நம்ம இளவஞ்சி (நம்ம அப்படின்னு சொல்லலாம் இல்ல) தாதாவோட பீட்டர் சாங்ஸ்சும்.. பதிவ படிச்சதலிருந்து ஒரே music thirsty தான் போங்க அதாங்க இசை தாகம் இங்கலிஷ் சாங்ஸ்ல்ல அதான்.வலைபதிவுகள படிக்க ஆரம்பச்தலிருந்த நம்ம அறிவு இந்த ஏரியான்னு இல்லாம் எல்லா ஏரியாவிலும் எக்கசக்கமா :-)
என்னடா இப்படி ஆகிபோச்சே அப்படின்னு உக்காந்து யோசிச்ட்டுயிருந்தப்போ வந்தார் நம்ம நண்பர் கில்பர்ட் சர்ச்லலாம் பாடுவார் அவருக்கிட்ட என் இங்கலிஷ் சாங்ஸ் ஆர்வத்தை பற்றி சொன்னப்ப என்கிட்ட சாங்ஸ் எதுவும் இல்ல என்னோட நண்பர் கிட்ட அழைச்சிட்டு போறேன் சொன்னார்.
போனவாரம் பெஸன்ட் நகர் பீச்சு நகர்வலம் போனா அங்க நமம கில்பர்டும் (கொஞ்சம் பெருசு போல இருந்த) அவர் நண்பரும். அப்படியே பேசிகிட்டே நம்மளபற்றியும் நம்ம இங்கலிஷ் சாங்ஸ் ஆர்வத்தை பற்றியும் எடுத்தவைக்க நம்மள ஒரு பார்வ பார்துட்டு கில்பர்ட் கிட்ட வீக்கெண்ட் வாங்களேன் அப்படின்னாரு. தொடர்ந்து பேசனதுல ஸபார்க்ஸ், பைக் & பெரல் (இது எல்லாம் என்னன்னு அப்புறமா கில்பர்ட் கிட்ட தெரிச்சுகிட்டேன்) இப்பயெல்லாம் முன்னமாதிரி இல்ல அப்ப்டின்னு பொலம்பிட்டு இருந்தார் கெடுபிடி அதிகமாம்.
சனிக்கிழமை அள்ளிகிட்டு வந்துடலாமுன்னு நண்பர் விட்டுக்கு போனோம். இதுதான் புதுசா வாங்கன sony hi-fi system (மலேசியாவுல இருந்து வாங்கனதாம்) அப்படின்னு காட்டினாரு எதோ watts,power logic, surround-sound ( இங்கலிஷ் படம் முடிஞ்சி எழுத்து ஓடி முடியும்போது கடைசியா வருமே ) அப்படின்னு சொல்லிகிட்டே இருந்தாரு உட்டா மேனுவல முழுசா சொல்லுவார் போல ஸ்ப்பா..
பேசிகிட்டே பக்கதுல இருந்த self தொரந்தாரு வாவ் self fulla சீடி தான். நம்ம தாகம் தனிஞ்சுதுடா மகனே நினைச்சுகிட்டேன். ஹெய் மேன் வாட சாங் யு வாண்ட்? டக்குனு கேட்டபதான் தோனிச்சு ஐய்யோட இளவஞ்சி பதிவ பிரிண்டு போடமா வந்துடோ மேன்னு. ஆ ஆ எனி ஃபாஸ்ட் சாங் ( குத்து பாட்டு கேட்டே வளதோம்ல்ல). யு வாண்ட் ராக்?.. ம்ம் ( அப்படின்னா) ஹெவி மெட்டல்?.. ம்ம் (இதுவேறயா) சீடிய சிஸ்டத்துல போட்டதும் சவுண்டு டாப் கீயரல எகுற, கரகரன்னு குரல் டரம்ஸ், கீட்டார் ( கேட்டு தெரிஞ்சுகிட்டோ மில்ல ) ஆத்தி!! காது அந்து உருண்டு ஓடும்போல..
இருந்தாலும் சமாளிச்சிகிட்டு ( மேன்மக்கள் இசைய தெரிஞ்சிக்க வேணாம??) நாங்க எல்லாம் யாருன்னு நண்பர பார்த்தா தலைய ஆட்டி பயங்கரமா ரசிச்சிகிட்டு இருந்தாரு ( ச்ச என்னடா நம்ம ரசன ஒன்னியிம் விளங்கள) சரிப்போன்னு சோனியா அகர்வால் தனுசுக்கு சொல்லி கொடுத்த மாதிரி தலைய ஆட்டிகிட்டே நண்பர பார்த்தா ஸ்மைல் வேற :( யு லைக் இட்?? ம்ம் யா யா உடனே வால்யும் அதிகம் வேற ஆத்தா.
