Thursday, April 27, 2006

சினிமா சினிமா

வயதிலிருந்து ஈர்ப்பான விடயம் சினிமா.

புத்தகங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து அதிலே நானும் உலவி வந்து கற்பனையில் இருந்தபோது,நிஜத்துக்கு மிக அருகாமையில், கண்களால் பார்த்து, காதால் கேட்டு உறவாடி படபடக்க, மகிழ சலனப்பிம்பங்களை உருவகிக்கும் சினிமா என்னுள் ஏற்படித்திய ஈர்ப்பூம்,ஆச்சரியமும் ஆலாதியானது.

இன்னவரைக்கும் அந்த ஈர்ப்பு குறைவேயில்ல, சிலமணி நேரமே திரையில்
வாழ்கிற அந்த நிழ்களின் பாதிப்பு சில நாட்களாவது இருக்கும் சிலது இன்னும் இருக்கு. அரங்கிலிருந்த திரையில் பார்தத சினிமாக்கள் போல சினிமாவில் உள்ளே இருந்து பார்ததும் உண்டு.

முதலில் சினிமாவின் ஈர்ப்புக்காக பார்தத சினிமாக்கள் நாளடைவில் அதன்
கதையும் கதாபாதிரங்களும் அனர்தமாய் தோன்றின.விரைவில் நல்ல
சினிமாக்களை தேடி பார்க்க ஆரம்பித்தேன்.

அப்படி நான் பார்தத சினிமாக்களை என் பார்வையில இங்க எழுதலாமுன்னு இருக்கேன்.

முடிக்கிறதுக்கு முன்னே..

சில வருடங்களுக்கு முன்னே உலகச் சினிமாக்களை ஆராய்ந்து போது
அனைத்து சினிமாவிலும் பொதுவான ஒரு விடயம் கண்டுபிடிச்சாங்க அது
என்ன அப்படின்னா "நல்லது ஜெய்க்கனும் கெட்டது தோக்கனும்"
அப்படிங்கிறதுதான். சரிதானுங்களே.

Wednesday, April 26, 2006

மனித தலையளவு பருப்பு உண்ணும் மனிதர்களும்

சில மாதங்களுக்கு முன் தின்ணையில் நரேந்திரன் எழுதிய மார்க்கோ போலோ கட்டுரை படிச்சதிலிருந்து வலையில் தேடி இப்பதான் கிடைத்தது "மார்க்கோ போலோ பயணங்கள்" pdf.

நிறைய சுவாரசியமான, ஆச்சரியமான தகவல்களோடு நல்லாவே இருந்தது. மேல தலைப்புல இருக்கற விடயம் கூட மார்க்கோ போலோவின் தென் இந்தியா பற்றியான பயணக்குறிப்புகள்தான்.

மனித தலையளவு பருப்பு - தேங்காய்.
கருங் எரிக் கற்கள் - நிலக்கரி.

ஏனோ அவருடைய தென் இந்தியா பற்றியான பயணக்குறிப்புகள் எல்லாம் மலபார் அல்லது மாபார் ராஜியம்ன்னு குறிப்பிடுரதும் அதுனோட ராஜா சுந்தர் பாண்டித் தேவர்ன்னு சொல்லியிருக்கிறதும் குழ்ப்பமா இருக்கு. பாண்டியர்கள் ஆண்ட பகுதியாக இருக்குமோ ? தெரியல.

"மாபார்" ங்க்ற பெயர்க்கூட அரபியர்கள் அழைத்ததாக சொல்ரார். அரபியரகளை அந்த ராஜியத்தில யவனர்கள் என்று அழைத்ததாக குறிப்பெடுத்துறுக்கிறார். அரபியில் "மாபார்" ன்னா passage or ferry ன்னு அர்த்தமாம்.

அந்த ராஜயத்தின் முத்துகள் பற்றியும் முத்து குளிக்கிறதப் பற்றியும் ரொம்ப அழகா ஆச்சிரியத்தோட குறிப்பிடுகிறார்.சிலோன்(seilan அப்படி அவரு குறிப்பிடறது சிலோனதான்) என்கிற தீவுக்கும் மாபார் ராஜியத்தின் கடலுக்கும் இடையில எற்ப்படுற வளைகுடா பகுதியில அவுங்கு முத்து குளிக்கிறதா சொல்றார், ஏன்னா அந்த இடத்தில பத்து பன்னிரண்டு fathoms மேல கடல் ஆழம் இருக்காது சில இடத்தில் வெறும் இரண்டே fathoms ஆழ்ம்தான் இருக்குமாம்.

april மாதமும், may மாததில பாதி நாட்களும் தாம் அவுங்க முத்துக்குளிக்கிற நேரமாம். சரியா அந்தநேரத்தில தங்களோட பெரிய கப்பல்ல கிளம்பி BETTELAR( எந்த இடத்த சொல்றாரோ??) இடத்தில நங்கூரம் போட்டு அங்கிருந்து அருவது மயில் வளைகுடால உள்ளே சிறுப்படகுல போவாங்களாம்.

