும் போலிருந்தது. பெரும் முச்சிரைப்பு, டாகடர் வேகமாக நெஞ்சில் அறைந்தார். மீண்டும் ஒரு நீண்ட முச்சி இழுப்பு, பல அறைகள் எந்தவித பலனும்மில்லாமல்
அமைதியானார். என் மனது ஈரம் தோய்ந்த பஞ்சுப்போல கனத்துப்போனது.

டாக்டர் டரைவரிடம் எதாவது std பார்த்து நிறுத்த சொல்லிவிட்டு அருகில் வந்து வீட்டுக்கு சொல்லிட்ங்கன்னார். எனக்கு என்ன சொல்லுவதுன்னு தெரியல ஆனா அப்பவும் உண்மை சொல்ல தைரியம் வரல அதுவும் இல்லாம யாரு அவருடைய சொந்தம் எங்க
இருக்காங்க தெரியாது. நான் அமைதியா இருக்கறதை பார்த்திட்டு டாக்டர்,

கஷ்டம்தான் ஆகவேண்டியத பாருங்க.

இல்ல டாகடர் சொந்தம் இல்ல

ஒ சொந்தம் இல்லையா நீங்க மட்டும்தானா?

ம்.

சரி அப்போ cemetery போகலாமா?
இல்ல எலக்டிரிக் ஃப்ர்னஸ்.

அப்படியே விட்டுவிட்டு ஓடிடலாமான்னு தோணுது யாரோட அப்பாவோ? யாரோட கணவரோ? அப்படி ஓடிப்போனா இவங்க ஆனாத பிணமா எரிக்க போராங்க. மனசு அடிச்சிகுது எப்படி பட்டவரோ இபபடியா ஆகணும். கூடாது. என்ன ஆனாலும் சரி
யாரவது வந்து கேட்டா சொல்லிக்கலாம். இப்போ நாமலே கூட இருந்து செய்துடலாம்.

எரிச்சிடலாம் டாக்டர்.

முழுசா உள்ள போனவர் வரும்போது ஒரு சின்ன பொட்டலமா என் கையில் எனக்கு நிஜமாகவே அழுகை வந்தது. எதற்காக அவசர அவசரமா அந்த பாம் வெடிச்ச் இடத்திலிருந்து வந்தேனோ அது எல்லாம் மறந்து கனத்து நெஞ்சோடு என் இடம் வந்து
சேர்ந்தேன்.

வாட்ச்மெனிடம் ரும் சாவி வாங்கி போகும் அவன் "சார் நாளைக்கு நம்ம ஆனாத ஆசிரமத்துக்கு வருவதாயிருந்த மந்திரி வரலையாம் சார்".

என்னிடம் பெரிதாய் அதிர்ச்சியை எதிர்ப்பார்த்தவனிடம் எதுவும் சொல்லாமல் என் அறைக்கு வந்தேன். கனத்த நெஞ்சு உடைந்து வெகு நேரம் அழுதபடிய இருந்தேன். ஏதோ நினைத்து
கொண்டவனாக அந்த நோட் புக்கை மறுபடியும் புரட்டினேன். கடைசிக்கும் முதல் பக்கதில் எழுதுயிருந்தது.

My father and mother are dead,
Nor friend, nor relation I know;
And now the cold earth is their bed,
And daisies will over them grow.

an orphan

4 comments:

Anonymous said...

Somthing is missing :(

Anonymous said...

Somthing missing

பட்டணத்து ராசா said...

என்ன மிஸ்சிங்?

Anonymous said...

ஆம்புலன்ஸ்ல எங்கள கொண்டு பொயிட்டீங்க...இறக்கிவிடுங்க please...well written has all the elements fr a suspense story..keep writing