இபபடி ஒரு பத்து சீடி ஒன்னு ஒன்னா முழுசா ப்ளே பண்ணி முன்னுரை முடிவுரை எல்லாம் கேட்டு விட்டுக்கு வர அது ஆச்சி மணி பதிணொன்னு.
அம்மா என்னடா சாப்பாடு வேணுமா. என்னது? அம்மா நீ எதோ பேசர மாதிரி தெரியுதா ஆனா ஒரே கொய்ய்ய்ன்னு தான் கேக்குது. நாட்டமையில சரகுமார்கிட்ட கவுண்டமணி அடி வாங்கனப்ப சொல்லுவாரே அதே மாதிரிதான் மறுநாள் வரை கொய்ய்ய்ய் தான். வாங்கிட்டு வந்த சீடி அப்படியே இருக்கு, சூரியன் fmக்கூட இரண்டு நாளா கேக்கல.ஏனுங்க இளவஞ்சி தாதா இதபற்றி ஒரு வார்தை கோடிட்டுடாவது காட்டியிருக்கலாம் இல்ல என்னமோ போங்க.
24 comments:
ஏங்க, அந்தப் பாட்டுகளில ஆம்பிள பிள்ளை பாடறது, பொம்புள பிள்ளை பாடறது எது எதுன்னு தெரிஞ்சுச்சா? ஏன்னா, நமக்கு அதுவே திகட்டல் :-)
அதல்லாம் தெரிஞ்சுக்க முடியல தருமி சார். ஆனா எடுத்துட்டு வந்த சீடியில இரண்டு ஒரு பிள்ளைங்க படம் இருந்துச்சு, அப்படியே நம்ம பக்கத்துக்கு எட்டி பாத்ததற்கு நன்றி.
என்மோ போடா பட்டணத்து ராசா ஸ்டார் பதிவாளர் , பின்னுட்டம் கலக்குற நீ :)))
இதுக்குப்போய் அலுத்துக்கலாமா?
- சும்மா ஒரு பாட்டு நினைவுக்கு வந்திச்சி
டே கந்தசாமி, ராமு, பார்த்தி,ரவி...எல்லாம் வாங்கடா....இந்த ஸீடி-ய கொஞ்சம் போடுங்கடா..எதோ வெள்ள கார தொரை பாடிருக்ககாராமா....இங்லீஸ் பாட்டாம்... தேவா, ரஹ்மான் எல்லாரும் இங்க இருந்துதான் காப்ப்ப்பி அடிக்குறாகளாம்....
//இதுக்குப்போய் அலுத்துக்கலாமா?//
நல்ல பாட்டு.
நம்ம பக்கத்துக்கு எட்டி பாத்ததற்கு நன்றி jp
கொஞ்சம் பெரிய பதிவு..கலக்கறே ராசா...
ஃபார்மேட் பண்ணி போடவும்...படிக்க கஷ்டமா இருக்கு..எழுத்தும் புழுக்கை புழுக்கையா..( வயசாகிடுச்சி பாருங்க)
muthu, have changed the font and format
சரி அப்படியே சிரமம் பார்க்காமல் பதிவை பத்தி பத்தியா பிரிக்கலாமா..
ராசா, இந்தப் பதிவ இப்போ தான் பார்த்தேன்..
//வலைபதிவுகள படிக்க ஆரம்பச்தலிருந்த நம்ம அறிவு இந்த ஏரியான்னு இல்லாம் எல்லா ஏரியாவிலும் எக்கசக்கமா :-) //
அட,, நம்ம நெலமையும் அதே தான்!!! உங்க மார்க்ஸியம் பதிவும் பார்த்தேன்.. இன்னும் பொருளாதாரம் பத்தி எழுதறேன்னீங்களே.. காத்திருக்கேன்..:)
முத்து, இங்க என்ன தனி ட்ராக் ஓட்டிகிட்டு இருக்கீங்க.. font, பத்தின்னு.. :)
உங்க சிஷ்யங்க போஸ்டுக்கு இத்தனை போட்டியா!!!
