Friday, March 31, 2006

பூசைக்கு வந்த பூ

பூசைக்கு வந்த பூ தான்
கொஞ்சம பிச்சிப் போடாமல்
அப்படியே போட்டுவிட்டுப் போங்கள்
உங்களுக்கு புண்ணியம கிட்டும்.

யானைமுகத்தினனை வேண்டிக்கொள்ளுங்கள்
உங்கள் வேண்டுதல் நிறைவேறட்டும்
ஆனால் அடுத்தமுறை தேங்காய சிதறடிப்பதாய்
வேண்டிக்கொள்ளாதிர்
உங்களுக்கு புண்ணியம கிட்டும்.

ஐய்யனாருக்கு படையல் போட்டு பிள்ளை வரம்
வேண்டிக்கொள்ளுங்கள்
முத்துக்களாய் பிறக்கட்டும் பிள்ளைகள் பண்ணிரண்டு
ஆனால் ஆட்டுக்கடவை விட்டுவிடுங்கள்
உங்களுக்கு புண்ணியம கிட்டும்.

Wednesday, March 29, 2006

விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம்.

திமுக கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் இடம்பெற்றுள்ளதை பெரிதும் வரவேற்கின்றேன்.

இது மிகவும் அவசியமானதும் அவசரமானதும்க்கூட

அதே சமயதில் காப்பீட்டு கழகங்கள் (பொது மற்றும் தனியார்) இதனை லாப நோக்கில் பெரு விவசாயிகளுக்கு மட்டும் எடுத்து செல்வதை தவிர்த்து சிறு விவசாயிகளும் பயன்பெறுமாறு செய்யவேண்டும்.

சிறுவிவசாயிகளுக்கு இதுப்பற்றியான பயன்ப்பாடு பொது ஊடகளின் முலம் அறியத்தர வேண்டும்.

இது வெறும் தேர்தல் அறிக்கையோடு நின்றுவிடக் கூடாது.

நம்பிக்கையோடு.

Monday, March 27, 2006

கிராமங்கள் மாறிவிட்டதாம், யார் சொன்னது

இன்றும் காது நீண்ட கிழவிகள்
பாக்கு இடித்துக்கொண்டு திண்ணையில் தானே குந்தியிருக்கிறார்கள்.

ஒண்ணுக்கு அங்கேயிம்,
ரெண்டுக்கு கொல்லைக்கும் தானே.

எட்டரை மணி வண்டி எனப் பெயர்கொண்ட பேருந்து
சரியாய் ஒன்பதரைக்குத்தானே வருகிறது.

பெரியவர் மகன் சின்னவர் தானே
பஞ்சாயத்துத் தலைவர்.

மாறிவிட்டதாம், யார் சொன்னது
கிழவீதியில் பூக்கும் நந்தியாவட்டை
இன்னும் சிவன் கோவில் வருவதில்லை.

மேலவீதியில் மட்டுமே மாடி வீடுகள்
அங்கு அப்பன், பூட்டன் காலத்திலிருந்து
'அவர்கள்'த்தான் மாட்டுக்காரன்.

எல்லாம் அப்படியேத்தான்.
மாறிவிட்டதாம்யார் சொன்னது.

போன வருசம் பக்கத்து டவுனுக்கு சித்தாள்
வேலைக்குப் போன சவந்தியக்கா

அப்புறம்,ரண்டு வருசம் முன்னாடி வந்த
லிட்டில் பிளவர் பள்ளிக்கூடமும் அந்த
சாமியாரையிம் தவிர

எல்லாம் அப்படியேத்தான்.
மாறிவிட்டதாம் யார் சொன்னது.

Thursday, March 23, 2006

மிண்டும் பசுமை புரட்சி

படிப்பினைகள்

கோடிக்கனக்கான மக்களின் பட்டினியை ஒழிக்க தலைவர்களின் சொற்தொடர் தான் இந்த "பசுமை புரட்சி - 2". ரசயானங்களின் மாயங்களாளும்,தாவிர-ஜீன்களின் ஜாதகங்களை மாற்றி அமைக்கும் புதிய இயலினாலும் உணவு உற்பத்தியை பெறிக்கி பட்டினிச் சாவுகளற்ற தேசம் செய்வோம்.

