Monday, May 15, 2006

சைபர் உறவுகள், கான மழையடி நீயனக்கு


மீயான்மர், யங்கூன் வீதியில் ஒரு விடுதியில், நான், அவன், எங்களோடு வந்திருந்த ஹொலண்ட்'காரன் கைகளில் பியர் பாட்டலோடு உணவுக்காக காத்திருந்த போதுதான் அந்த மூனு பெண்களும் வந்தார்கள்.

வந்தவர்கள் நேராக அறையின் நடு மேடையில் ஏறி ஒரு பெண் மைக் பிடிக்க மற்ற இருவரும் டரம்ஸ், கீபோர்ட்க்கு பின்னே இருந்த நாற்காலியில் அமர்த்தார்கள்.மைக் பிடித்து பாட ஆரம்பித்த அந்த பெண்னிடம் நிறையவே சீனப்பெண் சாயல். பாடிக்கொண்டிருந்த ஆங்கில பாடலுக்கு அப்புறம் அவள் கவனம் எல்லாம் எங்களோடு வந்த ஹொலண்ட்'காரன் மேல்தான் இந்த ஐரோப்பிய மோகம் கிழக்கு ஆசிய நாடுகளுக்கே வியாதி போல
இனி இவன் கிளம்புவது கடினம்தான்.

சரி இவன் தான் அப்படின்னு அவன பார்த்தால், அவன் நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்னை வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டிருந்தான்.டேய் என்னடா இது. ஆமாம்டா சொல்லிருக்கிறேன்ல்ல ச்ட்ல(chat) பர்மா பாடகின்னு அவதான்டா இவ. நிஜமா? அப்பதான் அவளை உற்று கவனித்தேன் கறுப்பு நிற நீளமான பாவடை சிவப்பு நிற மேற்சட்டை நீளமான கருமையான கூந்தல் தல குளிச்சி இருப்பா போல அப்படியே விட்டிருந்தா காதோரமா இருந்த செம்பருத்தி பூ, பெரிய கண்கள், கூர்மையான நாசி குவிந்த சிறிய உதடுகள், ஏய்!! ரொம்ப அழகா இருக்காடா.அதுசரி ஏன்? உன்னை கண்டுக்கிட்ட மாதிரி தெரியல? ஏன் ஃபோட்டோ எதுவும் தரவில்லையா? ம் தந்தேன் உன்னோடத, பார் அப்ப அப்ப உன்ன திரும்பி பாக்குறா பாரு. எனக்கு எப்பவும் எல்லோரும் என்னையே கவனிக்கிறதா ஒரு இது இருக்குறதா சொல்லி குரங்கக்கூட எல்லாரும் இப்ப்டித்தான்.. ன்னு உதாரணம் சொல்லற இவனா இப்ப்டின்னு குறுகுறுன்னு அவளை பார்த்தால் ஆமாம் பார்க்கிறாள் \o/ மெலிதாக
ஆ(க)ர்வம் கூட அவனை திரும்பிபார்த்து என்னது என்னோட ஃபோடோ தந்தியா? ஆமா, ஃபோட்டோ கொடுத்த மறுநாளிலிருந்து அவள் பேசுவதே இல்லை /o\ டேய் இதல்லாம் அதிகம்டா. இல்லடா நிஜமா அவளை கட் பண்ணதாண்டா.. சொல்லிட்டு நக்கலா சிரிச்ச பிறகுதான் அவன் அளக்குறான் தெரிஞ்சது. டேய் டேய் ரொம்ப அளக்காத மூடு சரியா.