பாத்தீங்களா? இதுக்குத்தான் successfulஆன ஆட்களைப் பக்கத்தில வச்சுக்கணும் அப்டிங்கிறது. பாருங்களேன் தமிழினி எத்தனை டிப்ஸ் அள்ளி விடுறார்னு..
முத்து உங்க நட்சத்திர பளுவிலும் ம்ம் வார்த்தையே வரல,வாத்தியார் இப்ப ஒகேவா. இன்னும் இந்த வல்லினம் மெல்லினம் தான் இடிக்குது.
பொன்ஸ் இந்த பக்கம் எட்டி பார்த்தற்கு நன்றி, ஆமாம் ஏன் உங்க சங்த்து song "sing in the rain" சங்கத்து ஆளுங்க பாடுவது இல்லை ?
என் இனிய நண்பன் பட்டணத்து ராசா,
இந்த உதவி எல்லாம் என் கடமை அய்யா...தூள் கிளப்புங்க...
வல்லினம் மெல்லினம் பின்னாடி பார்க்கலாம்...முதல்ல படிக்க சுலபமா இருக்கவேண்டாமா..
ராசா, உங்க பக்கம் 5க்கு நான் அடிக்கடி வருவேங்க, ஆனா சுவடு தெரியாம திரும்பிடுவேன்.. நம்ம சொல்ல வந்ததை யாராவது சொல்லி இருப்பாங்க.. அதான்..
சிங் இன் த ரெயின் எல்லாம் சொல்லிக் குடுத்தீங்கன்னா போட்ருவோம். :)
//...தூள் கிளப்புங்க...//
கிளப்பிடுவோம் :-)
// உங்க பக்கம் 5க்கு நான் அடிக்கடி வருவேங்க, //
வாங்க வாங்க.
பட்டணாத்து ராசாவாயிருந்துகிட்டு இங்கிலீஷ் பாட்டு மட்டுமா தமிழும் தான் சரியா எழுத வரலை. ஒரே தப்பு போங்க. சீத்தலைச் சாத்தனார் மாதிரி எலிக்குட்டியால தலையிலே அடிச்சுக்கிட்டேன்.
//பட்டணாத்து ராசாவாயிருந்துகிட்டு இங்கிலீஷ் பாட்டு மட்டுமா தமிழும் தான் சரியா எழுத வரலை.//
நிங்களும் சொல்லியாச்ச, சரி கீதா நம்ம பக்கம் வந்ததுக்கும் அப்ப்டியே கரிசனத்துக்கு நின்றி.
//எலிக்குட்டியால தலையிலே அடிச்சுக்கிட்டேன்//
திருந்துடா பட்டணத்து ராசா சீக்கிரம் பாரு உனனால தலையிலலாம் அடிச்சிக்கிறாங்க.
அதுசரி அப்ப யாரும் உங்கள பார்க்கலையே :)
//நம்ம இளவஞ்சி (நம்ம அப்படின்னு சொல்லலாம் இல்ல) தாதாவோட பீட்டர் சாங்ஸ்சும்//
நம்ம ன்னு சொல்லுங்க...தாதாவா?! தனுசெல்லாம் புதுப்பேட்டைல நடிக்கறதால மட்டுமே தாதாங்கற வார்த்தைய எனக்கெல்லாம் உபயோகப்படுத்தி அதன் புனிதத்தை கெடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்! :)
// இதபற்றி ஒரு வார்தை கோடிட்டுடாவது காட்டியிருக்கலாம் // ஹிஹி.. யாம் பெற்ற இன்பம்...
இளவஞ்சி நம்ம பக்கத்த எட்டி பார்த்தற்கு நன்றி )
இந்த பதிவுக்கு நிறைய பேஜ் ஹிட், சீனியர் பின்னூட்டம் இதல்லாம் தாதா பெயர் தான் காரணம் உங்களுக்கு தெரியாது விடுங்க
//ஆத்தி!! காது அந்து உருண்டு ஓடும்போல..//
அய்யா ராசா மருதைல எந்த இடம் நீங்க:-)))))
முத்துகுமரன்,நம்ம கல்லூரி தோழர் அடிக்கடி பாவிக்கிற சொற்த்தொடர் , நாம அந்த பக்கம் கிடையாதுங்க.
நம்ம பக்கத்த எட்டி பார்த்தற்கு நன்றி )
Post a Comment