உலகை இந்த பட்டினிச் சாவில் இருந்து உய்விக்க இவர்கள் வகுக்கும் வழிகளில் ஒன்று, பூச்சிக் கொள்ளி ரசயானங்களை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவங்கள் இந்த புதிய தாவிர-ஜீன் இயல் நிபுனர்களாக உருமாரி உய்விக்கும் விவசாய பொருள்களுக்கு தாரளச் சந்தை ஏற்படித்தித் தருவதுதான்.

ஆனால்,முதல் பசுமை புரட்சியின் முழக்கமான, "பசுமை புரட்சியின் இந்த மநதிர விதைகள் தான் பட்டினிச் சாவுகளை பூட்டும்ச் சாவி" என்னவாயிற்று. இன்றும் பட்டினிச் சாவுகள் நிறைந்த உலகம்ந்தான் இது.

60வதுகளின் முடிவில், முன்றாம் நிலை உலக நாடுகள் பட்டினிச் சாவுக்கொடுமைகளை தடுக்க, பிரச்சனையின் வேர்களை அராய்ந்துக் களைய சாவுக்கொடுமைகளின் திவிரம் இடங்கொடுக்காமையால். அவசர அவசரமாய் அப்போதைக்கு செய்க்கூடிய உணவு உற்பத்திய மிகஅதிகப்படுத்த இந்த மந்திர விதைகளை விட்டால் வேறுவழில்லை. இந்த விதைகளும் அதற்கான விவசாய முறைகளும் மிகப்பெரிய மாற்றங்களை உணவு உற்பத்தியில் ஏற்படித்துயதான். ஆனா அதன் பின்விளைவாக நாம இழந்தது விவசாயத்தின் அதார வளமான நிலத்தையம் நிலத்தடி நீரும். கொஞசம் அதிகமான விலைதான்.

சரி இந்த பசுமை புரட்சி உலக பட்டினிச் சாவுகளை நிறுத்திச்சான்னுக் கேட்டா, இல்லை. வருத்தமான உண்மை. மிகப் பெரிய அளவில உணவு உற்பத்தி அதிகமாச்சித்தான். உணவுப் பொருட்கள் அதிகமான பட்டினி குறையனும்தானே ஆனா இல்லை. ஏன் மாற்றம் வரவில்லை, அடிப்படையான காரணம் தாங்க, வறுமைக் கோட்டுக்கு கிழ இருக்கிற மக்களிடம் வாங்கும் சக்தி சரிசமமா இல்லைங்க அதான். எவ்வளவதான உணவு உற்பத்திய பெருக்கினாலும். அதை வாங்க அந்த மக்களின் தரம் உயர்த்தபடாவிடில், இந்த பட்டினிச் சாவுகள் தொடரும் :(

Tuesday, March 21, 2006

அட நம்ம பரட்டை

நம்ம பரட்டை மறுபடியும் இப்போ மக்கள் மத்தியிலே விவாதப் பொருளாகிவிட்டார்.

அந்த பரட்டைப் பற்றிய கதைதாங்க(கற்பனையான) இது.

இந்த கதை ஆரம்பிக்கும்போது பரட்டை அவ்வளவு பரபரப்பான ஆளு இல்லை.அவ்வளவா படிப்பும் இல்லை, வருத்தமும் இல்லை. ஒரு வேலை இருந்தது, சாப்பாடு, விரும்பிய அளவு புகை, தூக்கம், வேலை அவ்வளவுதான். குறிப்பிட்டு சொல்லனும்னா கொஞ்சம் சுறுசுறுப்பான ஆளு.