முத்துக்குளிக்கிறவங்க எல்லாம் கூலிங்கதானாம். இந்த நாப்பது சொச்ச நாளிக்கும் கூலிக் குடுத்து இவஙகள அழச்சிட்டுப்போறது வியாபரிகள் தான். இதுல கிடைக்கிற முத்துல பத்துல ஒரு பங்கு ராஜாவுக்கு.
சிறுசிறு படகுலப்போய் இந்த கூலிகள நாலிருந்து பன்னிரண்டி fathoms ஆழம் கடல்ல முழ்கி கிடைக்கிற முத்துகள இடுப்புல இருக்கிற சுருக்கு பைல போட்டு, தம் பிடிக்க முடியலனா மேல வந்து முச்சிவிட்டு திருப்பவும் முச்ச அடச்சி ஒரு ஜம்.

நிறக. இது சுவாரசியமா இருந்த சொல்லுங்க தொடரலாம் :-)

முடிக்கிறதுக்கு முன்னே..
நரேந்திரன் கட்டுரையின் கடைசி பத்தி..

மார்கோ போலோ எழுதியவற்றை அனைவரும் நம்பி விடவில்லை. வெனிஸ் நகரத் தெருக்களிலே அவர் நடந்து செல்கையில், சிறுவர்கள் அவரைப் பின் தொடர்ந்து, 'மார்கோ போலோ இன்னொரு பொய் சொல்லு! ' என்று கேலி செய்வார்களாம். மார்கோ போலோ சொன்னவை அனைத்தையும் பனிரெண்டாம் நூற்றாண்டைச் சாதாரண வெனிஸ் நகரத்து மனிதர்களால் புரிந்து கெ ாள்ள இயலவில்லை. அவரின் மரணத்திற்குப் பின்னால் (ஜனவரி 8, 1324) வெனிஸ் நகரக் கோமாளிகள் மார்க்கோ போலோவைப் போல உடையணிந்து, நம்பவியலாத பல கதைகளைச் சொல்லித் திரிந்தார்களாம்.

மரணப்படுக்கையில் இருந்த மார்க்கோ போலோவை அணுகி, 'இப்பொழுதாவது நீங்கள் சொன்னவை அனைத்தும் பொய் என்று உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்; அப்பொழுதான் உங்களின் ஆத்மா சாந்தியடையும் ' என வேண்டிய அவரின் நண்பர்களுக்கு அவர் சொன்ன, 'I have not told half of what I saw ' என்ற பதில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது.

Wednesday, April 19, 2006

ஓட்டு போடுவதற்கு முன்

உங்கள் தொகுதில் உள்ள வேட்பாளர்களை பற்றிய விவரங்களை முடிந்த அளவுக்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.

பழய ரவுடி, அடியாள் போன்ற வேட்பாளரை தவிருங்கள். வேறு வழியே இல்லையா, 49ஒ பிரிவை பயன்படுத்துங்கள்.

ஏற்கனவே அரசியலில் பொது வாழ்வில் உள்ளவரா, அவரோட செயல்பாடுகளை நினைவில் கொள்ளுங்கள்.

கட்சி அபிமானத்தைவிட உங்க தொகுதி வேட்பாளருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

எளிதில் அனுககூடிய வேட்பாளரா என்றுப் பாருங்கள்

நல்ல பேச்சாளரை விட செயல்ப்படுவரை தெரிவு செய்யுங்கள்.

நடிகர் நடிகை என வெறும் கவர்ச்சிக்கு மட்டும் அதரிக்காதிர்கள்.

ஒட்டு போடுவதற்காக கொடுக்கும் குடம், பணம் என்று எதுவானாலும் வாங்கி கொள்ளுங்கள், ஆனால் ஒட்டு அதன் பொருட்டு போடாதிர்கள்

எதிர்த்து ஓட்டு போடுவதற்கு பதில் ஆதரித்து ஓட்டு போடுங்கள்.

கண்டடிப்பாய் ஓட்டு போடுங்கள்.

சோறு

இருக்கும் சில்லரையல்லாம் கொடுத்து
வறுத்த சோறு வாங்கி திரும்புகையில் அவன்

சில்லரைக் கேட்டு கையெந்தியவனிடம்
இயலாமையாய் சோற்றைப்பகர வினவியபோது
மறுதலித்தான் பசியோடு
தனக்கு சோறுப் பிடிக்காது என்று

வருடங்களுக்கு முன் நடந்தவைதான், இன்றும்
நினைவாடுகிறான் என்னோடு.

