Friday, April 07, 2006

கலர் டிவி

பகுத்தறிவு கடையில்
இலவசமாய் கலர் டிவி
கொள்கைகள் மற்றுமே விற்றக்கடையில்
கலர் டிவி அதுவும் இலவசமாய்
எங்கும் கேள்விக் குரல்கள்

திரையும், திரைநடிகர்களுயும்
பகுத்தறிவு கடைப் பரப்பியதுப் போல்
இது காலத்தின் கட்டாயம்
உரத்த எடுத்துரைத்தார்
பகுத்தறிவு கடைத் தலைவர்

பழுத்த, நுகர்வோரின் நாடியறிந்த
தலைவரின் சொற்படி இனிதே முடிந்தது
இலவச கலர் டிவித் திருவிழா
விவரமயறிந்துவர அனுப்பினார் தலைவர்
வந்ததது இப்படி

கலர் டிவிதான், ஆனா
கறுப்பும் சிவப்பும் தான் மிகையாய்
எப்போதாவது மஞ்சள் கலரும் உண்டு
ஆனால் என்றும் பச்சை வருவதில்லை.

டிவியில் வரும் நிகழ்ச்சிகளின் தரம்
அதில் பகுத்தறிவின் தாக்கம்
எழுந்தது சில கேள்விகள்
தலைவருக்கு தெரியும் கலர்தான் மக்களுக்கு
முக்கியம் நிகழ்ச்சிகளை விட

2 comments:

Muthu said...

கலர்தான் மக்களுக்கு முக்கியம்..நிகழ்ச்சிகளை விட..

நச் கமெண்ட் ராசா

(எங்க ரொம்ப நாளா ஆளை காணோம்)

பட்டணத்து ராசா said...

நன்றி முத்து, ஆபிஸ்ல திடிரன்னு வேலை செய்ய சொல்லுராங்க அதான் :-)