அட நம்ம பரட்டை
நம்ம பரட்டை மறுபடியும் இப்போ மக்கள் மத்தியிலே விவாதப் பொருளாகிவிட்டார்.
அந்த பரட்டைப் பற்றிய கதைதாங்க(கற்பனையான) இது.
இந்த கதை ஆரம்பிக்கும்போது பரட்டை அவ்வளவு பரபரப்பான ஆளு இல்லை.அவ்வளவா படிப்பும் இல்லை, வருத்தமும் இல்லை. ஒரு வேலை இருந்தது, சாப்பாடு, விரும்பிய அளவு புகை, தூக்கம், வேலை அவ்வளவுதான். குறிப்பிட்டு சொல்லனும்னா கொஞ்சம் சுறுசுறுப்பான ஆளு.
சில நாளா தலைக்கு எண்ணை வைக்க மறந்ததுதிலிருந்து இப்படி ஆனது அவன் தலை பரட்டையா. வார முடியாத அளவுக்குப்போனப் பிறகு கையால கோதவேண்டியதா இருந்தது.ஏன் இப்படின்னு கேட்டா, நாலு பேரு ரசிக்கிறாங்கன்னு பதில். நிசந்தான், நாலு எட்டாச்சு, எட்டு பத்தாச்சு.கூட்டாளிங்க சொல்ற மாதிரி லேசா சினிமா ஆசை வந்தது.
சினிமாவுக்கும் வந்தாச்சு, முதல்ல அந்த பரட்டை தலைக்கு இருந்து ஈர்ப்பை மறந்து கொஞ்சம் எண்ணைய தலைக்கு காட்டுனவுடனே வெளுத்துப்போனது. சரின்னு இனிமே பரட்டையோட மட்டும்தான் ஆனப் பிறகு பரட்டையே பிரபலமடையந்தது.
மக்கள் பரட்டை சினிமாவுக்கு லஞ்சம் கொடுத்து பார்கக வந்தனர். பரட்டையோட வருமானம் அதிகரித்தது, கோடீஸ்வரன் ஆனா(ர்).
பரட்டை படத்தை பார்ககத்தான் எவ்வளவு ரசிகர்கள். படங்கள் திருவிழா நேரங்கள்ள வெளியிடுவது போயி பரட்டை படம் வெளியிடும்
நேரம்மேல்லாம் திருவிழாவானது. கவிஞர்கள் அவருக்காக பாடல் எழுதினர். பிரபலமான பத்திரிக்கைகள் பரட்டை வாழ்கை வரலாற்றை எழுதி பணமும் புகழும் சம்பாதித்தனர்.
அனைத்து முக்கியமான் நிகழ்வுகள் குறித்து பரட்டையின் கருத்துகள் கேட்டு பத்திரிக்கைகள் பிரசுரித்தன.
பரட்டை அதைப்பற்றி இப்படி சொன்னார்.., இதைப்பற்றி அப்படி சொன்னார்... இப்படியாக எதைப்பற்றியும் எல்லாவற்றைப் பற்றியும் பரட்டை எதாவது சொல்லியாக வேண்டியிருந்தது.
இப்போ பரட்டைய தங்கள் பககம் வலைக்க எல்லோரும் யோசிச்சாங்க. எல்லோருக்கும் முதலில் எதிர்கட்சித் தலைவர் பரட்டைக்கு பட்டம் கொடுத்து விழா எடுத்தார்.விழாவில தலைவர் செல்லமாக பரட்டை தலைய கோத அது மறுநாள் தலைப்பு செய்தியானது. பத்திரிக்கைகள் விற்பனை அதிகரித்தது, பிறகு எல்லா கட்சிகளும் பரட்டையயை தங்கள தளபதி என்றது.
குழ்ப்பமான பரட்டை தன் நெருக்கமான சானக்கிய பத்திரிக்கையாளரைய கலந்தாலோசித்தார்.அந்த சானக்கியர் பரட்டையயை அரசியல் ஞானம் உள்ளவராக, திர்கதரிசியாக பலக்கட்டுரைகள் வரைய்ந்தார்.
ஞானம்,திர்கதரிசி, அரசியல் ரொம்ப குழம்பிப்போனார் பரட்டை.இதற்கு இடையில் நதிநீர் பிரச்னைப்பற்றி பத்திரிக்கைகள் பரட்டையிடம் கருத்து கேட்டன. கருத்துககு எதிர்வினை எற்பட்டது. பரட்டையின் வேர் அறாயப்பட்டது. எதிர் குழுமம் பலப்பட்டது. பரட்டை கலங்கி ஸ்டன்ட்டு கலைஞகர்களிடம் அலோசித்து அடையாள உண்ணாவிரதம் இருந்தார். எல்லா பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி தலைப்புச் செய்தியாக முதல்ப்க்கத்தில் வெளியானது. மத்திய அரசு பரட்டைக்கு உயரிய விருது கொடுத்த்து. இப்போது என்ன செய்வது மக்கள் மனதில் ரொம்ப குழப்பம் ஏற்பட்டது.
கொஞச நாள் பரட்டைப் பற்றி எந்த செய்தியும் இல்லை, பரட்டையின் இருப்பை மக்கள் மறந்துப்போயின.
1 comment:
பக்கம் 5
Post a Comment