ஒரு மதியம் புழுக்கத்தால்
வெளியே அமர்ந்து சோறு உண்ணுப்போது
வருகிறான் அவன் தன் வழி தொலைத்து
யாரையும் அறிந்திருக்காமல்.

தன்மானம் விழுங்கி, என் கண்களை தவிர்த்து
ஈனக்குரலில் பகருகிறான் தன் கழிவிரக்கத்தை என்னோடு
தன் வயிறு கடைவதையும், பாதம் எரிவதையும்
பசியாரத அவனின் பல இரவுககளையும்.

என் சோற்றில் பங்குதர முன்வந்தபோது நன்றியுரைத்து
மறுதலித்தான் தனக்கு சோறுப் பிடிக்காது என்று.

சோகமாக நின்ற அவனைய பார்த்து புன்னகைத்தேன்
என் உண்மையான அவனுக்கான் அக்கரைய உணர்த்த
இருவருக்கும் போதுமானளவு இருக்கிறது என்றும்
வேண்டாம் என்றான்
தனக்கு சோறுப் பிடிக்காது என்று.

அதன்பின் அவனை அங்கும் இங்கும் பார்க்குமோதல்லாம்
அவன் சில்லரை யாசித்தான்
அவனுக்காக சிறு பிரத்தனைகள் செய்தேன்
அவன் பசிகளற்ற இரவுகளுக்காகவும்
என் அவனுக்கான் அக்கரை அவன் உணரவும்

தெருக்களிலே உறங்குவதால் அவனக்கு
வருடங்களைவிட வயது கூடியது
அவன் வயிறு படாய்படுத்தினாலும் அவன் சோறு
உண்ணத் தாயாரில்லை.

எது அவனின் மறுதலித்த காரணி
சிறு வயதில் எப்பொதும் உண்ட சோறா?
பசிக் கொடுமையை விட அவனின் மகிழ்சியற்ற வாழ்வின் சோகமா?
அல்லது இதுபோலவா!

வாழ்வில் எல்லாம் இழந்தாலும்
தான் என்ன உண்ணவேண்டும் என்பதை தெரிவு செய்யும்
உரிமையும் சுதந்திரமுமா?
அதன் பொருட்டே
தனக்கு ஒவ்வாவது சோறு என்றதும்.

Tuesday, April 18, 2006

மாநில சுயாட்சி, திமுக, என் சந்தேகங்கள்

திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட மாநில சுயாட்சி சாத்தியமா?

ஜிவ நதிகள் இல்லாத தமிழகத்தில், மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பக்கிட்டின் நிலை என்ன?

மொழி, இனம் என பல வகையில் உணர்ச்சிவயபடும்மக்களுக்கிடையே மாநிலங்களின் உறவுகள்?

ஊழல் மலிந்த நிர்வாக இயந்திரங்களிடம் அதிக அதிகாரம்?

Monday, April 17, 2006

சிறு நரிகளுக்கு நாட்டாமை?

சூது,வஞ்சகத்தின்
இருப்பிடமாக தெரிகின்றன
மனிதர்களின் கணகளுக்குக்
சிறு நரிகள்.

எதிரி, நன்பன்
வஞ்சகங்களின் உரையாடல்களில்
எப்படியாவது நுழைந்துவிடுகிறது
சிறு நரிகள்.

சாயம் வெளுத்துப்போச்சு டும் டும்
என சாயம் புசியவர்களின்
கேலிப் பொருளாய்
சிறு நரிகள்.

காடுகளில் பெருச் சிங்க, புலி
கூட்டங்களின் ஊடே இரைத் தேடும்
சிறு நரிகளுக்கு ஏதிராய
எராளமாய் பழமொழிகள்.

நரிக்கு நாட்டாம வந்தா?
என்று கூடக் கேட்கிறார்கள்.
தேவைதானா சிறு நரிகளுக்கு
நாட்டாமை?