சில நாளா தலைக்கு எண்ணை வைக்க மறந்ததுதிலிருந்து இப்படி ஆனது அவன் தலை பரட்டையா. வார முடியாத அளவுக்குப்போனப் பிறகு கையால கோதவேண்டியதா இருந்தது.ஏன் இப்படின்னு கேட்டா, நாலு பேரு ரசிக்கிறாங்கன்னு பதில். நிசந்தான், நாலு எட்டாச்சு, எட்டு பத்தாச்சு.கூட்டாளிங்க சொல்ற மாதிரி லேசா சினிமா ஆசை வந்தது.

சினிமாவுக்கும் வந்தாச்சு, முதல்ல அந்த பரட்டை தலைக்கு இருந்து ஈர்ப்பை மறந்து கொஞ்சம் எண்ணைய தலைக்கு காட்டுனவுடனே வெளுத்துப்போனது. சரின்னு இனிமே பரட்டையோட மட்டும்தான் ஆனப் பிறகு பரட்டையே பிரபலமடையந்தது.

மக்கள் பரட்டை சினிமாவுக்கு லஞ்சம் கொடுத்து பார்கக வந்தனர். பரட்டையோட வருமானம் அதிகரித்தது, கோடீஸ்வரன் ஆனா(ர்).
பரட்டை படத்தை பார்ககத்தான் எவ்வளவு ரசிகர்கள். படங்கள் திருவிழா நேரங்கள்ள வெளியிடுவது போயி பரட்டை படம் வெளியிடும்

நேரம்மேல்லாம் திருவிழாவானது. கவிஞர்கள் அவருக்காக பாடல் எழுதினர். பிரபலமான பத்திரிக்கைகள் பரட்டை வாழ்கை வரலாற்றை எழுதி பணமும் புகழும் சம்பாதித்தனர்.

அனைத்து முக்கியமான் நிகழ்வுகள் குறித்து பரட்டையின் கருத்துகள் கேட்டு பத்திரிக்கைகள் பிரசுரித்தன.

பரட்டை அதைப்பற்றி இப்படி சொன்னார்.., இதைப்பற்றி அப்படி சொன்னார்... இப்படியாக எதைப்பற்றியும் எல்லாவற்றைப் பற்றியும் பரட்டை எதாவது சொல்லியாக வேண்டியிருந்தது.

இப்போ பரட்டைய தங்கள் பககம் வலைக்க எல்லோரும் யோசிச்சாங்க. எல்லோருக்கும் முதலில் எதிர்கட்சித் தலைவர் பரட்டைக்கு பட்டம் கொடுத்து விழா எடுத்தார்.விழாவில தலைவர் செல்லமாக பரட்டை தலைய கோத அது மறுநாள் தலைப்பு செய்தியானது. பத்திரிக்கைகள் விற்பனை அதிகரித்தது, பிறகு எல்லா கட்சிகளும் பரட்டையயை தங்கள தளபதி என்றது.

குழ்ப்பமான பரட்டை தன் நெருக்கமான சானக்கிய பத்திரிக்கையாளரைய கலந்தாலோசித்தார்.அந்த சானக்கியர் பரட்டையயை அரசியல் ஞானம் உள்ளவராக, திர்கதரிசியாக பலக்கட்டுரைகள் வரைய்ந்தார்.

ஞானம்,திர்கதரிசி, அரசியல் ரொம்ப குழம்பிப்போனார் பரட்டை.இதற்கு இடையில் நதிநீர் பிரச்னைப்பற்றி பத்திரிக்கைகள் பரட்டையிடம் கருத்து கேட்டன. கருத்துககு எதிர்வினை எற்பட்டது. பரட்டையின் வேர் அறாயப்பட்டது. எதிர் குழுமம் பலப்பட்டது. பரட்டை கலங்கி ஸ்டன்ட்டு கலைஞகர்களிடம் அலோசித்து அடையாள உண்ணாவிரதம் இருந்தார். எல்லா பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி தலைப்புச் செய்தியாக முதல்ப்க்கத்தில் வெளியானது. மத்திய அரசு பரட்டைக்கு உயரிய விருது கொடுத்த்து. இப்போது என்ன செய்வது மக்கள் மனதில் ரொம்ப குழப்பம் ஏற்பட்டது.