இதற்கு இடையில் அவள் பாட வந்தாள் பர்மீஸ் பாடல் புரியவில்லையே தவிர குரல் இனிமையாகவே இருந்தது அதைவிட இடது ஆள்காட்டி விரலாலும் நடு விரலாலும் கண்ணுக்கு அருகே முடி விழவிழ தள்ளிவிட்டுக்கிட்டே பாடுறது ரொம்ப அழகு. நல்ல உயரம், மெதுவான அசைவுகளுடன் கண்கள் மூடி இதமான இசை

புல்வெளியில் எப்போதும் இருக்கும் அமைதி
மழைக்குமுன் எப்போதும் இருக்கும் வாசனை
...
என் புன்னகையில் எப்போதும் இருக்கும் நீ

அவங்க கடைய கட்டுறவரைக்கும் ரசிச்சுகிட்டிருந்தோம் கடைசியா பில்லுக்கு மிச்ச சில்லரை எடுத்துட்டு வந்த சிப்பந்தி சினனதா ஒரு கடுதாசி கொடுத்துட்டு போனான் அதுல "வருத்தம் தெரிவிப்பிர்கள் என்று எதிர்பார்தேன்" எழுதியிருந்தது. என்னடா இது? அதற்கு அவன் அதான்
சொன்னேல்ல அவதான் கொடுத்துட்டுப் போறா. என்னடா என்ன விசயம் சொல்லு? அந்த பொண்ணுதான இவ? ச்ட்ல என்ன பேசித்தொலச்ச சொல்லுடா? ஏய் ரொம்ப அலட்டிக்காத வா நாளைக்கு சிக்கிரம் ஃகளையன்ட் பார்க்க போகனும். அவசரமா அவன் பேச்ச மாத்தறத பார்த்தா பையன் ஏதோ விளையாடியிருக்கான் தெரியுது.மறுநாள் காலை வண்டில ஏறுகிறவரைக்கும் உம்ம்ம் தான். தெரியம் அவன் இதபத்தி சொல்லப்போறதுல்லன்னு.

திடிரன மெதுவாக பயணிக்க தொடங்கியது வாகனம் முன்சீட்டிலிருந்து பின்புறமாக திரும்பி எங்களிடம் சொன்னார் இதுதான் ஆங் ஸன் சூகி (Aung San Suu Kyi) யை வீட்டுக்காவலில் வைத்திருக்கும் இடம். யாரு அவங்க? ஏன் வீட்டுக்காவல்? இது அவன்.பின்புறமாக திரும்பி பேசுவது அவருக்கு ஒருவித இடைஞ்சலை தந்திருக்க வேண்டும் திரும்பி சாலையை பார்த்தவாரு சாய்ந்து அமர்ந்து மெதுவாக சொன்னார் அவங்க அரசியல் கைதி இந்நாட்டின் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவி ஆன இங்க நட்ப்பது ராணுவ ஆட்சி. மிண்டும் சனநாயகத்துக்கு போராடுகிற இவங்களை வீட்டுக்காவல் வைத்திருக்கு ரானுவம். இவங்கதானே அமைதிக்கான நோபல் பரிசு வாங்கினவங்க? ஆமா. ஏன் சர்வதேச நாடுகள்
கண்டனம் செய்வதில்லையா? இதுவரை சாலை ஒரமாக வளந்திருந்த செடிகள் ஊடே சலனமாக தெரிந்த அந்த வீடு வாகனம் அந்த சாலை திருப்பதில் திருப்பியதும் தெளிவாக தெரிந்ததில் உரையாடல் அறுந்தது. வீட்டை சுற்றி குளம், தெளிவான நீர் பெரும்பாலும் மரத்திலே ஆன நல்ல விசாலமான வீடு. மரச்சன்னலின் திரைச்சீலைகளின் ஊடே அமைதியாக வீசி கொண்டுயிருந்த காற்றில் ஏனோ பயம் கலந்திருந்தது.

3 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

மேலும் எப்போ தொடர்வீங்க?

பட்டணத்து ராசா said...

விரைவில், உங்கள் வருகைக்கு நன்றி சிவஞானமாஜி.

பட்டணத்து ராசா said...

படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை, சும்மா :-)