Friday, April 07, 2006

கலர் டிவி

பகுத்தறிவு கடையில்
இலவசமாய் கலர் டிவி
கொள்கைகள் மற்றுமே விற்றக்கடையில்
கலர் டிவி அதுவும் இலவசமாய்
எங்கும் கேள்விக் குரல்கள்

திரையும், திரைநடிகர்களுயும்
பகுத்தறிவு கடைப் பரப்பியதுப் போல்
இது காலத்தின் கட்டாயம்
உரத்த எடுத்துரைத்தார்
பகுத்தறிவு கடைத் தலைவர்

பழுத்த, நுகர்வோரின் நாடியறிந்த
தலைவரின் சொற்படி இனிதே முடிந்தது
இலவச கலர் டிவித் திருவிழா
விவரமயறிந்துவர அனுப்பினார் தலைவர்
வந்ததது இப்படி

கலர் டிவிதான், ஆனா
கறுப்பும் சிவப்பும் தான் மிகையாய்
எப்போதாவது மஞ்சள் கலரும் உண்டு
ஆனால் என்றும் பச்சை வருவதில்லை

டிவியில் வரும் நிகழ்ச்சிகளின் தரம்?
அதில் பகுத்தறிவின் தாக்கம்?
எழுந்தது சில கேள்விகள்
தலைவருக்கு தெரியும் கலர்தான் மக்களுக்கு
முக்கியம் நிகழ்ச்சிகளை விட

கலர் டிவி

பகுத்தறிவு கடையில்
இலவசமாய் கலர் டிவி
கொள்கைகள் மற்றுமே விற்றக்கடையில்
கலர் டிவி அதுவும் இலவசமாய்
எங்கும் கேள்விக் குரல்கள்

திரையும், திரைநடிகர்களுயும்
பகுத்தறிவு கடைப் பரப்பியதுப் போல்
இது காலத்தின் கட்டாயம்
உரத்த எடுத்துரைத்தார்
பகுத்தறிவு கடைத் தலைவர்

பழுத்த, நுகர்வோரின் நாடியறிந்த
தலைவரின் சொற்படி இனிதே முடிந்தது
இலவச கலர் டிவித் திருவிழா
விவரமயறிந்துவர அனுப்பினார் தலைவர்
வந்ததது இப்படி

கலர் டிவிதான், ஆனா
கறுப்பும் சிவப்பும் தான் மிகையாய்
எப்போதாவது மஞ்சள் கலரும் உண்டு
ஆனால் என்றும் பச்சை வருவதில்லை.

டிவியில் வரும் நிகழ்ச்சிகளின் தரம்
அதில் பகுத்தறிவின் தாக்கம்
எழுந்தது சில கேள்விகள்
தலைவருக்கு தெரியும் கலர்தான் மக்களுக்கு
முக்கியம் நிகழ்ச்சிகளை விட

Friday, March 31, 2006

பூசைக்கு வந்த பூ

பூசைக்கு வந்த பூ தான்
கொஞ்சம பிச்சிப் போடாமல்
அப்படியே போட்டுவிட்டுப் போங்கள்
உங்களுக்கு புண்ணியம கிட்டும்.

யானைமுகத்தினனை வேண்டிக்கொள்ளுங்கள்
உங்கள் வேண்டுதல் நிறைவேறட்டும்
ஆனால் அடுத்தமுறை தேங்காய சிதறடிப்பதாய்
வேண்டிக்கொள்ளாதிர்
உங்களுக்கு புண்ணியம கிட்டும்.

ஐய்யனாருக்கு படையல் போட்டு பிள்ளை வரம்
வேண்டிக்கொள்ளுங்கள்
முத்துக்களாய் பிறக்கட்டும் பிள்ளைகள் பண்ணிரண்டு
ஆனால் ஆட்டுக்கடவை விட்டுவிடுங்கள்
உங்களுக்கு புண்ணியம கிட்டும்.

Wednesday, March 29, 2006

விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம்.

திமுக கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் இடம்பெற்றுள்ளதை பெரிதும் வரவேற்கின்றேன்.

இது மிகவும் அவசியமானதும் அவசரமானதும்க்கூட

அதே சமயதில் காப்பீட்டு கழகங்கள் (பொது மற்றும் தனியார்) இதனை லாப நோக்கில் பெரு விவசாயிகளுக்கு மட்டும் எடுத்து செல்வதை தவிர்த்து சிறு விவசாயிகளும் பயன்பெறுமாறு செய்யவேண்டும்.

சிறுவிவசாயிகளுக்கு இதுப்பற்றியான பயன்ப்பாடு பொது ஊடகளின் முலம் அறியத்தர வேண்டும்.

இது வெறும் தேர்தல் அறிக்கையோடு நின்றுவிடக் கூடாது.

நம்பிக்கையோடு.

Monday, March 27, 2006

கிராமங்கள் மாறிவிட்டதாம், யார் சொன்னது

இன்றும் காது நீண்ட கிழவிகள்
பாக்கு இடித்துக்கொண்டு திண்ணையில் தானே குந்தியிருக்கிறார்கள்.

ஒண்ணுக்கு அங்கேயிம்,
ரெண்டுக்கு கொல்லைக்கும் தானே.

