The Alchemist,
Paulo Coelho
படித்தது
கனவுகள், பட்ச்சியின் குறியிடுகள், சகுனங்கள், சாகசங்கள் என ஒரு பரந்த அறிவும், ஆளுமையும் உள்ள முனியின் எதிரொலியாக வாசகனை புகைப்போல சுழ்ந்து கொள்கிறது, "The Alchemist" புதினம்.
கனவும், கனவுகளை விடாது துறத்தும் சந்த்யகோ ங்கற பையன் முலமா நம்மோட உண்மையான மகழ்ச்சியும், முழுமையும், படைப்பின் நோக்கமாக நமக்கு விதிக்கப்பட்டவைகளை கனவுகளின் ஊடாகவும், நிகழ்வுகளாகவும், சகுனங்களாகவும் இயற்கை அடையாளம் காட்டுங்கறத இந்த நாவல் நெடுக சம்பவங்களா அடிக்கி இருக்குறார் நாவலாசிரியர்.
சந்த்யகோவின் எகிப்து பிரமிட் புதையல் கனவும், அந்த தேடல் பயண நிகழ்வுகளின் முலம், நம் வாழ்வின் கனவுகளும், அதை அடைய படும் இடர்கள், பட்டறிதல், பயணம், உலகம் பற்றியான புரிதல்,சுயத்தேடல் என வாழ்வியல் தத்துவங்கள் எளிமையான நடையில் கதை நெடுக.
சான்டியகோ, அவனோட புதையல் தேடல்லில் உலகத்தின் சிறப்பையும், அற்புதமான மனிதர்களையும், *அல்கெமிஷ்ட்* 'யும் சந்திக்கிறான். முடிவில் புதையல அவனக்கு பிடித்த அந்த பழைய சர்ச் 'லே கண்டு எடுக்கிறான்(treasure lies where your heart belongs).
2 comments:
எழுதுங்கள் ராசா... நிறைய எழுதுங்கள் அறிமுகப்படுத்துங்கள் உலக இலக்கியங்களை தமிழுலகிற்கு...
வாழ்த்துக்கள்...
கே. செல்வப்பெருமாள்
உங்கள் ஊக்கத்துக்கு நன்றி செல்வப்பெருமாள்
Post a Comment