கொஞச நாள் பரட்டைப் பற்றி எந்த செய்தியும் இல்லை, பரட்டையின் இருப்பை மக்கள் மறந்துப்போயின.

Sunday, March 19, 2006

முகமுடிகளற்று

ஒரு நாள் அணியத்தர முகமுடிகளற்று
நம்பிக்கைகள் உடைபட்டு
அவளுக்கான அவளுடைய இடத்தை அறியும் போது
அவள் தன்னை வெளிப்படுத்தகூடும்
தன் முகத்தை முகமுடிகளற்று.

Tuesday, March 14, 2006

கனிஷ்சா சதுரமும், கடவுளரும்


மனிதனுடைய அடிப்படை கட்டமைப்பே மாதிரிகை(patterns) அடையாளப்படித்திக்கிறதும், அதை தேடுவதும் தான். நம்முடைய மூளை நரம்புகளில் பின்னப்பட்டு செய்தியாய் இருப்பதும் இந்த மாதிரிகை(கள்) தான். இந்த மாதிரிகை(கள்) முற்றிலும் சரியானவையாக இருக்க அவசியமில்லை, ஆனா ஒரு ஒழுங்குக்கு உட்பட்டவையாக இருக்கும்.

இது ஏன்னா நாம எப்பவும் உலகத்தை ஒரு ஒழுங்குக்கு உட்பட்டவையாக பார்க்க விரும்புறோம், அது ஒழுங்கற்றதாக கூட இருக்கலாம்.ஆனா அதற்கு முறனா இயற்கை நம்மை இப்படி பரிணாமபடுத்தியிருக்கலாம், எதிலும் ஒரு ஒழுங்கை பாரு அதை இல்க்கமிட்டு அடையாளப்படுத்து, சேமி. இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடையாளப்படுத்தபட்ட அடையாளங்களாக இந்த கடவுளர்களும் இருக்கலாம்.

Bart Kosko அவருடைய Fuzzy Thinking புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கனிஷ்சா சதுரதுல( Kanizsa ) தெரியுர மாயச் சதுரம் போல கடவுளும் இருக்கலாம். அவரின் கூற்றுப்படி, கடவுள் , ஒரு பொய்யான அண்டத்தில் உள்ள புழுதி மண்டலத்தின் பொய்யான கோளில் ஜிவிக்கும் ஒரு உயிரின் மூளையின் நரம்புகளால் பின்னப்பட்ட ஒரு புல்லறிவு (false knowledge).



நம்முடைய மூளையின் இந்த மாதுரிகை ஏற்படுத்தும் புல்லறிவுக்கு உதாரணம் கனிஷ்சா சதுரம். நேர்கோணங்களில் வெட்டபட்ட நான்கு வட்டங்கள் ஏற்படுத்தும் பொய்யான எல்லைக்கோடுகளும் அதன் நேர்மறையான் உட்புற வண்ணமும் அங்கு இல்லாத சதுரத்தை நம்மூளை மட்டும் அடையாளம் காண்கிறது.

நம் அடிப்படை கட்டமைப்பின்படி அங்கு இல்லாத சதுரத்தை இல்லை அப்படின்னு சொல்றது கடினம்.கடவுள் விடயத்தில் கூட இந்த புல்லறிவு உண்மையாக இருக்கலாம்.இந்த அண்டம் எற்படுத்தும் பொய்யான எல்லைகளும், அதன் பிரகாசமான உள்வெளியும் உருவகிக்கும் கடவுளரின் பிம்பத்தை நம்மில் பலரால் பார்க்காமல் இருக்கமுடியாது.

Reference :

Why People Believe in God An Empirical Study on a Deep Question
by Michael Shermer
Nov, 1999