எட்டரை மணி வண்டி எனப் பெயர்கொண்ட பேருந்து
சரியாய் ஒன்பதரைக்குத்தானே வருகிறது.

பெரியவர் மகன் சின்னவர் தானே
பஞ்சாயத்துத் தலைவர்.

மாறிவிட்டதாம், யார் சொன்னது
கிழவீதியில் பூக்கும் நந்தியாவட்டை
இன்னும் சிவன் கோவில் வருவதில்லை.

மேலவீதியில் மட்டுமே மாடி வீடுகள்
அங்கு அப்பன், பூட்டன் காலத்திலிருந்து
'அவர்கள்'த்தான் மாட்டுக்காரன்.

எல்லாம் அப்படியேத்தான்.
மாறிவிட்டதாம்யார் சொன்னது.

போன வருசம் பக்கத்து டவுனுக்கு சித்தாள்
வேலைக்குப் போன சவந்தியக்கா

அப்புறம்,ரண்டு வருசம் முன்னாடி வந்த
லிட்டில் பிளவர் பள்ளிக்கூடமும் அந்த
சாமியாரையிம் தவிர

எல்லாம் அப்படியேத்தான்.
மாறிவிட்டதாம் யார் சொன்னது.

Thursday, March 23, 2006

மிண்டும் பசுமை புரட்சி

படிப்பினைகள்

கோடிக்கனக்கான மக்களின் பட்டினியை ஒழிக்க தலைவர்களின் சொற்தொடர் தான் இந்த "பசுமை புரட்சி - 2". ரசயானங்களின் மாயங்களாளும்,தாவிர-ஜீன்களின் ஜாதகங்களை மாற்றி அமைக்கும் புதிய இயலினாலும் உணவு உற்பத்தியை பெறிக்கி பட்டினிச் சாவுகளற்ற தேசம் செய்வோம்.

உலகை இந்த பட்டினிச் சாவில் இருந்து உய்விக்க இவர்கள் வகுக்கும் வழிகளில் ஒன்று, பூச்சிக் கொள்ளி ரசயானங்களை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவங்கள் இந்த புதிய தாவிர-ஜீன் இயல் நிபுனர்களாக உருமாரி உய்விக்கும் விவசாய பொருள்களுக்கு தாரளச் சந்தை ஏற்படித்தித் தருவதுதான்.

ஆனால்,முதல் பசுமை புரட்சியின் முழக்கமான, "பசுமை புரட்சியின் இந்த மநதிர விதைகள் தான் பட்டினிச் சாவுகளை பூட்டும்ச் சாவி" என்னவாயிற்று. இன்றும் பட்டினிச் சாவுகள் நிறைந்த உலகம்ந்தான் இது.

60வதுகளின் முடிவில், முன்றாம் நிலை உலக நாடுகள் பட்டினிச் சாவுக்கொடுமைகளை தடுக்க, பிரச்சனையின் வேர்களை அராய்ந்துக் களைய சாவுக்கொடுமைகளின் திவிரம் இடங்கொடுக்காமையால். அவசர அவசரமாய் அப்போதைக்கு செய்க்கூடிய உணவு உற்பத்திய மிகஅதிகப்படுத்த இந்த மந்திர விதைகளை விட்டால் வேறுவழில்லை. இந்த விதைகளும் அதற்கான விவசாய முறைகளும் மிகப்பெரிய மாற்றங்களை உணவு உற்பத்தியில் ஏற்படித்துயதான். ஆனா அதன் பின்விளைவாக நாம இழந்தது விவசாயத்தின் அதார வளமான நிலத்தையம் நிலத்தடி நீரும். கொஞசம் அதிகமான விலைதான்.

சரி இந்த பசுமை புரட்சி உலக பட்டினிச் சாவுகளை நிறுத்திச்சான்னுக் கேட்டா, இல்லை. வருத்தமான உண்மை. மிகப் பெரிய அளவில உணவு உற்பத்தி அதிகமாச்சித்தான். உணவுப் பொருட்கள் அதிகமான பட்டினி குறையனும்தானே ஆனா இல்லை. ஏன் மாற்றம் வரவில்லை, அடிப்படையான காரணம் தாங்க, வறுமைக் கோட்டுக்கு கிழ இருக்கிற மக்களிடம் வாங்கும் சக்தி சரிசமமா இல்லைங்க அதான். எவ்வளவதான உணவு உற்பத்திய பெருக்கினாலும். அதை வாங்க அந்த மக்களின் தரம் உயர்த்தபடாவிடில், இந்த பட்டினிச் சாவுகள் தொடரும் :(

Tuesday, March 21, 2006

அட நம்ம பரட்டை

நம்ம பரட்டை மறுபடியும் இப்போ மக்கள் மத்தியிலே விவாதப் பொருளாகிவிட்டார்.

