மனிதனுடைய அடிப்படை கட்டமைப்பே மாதிரிகை(patterns) அடையாளப்படித்திக்கிறதும், அதை தேடுவதும் தான். நம்முடைய மூளை நரம்புகளில் பின்னப்பட்டு செய்தியாய் இருப்பதும் இந்த மாதிரிகை(கள்) தான். இந்த மாதிரிகை(கள்) முற்றிலும் சரியானவையாக இருக்க அவசியமில்லை, ஆனா ஒரு ஒழுங்குக்கு உட்பட்டவையாக இருக்கும்.
இது ஏன்னா நாம எப்பவும் உலகத்தை ஒரு ஒழுங்குக்கு உட்பட்டவையாக பார்க்க விரும்புறோம், அது ஒழுங்கற்றதாக கூட இருக்கலாம்.ஆனா அதற்கு முறனா இயற்கை நம்மை இப்படி பரிணாமபடுத்தியிருக்கலாம், எதிலும் ஒரு ஒழுங்கை பாரு அதை இல்க்கமிட்டு அடையாளப்படுத்து, சேமி. இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடையாளப்படுத்தபட்ட அடையாளங்களாக இந்த கடவுளர்களும் இருக்கலாம்.
Bart Kosko அவருடைய Fuzzy Thinking புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கனிஷ்சா சதுரதுல( Kanizsa ) தெரியுர மாயச் சதுரம் போல கடவுளும் இருக்கலாம். அவரின் கூற்றுப்படி, கடவுள் , ஒரு பொய்யான அண்டத்தில் உள்ள புழுதி மண்டலத்தின் பொய்யான கோளில் ஜிவிக்கும் ஒரு உயிரின் மூளையின் நரம்புகளால் பின்னப்பட்ட ஒரு புல்லறிவு (false knowledge).
நம்முடைய மூளையின் இந்த மாதுரிகை ஏற்படுத்தும் புல்லறிவுக்கு உதாரணம் கனிஷ்சா சதுரம். நேர்கோணங்களில் வெட்டபட்ட நான்கு வட்டங்கள் ஏற்படுத்தும் பொய்யான எல்லைக்கோடுகளும் அதன் நேர்மறையான் உட்புற வண்ணமும் அங்கு இல்லாத சதுரத்தை நம்மூளை மட்டும் அடையாளம் காண்கிறது.
நம் அடிப்படை கட்டமைப்பின்படி அங்கு இல்லாத சதுரத்தை இல்லை அப்படின்னு சொல்றது கடினம்.கடவுள் விடயத்தில் கூட இந்த புல்லறிவு உண்மையாக இருக்கலாம்.இந்த அண்டம் எற்படுத்தும் பொய்யான எல்லைகளும், அதன் பிரகாசமான உள்வெளியும் உருவகிக்கும் கடவுளரின் பிம்பத்தை நம்மில் பலரால் பார்க்காமல் இருக்கமுடியாது.
Reference :
Why People Believe in God An Empirical Study on a Deep Question
by Michael Shermer
Nov, 1999
8 comments:
சிந்தனை ஒத்திருப்பதால் என் வலைப்பூவுக்கு அழைக்கின்றேன்
Please read this pdf also
http://images.ucomics.com/images/pdfs/sadams/godsdebris.pdf
கடவுள் கடந்தும் இருக்கிறார்; உள்ளாகவும் இருக்கிறார். அதனால் கடவுள் என பள்ளிகளில் சொல்லித்தருவார்கள்.
கொஞ்சம் முதிர்ந்தவர்(அறிவில்) கடத்துக்குள் இருப்பவன் கடவுள் என்பார். அதாவது வெளியில் இல்லையாம்.
இயற்கைதான் உண்டு என்பான் நாத்திகவாதி.
சக்தி{வி(உ)ந்து சக்தி} தான் அண்டத்தை இயக்குகிறது. அந்த சக்தி இல்லையேல் நாமில்லை என்பான் ஞானி.
"இருக்குமென்பார் இருக்காது"
தங்களின் சதுரம் கூறும் சங்கதியும் அதுதானே?
ராசா,
பார்த்தேன்..அங்கே தூக்குனதை இங்கே விளக்கமாக இட்டிருக்கிறீர்கள்.முதல் இரண்டு பத்திகளில் சில தெளிவுகள் கிடைத்தாலும் படம் போட்டு விளக்குவது என்பது குழப்பி பயமுறுத்தி புரிய வைக்கும் ரகம்...
//supersubra //
நன்றி, உஙக pdf படிக்கிறேன்.
// ஞானவெட்டியான் //
அங்கு இல்லாத கட்டத்தை இருக்குற மாதிரி காட்டுவது நம்ம அறிவு இயங்குற முறை.
// முத்து ( தமிழினி) //
ஆமாம் முத்து தெளிவா இல்லதான், என்ன பன்றது நம்ம சரக்கு அவ்வளவுதான் :-) :-)
உஙக கருத்துக்களுக்கு நன்றி
//சீரியஸா எடுத்துகிட்டீங்கன்னு நினைக்கிறேன்..i did not mean it..//
இல்லைங்க எனக்கும் பட்டது அதான், smiley கவனிக்கலையா நிங்க. :-)
ராசா,
ஸ்மைலியை பார்த்தேன்..
ஆனால் விஷயம் ரொம்ப சிக்கலானது என்பது உண்மைதான். அவசரப்பட்டு வருத்தப்பட்டு வீட்டீர்களோ என்று நினைத்தேன்.நல்லவேளை...
ஆமாம் இந்த அல்கெமிஸ்ட் புத்தகத்தை பத்தி எல்லோரும் சொல்றீங்களெ..அவ்ளொ நல்ல புத்தகமா?
ஏதாவது தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளதா? ஹி ..ஹி
நம்பிக்கைகள் எல்லாமே மனசு தரும் மாய பிம்பங்கள்தானே..
இந்த பக்கம் எட்டிப்பாத்ததற்கு நன்றி தருமி.
Post a Comment