அந்த பரட்டைப் பற்றிய கதைதாங்க(கற்பனையான) இது.

இந்த கதை ஆரம்பிக்கும்போது பரட்டை அவ்வளவு பரபரப்பான ஆளு இல்லை.அவ்வளவா படிப்பும் இல்லை, வருத்தமும் இல்லை. ஒரு வேலை இருந்தது, சாப்பாடு, விரும்பிய அளவு புகை, தூக்கம், வேலை அவ்வளவுதான். குறிப்பிட்டு சொல்லனும்னா கொஞ்சம் சுறுசுறுப்பான ஆளு.

சில நாளா தலைக்கு எண்ணை வைக்க மறந்ததுதிலிருந்து இப்படி ஆனது அவன் தலை பரட்டையா. வார முடியாத அளவுக்குப்போனப் பிறகு கையால கோதவேண்டியதா இருந்தது.ஏன் இப்படின்னு கேட்டா, நாலு பேரு ரசிக்கிறாங்கன்னு பதில். நிசந்தான், நாலு எட்டாச்சு, எட்டு பத்தாச்சு.கூட்டாளிங்க சொல்ற மாதிரி லேசா சினிமா ஆசை வந்தது.

சினிமாவுக்கும் வந்தாச்சு, முதல்ல அந்த பரட்டை தலைக்கு இருந்து ஈர்ப்பை மறந்து கொஞ்சம் எண்ணைய தலைக்கு காட்டுனவுடனே வெளுத்துப்போனது. சரின்னு இனிமே பரட்டையோட மட்டும்தான் ஆனப் பிறகு பரட்டையே பிரபலமடையந்தது.

மக்கள் பரட்டை சினிமாவுக்கு லஞ்சம் கொடுத்து பார்கக வந்தனர். பரட்டையோட வருமானம் அதிகரித்தது, கோடீஸ்வரன் ஆனா(ர்).
பரட்டை படத்தை பார்ககத்தான் எவ்வளவு ரசிகர்கள். படங்கள் திருவிழா நேரங்கள்ள வெளியிடுவது போயி பரட்டை படம் வெளியிடும்

நேரம்மேல்லாம் திருவிழாவானது. கவிஞர்கள் அவருக்காக பாடல் எழுதினர். பிரபலமான பத்திரிக்கைகள் பரட்டை வாழ்கை வரலாற்றை எழுதி பணமும் புகழும் சம்பாதித்தனர்.

அனைத்து முக்கியமான் நிகழ்வுகள் குறித்து பரட்டையின் கருத்துகள் கேட்டு பத்திரிக்கைகள் பிரசுரித்தன.

பரட்டை அதைப்பற்றி இப்படி சொன்னார்.., இதைப்பற்றி அப்படி சொன்னார்... இப்படியாக எதைப்பற்றியும் எல்லாவற்றைப் பற்றியும் பரட்டை எதாவது சொல்லியாக வேண்டியிருந்தது.

இப்போ பரட்டைய தங்கள் பககம் வலைக்க எல்லோரும் யோசிச்சாங்க. எல்லோருக்கும் முதலில் எதிர்கட்சித் தலைவர் பரட்டைக்கு பட்டம் கொடுத்து விழா எடுத்தார்.விழாவில தலைவர் செல்லமாக பரட்டை தலைய கோத அது மறுநாள் தலைப்பு செய்தியானது. பத்திரிக்கைகள் விற்பனை அதிகரித்தது, பிறகு எல்லா கட்சிகளும் பரட்டையயை தங்கள தளபதி என்றது.

குழ்ப்பமான பரட்டை தன் நெருக்கமான சானக்கிய பத்திரிக்கையாளரைய கலந்தாலோசித்தார்.அந்த சானக்கியர் பரட்டையயை அரசியல் ஞானம் உள்ளவராக, திர்கதரிசியாக பலக்கட்டுரைகள் வரைய்ந்தார்.

ஞானம்,திர்கதரிசி, அரசியல் ரொம்ப குழம்பிப்போனார் பரட்டை.இதற்கு இடையில் நதிநீர் பிரச்னைப்பற்றி பத்திரிக்கைகள் பரட்டையிடம் கருத்து கேட்டன. கருத்துககு எதிர்வினை எற்பட்டது. பரட்டையின் வேர் அறாயப்பட்டது. எதிர் குழுமம் பலப்பட்டது. பரட்டை கலங்கி ஸ்டன்ட்டு கலைஞகர்களிடம் அலோசித்து அடையாள உண்ணாவிரதம் இருந்தார். எல்லா பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி தலைப்புச் செய்தியாக முதல்ப்க்கத்தில் வெளியானது. மத்திய அரசு பரட்டைக்கு உயரிய விருது கொடுத்த்து. இப்போது என்ன செய்வது மக்கள் மனதில் ரொம்ப குழப்பம் ஏற்பட்டது.

கொஞச நாள் பரட்டைப் பற்றி எந்த செய்தியும் இல்லை, பரட்டையின் இருப்பை மக்கள் மறந்துப்போயின.

Sunday, March 19, 2006

முகமுடிகளற்று

ஒரு நாள் அணியத்தர முகமுடிகளற்று
நம்பிக்கைகள் உடைபட்டு
அவளுக்கான அவளுடைய இடத்தை அறியும் போது
அவள் தன்னை வெளிப்படுத்தகூடும்
தன் முகத்தை முகமுடிகளற்று.

Tuesday, March 14, 2006

கனிஷ்சா சதுரமும், கடவுளரும்


மனிதனுடைய அடிப்படை கட்டமைப்பே மாதிரிகை(patterns) அடையாளப்படித்திக்கிறதும், அதை தேடுவதும் தான். நம்முடைய மூளை நரம்புகளில் பின்னப்பட்டு செய்தியாய் இருப்பதும் இந்த மாதிரிகை(கள்) தான். இந்த மாதிரிகை(கள்) முற்றிலும் சரியானவையாக இருக்க அவசியமில்லை, ஆனா ஒரு ஒழுங்குக்கு உட்பட்டவையாக இருக்கும்.

இது ஏன்னா நாம எப்பவும் உலகத்தை ஒரு ஒழுங்குக்கு உட்பட்டவையாக பார்க்க விரும்புறோம், அது ஒழுங்கற்றதாக கூட இருக்கலாம்.ஆனா அதற்கு முறனா இயற்கை நம்மை இப்படி பரிணாமபடுத்தியிருக்கலாம், எதிலும் ஒரு ஒழுங்கை பாரு அதை இல்க்கமிட்டு அடையாளப்படுத்து, சேமி. இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடையாளப்படுத்தபட்ட அடையாளங்களாக இந்த கடவுளர்களும் இருக்கலாம்.

Bart Kosko அவருடைய Fuzzy Thinking புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கனிஷ்சா சதுரதுல( Kanizsa ) தெரியுர மாயச் சதுரம் போல கடவுளும் இருக்கலாம். அவரின் கூற்றுப்படி, கடவுள் , ஒரு பொய்யான அண்டத்தில் உள்ள புழுதி மண்டலத்தின் பொய்யான கோளில் ஜிவிக்கும் ஒரு உயிரின் மூளையின் நரம்புகளால் பின்னப்பட்ட ஒரு புல்லறிவு (false knowledge).



நம்முடைய மூளையின் இந்த மாதுரிகை ஏற்படுத்தும் புல்லறிவுக்கு உதாரணம் கனிஷ்சா சதுரம். நேர்கோணங்களில் வெட்டபட்ட நான்கு வட்டங்கள் ஏற்படுத்தும் பொய்யான எல்லைக்கோடுகளும் அதன் நேர்மறையான் உட்புற வண்ணமும் அங்கு இல்லாத சதுரத்தை நம்மூளை மட்டும் அடையாளம் காண்கிறது.

நம் அடிப்படை கட்டமைப்பின்படி அங்கு இல்லாத சதுரத்தை இல்லை அப்படின்னு சொல்றது கடினம்.கடவுள் விடயத்தில் கூட இந்த புல்லறிவு உண்மையாக இருக்கலாம்.இந்த அண்டம் எற்படுத்தும் பொய்யான எல்லைகளும், அதன் பிரகாசமான உள்வெளியும் உருவகிக்கும் கடவுளரின் பிம்பத்தை நம்மில் பலரால் பார்க்காமல் இருக்கமுடியாது.

Reference :

Why People Believe in God An Empirical Study on a Deep Question
by Michael Shermer
Nov, 1999

Monday, February 27, 2006

ஃ - அய்தஎழுத்து

ஏன்? இந்த அய்தஎழுத்து நாம அவ்வளவாக பாவிக்கிறது இல்ல? என் நினைவிக்கு வருவது அஃது, இஃது, எஃகு தான். அதுவும் இப்போ யாரும் பாவிக்கிறது இல்ல.

அப்புறம் இந்த F,G,H,X,Z தமிழ்ல வரிவடிவம் இல்லாததாலFather க்கு ஃபாதர் அவ்வளவுதான்.

இது ஏன்? ஏன்? யாராவது சொல்லுங்க அப்பூ :(

Tuesday, February 21, 2006

Planes, Trains, Automobiles மற்றும் அன்பே சிவம்.

'பிளேன்ஸ் டிரைன்ஸ் அண்டு ஆட்டோ மொபைல்ஸ்' என்ற ஆங்கில படம். 1987ல் வெளிவந்தத பழைய படம். நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் மார்டிண் மற்றும் ஜான் காண்டி நடித்தது.

தொழில்நிமித்தமாக நியூயார்க் செல்கிற, ஒரு சிடுமூஞ்சி பிசினஸ் எக்ஸிக்யூடிவ். தன் குடும்பத்துடன் 'Thanks Giving' கொண்டாட திரும்ப சிக்காகோ செல்கிறார். ஆனால் ஒழுங்காக போய் சேர்ந்தாரா ? என்பதுதான் கதை.

நியூயார்க்கில் டாக்ஸி பிடிக்கிறதுல ஆரம்பிக்கிறது சோதனை. பிடிச்ச டாக்ஸியில் வேரொத்தர் ஏற கடுப்பாகி ஒரு வழியாக விமான நிலயத்துக்குப் போன அங்க விமானம் தாமதமாகிறது. பொததற்கு அங்க கூடவே ஒரு லொடலொட அதிகபிரசங்கி. அளவுக்கதிகமான அன்போட பழகுற சக ப்ரயாணியாக ஜான் காண்டி. அவரோட அன்பு தொல்ல தாங்காம கழட்டிவிட ஸ்டீவ் செய்யற ஒவ்வொரு முயற்ச்சியும் தோல்விதான்.

படம் நெடுக இவ்விருவரின் முறன் நல்ல நகைச்சுவை. முடிவில் நம்ம 'சிடுசிடு' ஸ்டீவ் ஜானின் அன்பை புரிஞ்சிக்குறார். அப்புறம் என்ன 'Thanks Giving' க்கு ஒழுங்கா வூடு போய்ச்சேருகிறார்.

Sunday, January 22, 2006

The Alchemist
Paulo Coelho

படித்தது

கனவுகள், பட்ச்சியின் குறியிடுகள், சகுனங்கள், சாகசங்கள் என ஒரு பரந்த அறிவும், ஆளுமையும் உள்ள முனியின் எதிரொலியாக வாசகனை புகைப்போல சுழ்ந்து கொள்கிறது, "The Alchemist" புதினம்.

கனவும், கனவுகளை விடாது துறத்தும் சந்த்யகோ ங்கற பையன் முலமா நம்மோட உண்மையான மகழ்ச்சியும், முழுமையும், படைப்பின் நோக்கமாக நமக்கு விதிக்கப்பட்டவைகளை கனவுகளின் ஊடாகவும், நிகழ்வுகளாகவும், சகுனங்களாகவும் இயற்கை அடையாளம் காட்டுங்கறத இந்த நாவல் நெடுக சம்பவங்களா அடிக்கி இருக்குறார் நாவலாசிரியர்.

சந்த்யகோவின் எகிப்து பிரமிட் புதையல் கனவும், அந்த தேடல் பயண நிகழ்வுகளின் முலம், நம் வாழ்வின் கனவுகளும், அதை அடைய படும் இடர்கள், பட்டறிதல், பயணம், உலகம் பற்றியான புரிதல்,சுயத்தேடல் என வாழ்வியல் தத்துவங்கள் எளிமையான நடையில் கதை நெடுக.

சான்டியகோ, அவனோட புதையல் தேடல்லில் உலகத்தின் சிறப்பையும், அற்புதமான மனிதர்களையும், *அல்கெமிஷ்ட்* 'யும் சந்திக்கிறான். முடிவில் புதையல அவனக்கு பிடித்த அந்த பழைய சர்ச் 'லே கண்டு எடுக்கிறான்(treasure lies where your heart belongs).

Thursday, January 19, 2006

புதிதாக பறவைக்கூடு

நேற்று, வெட்டுவதற்காக குறியிட்ட பழய மரத்தில்
இன்று, புதிதாக பறவைக்கூடு

Wednesday, January 11, 2006

சாலையோரத்தில் காலணிகளை விட்டுவந்தேன

பெயர்களை மறந்தேன்
காற்சட்டை பைகளை காலிசெய்தேன்
சாலையோரத்தில் காலணிகளை விட்டுவந்தேன்
பின்னிரவில் கடிகாரத்தின் முட்கள் எதிர் திசை சுழற்சியில்
குடும்ப புகைப்படத்தில்
மீண்டும்
என்னை சிறுவனாக கண்டேடுத்தேன்

(மொழிபெயர்பு மட்டுமே நான்.)